யோசிகிதே சூகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யோசிகிதே சூகா
Yoshihide Suga
Yoshihide Suga cropped 3 Joint Press Announcement of the Okinawa Consolidation Plan.jpg
2013 ஏப்ரலில் சூகா
சப்பானியப் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
16 செப்டம்பர் 2020
அரசர் நருஹித்தோ
துணை டாரோ ஆசோ
முன்னவர் சின்சோ அபே
லிபரல் சனநாயகக் கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
14 செப்டம்பர் 2020
முன்னவர் சின்சோ அபே
தலைமை அமைச்சுச் செயலர்
பதவியில்
26 திசம்பர் 2012 – 16 செப்டம்பர் 2020
பிரதமர் சின்சோ அபே
முன்னவர் ஒசாமு புஜிமுரா
பின்வந்தவர் கட்சுனோபு காட்டோ
உள்துறை அலுவல்கள், தகவல்தொடர்பு அமைச்சர்
பதவியில்
26 செப்டபம்பர் 2006 – 27 ஆகத்து 2007
பிரதமர் சின்சோ அபே
முன்னவர் எய்சோ தக்கினாக்கா
பின்வந்தவர் இரோயா மசுடா
பிரதிநிதிகள் சபை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
20 அக்டோபர் 1996
தனிநபர் தகவல்
பிறப்பு 6 திசம்பர் 1948 (1948-12-06) (அகவை 73)
யுசாவா, அக்கிட்டா, யப்பான்
அரசியல் கட்சி லிபரல் சனநாயகக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) மரிக்கோ சுகா
பிள்ளைகள் 3
படித்த கல்வி நிறுவனங்கள் ஓசெய் பல்கலைக்கழகம்
இணையம் அதிகாரப்பூர்வ இணையதளம்

யோசிகிடே சூகா (Yoshihide Suga; பிறப்பு: 6 திசம்பர் 1948}} சப்பானிய அரசியல்வாதி ஆவார். இவர் 2020 செப்டம்பர் 16 இல் சப்பானியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இளங்கலைச் சட்டம் பட்டம் பெற்ற யோசிகிடே சூகா 1975 இல் அரசியலில் இறங்கினார். 1987 இல் யோக்கோகாமா மாநகரசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 1996 பொதுத் தேர்தலில் கனகாவா தொகுதியில் லிபரல் சனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.

சப்பானிய நாடாளுமன்றத்தில், சூகா 2006 ஆம் ஆண்டில் உட்துறை மற்றும் தகவல்தொடர்பு அமைச்சராகப் நியமிக்கப்பட்டார். 2012 இல் அமைச்சரவையின் தலைமைச் செயலாளரானார்.[2] 2020 செப்டம்பரில், பிரதமர் சின்சோ அபே அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து, சூகா ஆளும் லிபரல் சனநாயகக் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். 2020 செப்டம்பர் 14 இல் இவர் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2020 செப்டம்பர் 16 இல் இவர் புதிய பிரதமராக நாடாளுமன்றத்தினால் அறிவிக்கப்பட்டார். சப்பானியப் பேரரசர் நருஹித்தோ இவரது நியமனத்தை ஏற்றுக் கொண்டார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோசிகிதே_சூகா&oldid=3035537" இருந்து மீள்விக்கப்பட்டது