மென்னீர் அணு உலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு எளிய மென்னீர் அணுக்கரு உலை

மென்னீர் அணு உலை (Light water reactor, LWR) சாதாரண நீரை குளிர்விப்பானாகவும் நியூத்திரன் மட்டுப்படுத்தியாகவும் பயன்படுத்தும் ஓர் வெப்ப அணுஉலை ஆகும். அணுக்கரு உலைகளில் பெரும்பாலானவை வெப்ப அணுக்கரு உலைகளாகும்; இவற்றில் பெரும்பாலானவை மென்னீர் அணு உலைகளாகும். மென்னீர் அணு உலைகள் மூன்று வகைப்படும்: அழுத்த நீர் அணுஉலை (PWR), கொதிநீர் அணுஉலை (BWR), மற்றும் உய்யமிகை நீர் அணுஉலைகளின் (SCWR) (பெரும்பான்மையான வடிவமைப்புகள்).

மேலோட்டம்[தொகு]

யுரேனியத்தை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் இரு அழுத்த நீர் அணுஉலைகள் உள்ள கோபெர்க் அணு மின்நிலையம்.

சாதாரண நீரை குளிர்விப்பானாகவும் மட்டுப்படுத்தியாகவும் பயன்படுத்துவதால் மென்னீர் அணுஉலைகள் பிற அணுஉலைகளை விட எளிமையான வடிவமைப்பாகவும் குறைந்த முதலீடு கொண்டதாகவும் விளங்குகின்றன. இதனால் 2009 வரையில் பெரும்பாலான குடிசார் அணுஉலைகளிலும் கடற்படை செலுத்துகை அணுஉலைகளிலும் இவ்வகை அணுஉலைகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஐக்கிய அமெரிக்காவின் பல்வேறு முகமைகள் துவக்கநிலையில் அழுத்த நீர் அணுஉலைகளையும் கொதிநீர் அணுஉலைகளையும் உருவாக்க காரணமாக இருந்தன. இரண்டாம் உலகப் போர் முடிவில் அமெரிக்க கப்பற்படை, கேப்டன் ஹைமன் ரிக்கோவர் தலைமையில், 1950களில் முதல் அழுத்த நீர் அணுஉலையையும் முதல் அணுக்கரு நீர்மூழ்கி கப்பலையும் உருவாக்கினர்; தேசிய அணுஉலை சோதனை நிலையம் (தற்போதைய இடாகோ தேசிய ஆய்வகச்சாலை)யில் நடந்த போராக்ஸ் சோதனைகளின்போது ஆய்வாளர் சாமுவல் அன்டர்மையர் II கொதிநீர் அணுஉலையை உருவாக்கினார். முன்னாள் சோவியத் ஒன்றியமும் தனியாக அவர்களது வகையான அழுத்த நீர் அணுஉலையை 1950களின் பிற்பகுதியில் உருவாக்கினர்; இவற்றின் தனிப்பட்ட துவக்கத்தை குறிக்கவும் சில தேசிய வடிவமைப்பு வேறுபாடுகளை கொண்டும் மேற்கத்திய அழுத்த நீர் அணுஉலைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டவும் இவை விவிஈஆர் என்று குறிப்பிட படலாயிற்று. மூன்றாவது வகையான உய்யமிகை நீர் அணுஉலை 2009 வரையில் எண்ணக்கரு அளவிலேயே உள்ளது; இது நான்காம் தலைமுறை அணுஉலையாக கருதப்படுகிறது. பகுதியளவில் மென்னீரை மட்டுப்படுத்தியாக பயன்படுத்தும் இவை விரைவு நியூத்திரன் அணுஉலையின் சில கூறுகளையும் கொண்டுள்ளது

வெளியிணைப்புகள்[தொகு]

[

"https://ta.wikipedia.org/w/index.php?title=மென்னீர்_அணு_உலை&oldid=3576243" இலிருந்து மீள்விக்கப்பட்டது