சாய் தரம் தேஜ்
சாய் தரம் தேஜ் | |
---|---|
பிறப்பு | 15 அக்டோபர் 1986 ஐதராபாத்து (இந்தியா), தெலங்காணா, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2013 முதல் தற்போது வரை |
சாய் தரம் தேஜ் (Sai Dharam Tej) (பிறப்பு:1986 அக்டோபர் 15) இவர் தெலுங்குத் திரையுலகில் பணியாற்றும் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார்.[1] ரெஜினா கசாண்ட்ரா ஜோடியாக ரவிக்குமார் சவுத்ரி இயக்கிய பில்லா நவ்வு லேணி ஜீவிதம் படத்தில் சாய் தரம் தேஜ் அறிமுகமானார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]சாய் தரம் தேஜ் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி விஜய துர்கா மற்றும் அவரது கணவர் மருத்துவர் சிவ பிரசாத் ஆகியோரின் மகன் ஆவார். பிரபல டோலிவுட் நடிகர்களான நாகேந்திர பாபு மற்றும் பவன் கல்யாண் ஆகியோரின் மருமகனும் ஆவார். இவரது தாய்வழி உறவினர்களான ராம் சரண், வருண் தேஜ், நிஹாரிகா கொனிதேலா ஆகியோரும் டோலிவுட்டில் நடிகர்கள் மற்றும் நடிகைகளாக இருக்கிறார்கள்.[2]
தொழில்
[தொகு]இவர் பில்லா நவ்வு லேணி ஜீவிதம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இருப்பினும் இவர் முதலில் நடித்த முதல் படம் ஒய்.வி.எஸ். சவுத்ரியின் ரே, என்ற படமாகும். இது 2013 இல் நிறைவடைந்தது.[3] இப்படத்தின் வெளியீடு 2015 வரை தாமதமாகி இவரது இரண்டாவது படமாக வெளியிடப்பட்டது. இவரது அடுத்த வெளியீடு 2015 இல் சுப்ரமண்யம் ஃபார் சேல் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றது. 2016ஆம் ஆண்டில் தேஜின் சுப்ரீம் என்ற படம் வெளியானது இதுவும் ஒரு பெரிய வெற்றியாகும். பி.வி.எஸ் ரவி இயக்கிய இவரது ஜவான் படம் 2017 திசம்பர் 1 அன்று வெளியிடப்பட்டது. இந்த படம் விமர்சகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. ஏ. கருணாகரன் மற்றும் கோபிசந்த் மாலினேனி ஆகியோருடன் நடித்த இவரது அடுத்த படங்கள் 2018 இல் வெளியிடப்பட்டு, கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[4][5] இவரது சமீபத்திய வெளியீடான சித்ரலஹரி திரைப்படத்தில் இவர் ஏற்றிருந்த விஜய் கதாபாத்திரம் இவர் நடித்த கதாபாத்திரங்களிலேயே சிறந்தது என்ற விமர்சனைத்தைப் பெற்றது.[6]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Sai Tej Biography"
- ↑ ""Sai with father Dr.Shivaprasad (extreme right), mother Vijaya and brother Vaishnav Tej."". Archived from the original on 2017-02-13. பார்க்கப்பட்ட நாள் 2020-04-27.
- ↑ Rey on Oct 11th as Dusserra gift
- ↑ [trends.gulte.com/2017/08/16/sai-dharam-tej-signs-pawan-kalyan-director Sai Dharam Tej Signs Pawan Kalyan Director]
- ↑ "Who gonna direct Sai dharam Tej?". SMTV24x7. பார்க்கப்பட்ட நாள் 29 May 2018.
- ↑ Chitralahari movie review {3/5}: Sai Dharam Tej, Kalyani Priyadarshan and Nivetha Pethuraj save the day, பார்க்கப்பட்ட நாள் 2019-05-09