நந்தமூரி ஹரிகிருஷ்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நந்தமூரி ஹரிகிருஷ்ணா
Nandamuri Harikrishna
பிறப்பு செப்டம்பர் 2, 1956(1956-09-02)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு 29 ஆகத்து 2018(2018-08-29) (aged 61)
நல்கொண்டா, தெலுங்கானா, இந்தியா
இறப்பிற்கான
காரணம்
வாகன விபத்து
இருப்பிடம் ஐதராபாத்து (இந்தியா), தெலுங்கானா
பணி அரசியல்வாதி, நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1967–1970; 1974–2005
அரசியல் கட்சி தெலுங்கு தேசம்
பெற்றோர் என். டி. ராமராவ்
பசாவராமா
வாழ்க்கைத்
துணை
இலட்சுமி (1973
சாலினி
பிள்ளைகள் ஜானகி ராம்[1]
கல்யாண் ராம்<br /சுகாசினி
ஜூனியர் என்டிஆர்
உறவினர்கள் நந்தமூரி பாலகிருஷ்ணா (சகோதரர்)
நா. சந்திரபாபு

நந்தமூரி ஹரிகிருஷ்ணா (Nandamuri Harikrishna, 2 செப்டம்பர் 1956 – 29 ஆகத்து 2018) தெலுங்குத் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் முன்னாள் ஆந்திரா முதல்வரும் நடிகருமான என். டி. ராமராவின் மகன் ஆவார்.[2]

ஹரிகிருஷ்ணா 1964 ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவரது முதல் படம் சிறீ கிருஷ்ணாவதாரம். இதில் இவர் கிருஷ்ணனாக நடித்தார்.[3] இவருக்கு சிறந்த குணச்சித்திர நடிகருக்கான நந்தி விருது ஆந்திர அரசினால் வழங்கப்பட்டது. இவர் 1996-99 காலப்பகுதியில் ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினராகப் பதவியில் இருந்தார். 1996 இல் சாலைப் போக்குவரத்து மாநில அமைச்சராகப் பணியாற்றினார். 2008-இல் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மாநிலங்களவைக்குத் தெரிவு செய்யப்பட்டார்.[2] இவர் 2018 ஆகத்து 29 இல் சாலை விபத்து ஒன்றில் தனது 61-வது அகவையில் உயிரிழந்தார்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]