யோசிகிதே சூகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோசிகிதே சூகா
Yoshihide Suga
2013 ஏப்ரலில் சூகா
சப்பானியப் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 செப்டம்பர் 2020
ஆட்சியாளர்நருஹித்தோ
Deputyடாரோ ஆசோ
முன்னையவர்சின்சோ அபே
லிபரல் சனநாயகக் கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
14 செப்டம்பர் 2020
முன்னையவர்சின்சோ அபே
தலைமை அமைச்சுச் செயலர்
பதவியில்
26 திசம்பர் 2012 – 16 செப்டம்பர் 2020
பிரதமர்சின்சோ அபே
முன்னையவர்ஒசாமு புஜிமுரா
பின்னவர்கட்சுனோபு காட்டோ
உள்துறை அலுவல்கள், தகவல்தொடர்பு அமைச்சர்
பதவியில்
26 செப்டபம்பர் 2006 – 27 ஆகத்து 2007
பிரதமர்சின்சோ அபே
முன்னையவர்எய்சோ தக்கினாக்கா
பின்னவர்இரோயா மசுடா
பிரதிநிதிகள் சபை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
20 அக்டோபர் 1996
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 திசம்பர் 1948 (1948-12-06) (அகவை 75)
யுசாவா, அக்கிட்டா, யப்பான்
அரசியல் கட்சிலிபரல் சனநாயகக் கட்சி
துணைவர்மரிக்கோ சுகா
பிள்ளைகள்3
முன்னாள் கல்லூரிஓசெய் பல்கலைக்கழகம்
இணையத்தளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

யோசிகிடே சூகா (Yoshihide Suga; பிறப்பு: 6 திசம்பர் 1948}} சப்பானிய அரசியல்வாதி ஆவார். இவர் 2020 செப்டம்பர் 16 இல் சப்பானியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இளங்கலைச் சட்டம் பட்டம் பெற்ற யோசிகிடே சூகா 1975 இல் அரசியலில் இறங்கினார். 1987 இல் யோக்கோகாமா மாநகரசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 1996 பொதுத் தேர்தலில் கனகாவா தொகுதியில் லிபரல் சனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.

சப்பானிய நாடாளுமன்றத்தில், சூகா 2006 ஆம் ஆண்டில் உட்துறை மற்றும் தகவல்தொடர்பு அமைச்சராகப் நியமிக்கப்பட்டார். 2012 இல் அமைச்சரவையின் தலைமைச் செயலாளரானார்.[2] 2020 செப்டம்பரில், பிரதமர் சின்சோ அபே அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து, சூகா ஆளும் லிபரல் சனநாயகக் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். 2020 செப்டம்பர் 14 இல் இவர் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2020 செப்டம்பர் 16 இல் இவர் புதிய பிரதமராக நாடாளுமன்றத்தினால் அறிவிக்கப்பட்டார். சப்பானியப் பேரரசர் நருஹித்தோ இவரது நியமனத்தை ஏற்றுக் கொண்டார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Japan’s Next Prime Minister Emerges From Behind the Curtain". த நியூயார்க் டைம்ஸ். 14 September 2020 இம் மூலத்தில் இருந்து 16 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200916141732/https://www.nytimes.com/2020/09/14/world/asia/japan-prime-minister-yoshihide-suga-bio.html?searchResultPosition=2. பார்த்த நாள்: 16 September 2020. 
  2. "The Key Government Post of Chief Cabinet Secretary". nippon.com (in ஆங்கிலம்). 27 May 2019. Archived from the original on 4 March 2020. பார்க்கப்பட்ட நாள் 28 August 2020.
  3. Sieg, Linda (29 August 2020). "In race to replace Japan's Abe, loyalist Suga emerges as strong contender". ராய்ட்டர்ஸ். Archived from the original on 29 August 2020. பார்க்கப்பட்ட நாள் 29 August 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோசிகிதே_சூகா&oldid=3860809" இலிருந்து மீள்விக்கப்பட்டது