உள்ளடக்கத்துக்குச் செல்

யோங்பியோன் அணுக்கரு அறிவியல் ஆராய்ச்சி மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோங்பியோன் அணுக்கரு அறிவியல் ஆராய்ச்சி மையம்
ஐந்து மெகாவாட் திறனுள்ள சோதனை அணு உலை
Korean name
அங்குல் எழுத்துக்கள்녕변핵시설
Hancha寧邊核施設
McCune–ReischauerNyŏngbyŏn haeksisŏl
Revised RomanizationNyeongbyeon haeksiseol

யோங்பியோன் அணுக்கரு அறிவியல் ஆராய்ச்சி மையம் (கொரிய மொழி: 녕변 원자력 연구소, ஆங்கில மொழி: Yongbyon Nuclear Scientific Research Center)[1] வடகொரியாவின் முதன்மை அணுவியல் வசதி ஆகும். இங்கு நாட்டின் முதல் அணுக்கரு உலைஅமைக்கப்பட்டுள்ளது. இது வட கொரியாவின் வடக்கு பியோங்கன் மாநிலத்தில் ந்யோங்பியோங் கௌன்ட்டியில் பியொங்யாங்கிலிருந்து வடக்கில் ஏறத்தாழ 90 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த மையம் 2006 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் வடகொரியா நடத்திய அணுகுண்டு சோதனைகளில் போது பிளவுறு எரிபொருளை தயாரித்தளித்தது. 2009ஆம் ஆண்டு முதல் மென்னீர் அணு உலை அணுமின் நிலையத்தை உள்ளூர் தொழினுட்பத்தைக் கொண்டு வடிவமைத்து வருகிறது.

பெப்ரவரி 2012 இல் ஐக்கிய அமெரிக்காவுடனான பயனுறுப் பேச்சு வார்த்தைகளின் போது தாங்கள் இனி அணுகுண்டு சோதனைகள் நடத்தப்போவதில்லை என்றும் யோங்பியோனில் இனி யுரேனியச் செறிவாக்கத்தை நிறுத்திக் கொள்வதாகவும் வடகொரியா அறிவித்தது. மேலும், ஐஏஈஏ கண்கானிப்பாளர்களை யோங்பியோனில் நடைபெறும் செயல்களை கண்காணிக்கவும் அனுமதித்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவும் தான் வடகொரியாவை எதிரியாகக் கருதாது இருவருக்குமிடையேயான நல்லுறவை வளர்த்துக்கொள்ள விரும்புவதாகவும் அறிவித்தது.[2][3] ஆனால் லீப் டே உரையாடல்கள் தோல்வியடைந்ததை அடுத்து யுரேனியச் செறிவாக்கம் தொடர்ந்துள்ளதாக தெரிகிறது.

மார்ச்சு 2013 இல், வட கொரியா மீண்டும் தாங்கள் யோங்பியோனில் உள்ள முதன்மை வசதிகளை இயக்கப்போவதாக அறிவித்துள்ளது.[4] வடகொரியா தென்கொரியாவுடன் "போர்நிலைப் பிரகடனம்" அறிவித்த சிலநாட்களிலேயே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "யோங்பியோன்" என்பது வடகொரியாவில் 녕변 (Nyŏngbyŏn) என்றும் தென் கொரியாவில் 영변 (Yŏngbyŏn) என்றும் உச்சரிக்கப்படுகிறது.
  2. "DPRK Foreign Ministry Spokesman on Result of DPRK-U.S. Talks". Korean Central News Agency. 29 February 2012 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120304080511/http://www.kcna.co.jp/item/2012/201202/news29/20120229-37ee.html. பார்த்த நாள்: 3 March 2012. 
  3. "U.S.-DPRK Bilateral Discussions". U.S. Department of State. 29 February 2012. பார்க்கப்பட்ட நாள் 3 March 2012.
  4. http://www.bbc.co.uk/news/world-asia-21999193

வெளி இணைப்புகள்

[தொகு]