உள்ளடக்கத்துக்குச் செல்

யாஷ் தாகூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாஷ் தாகூர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்யாஷ் ரவிசிங் தாகூர்
பிறப்பு28 திசம்பர் 1998 (1998-12-28) (அகவை 25)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
பந்துவீச்சு நடைவலது கை மிதவேகம்
பங்குபந்துவீச்சாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2023–தற்போதுலக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை இ20 பஅ முத
ஆட்டங்கள் 46 32 15
ஓட்டங்கள் 28 35 59
மட்டையாட்ட சராசரி 9.33 2.69 6.55
100கள்/50கள் 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 10 6* 10*
வீசிய பந்துகள் 902 1429 2243
வீழ்த்தல்கள் 68 48 40
பந்துவீச்சு சராசரி 15.89 24.77 26.40
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 4/5 5/53 6/50
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
12/0 5/0 8/0
மூலம்: கிரிக்கின்போ, 6 நவம்பர் 2023

யாஷ் தாகூர் (பிறப்பு 28 டிசம்பர் 1998) ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] அவர் உள்நாட்டுத் துடுப்பாட்டத்தில் விதர்பா அணிக்காகவும், இந்தியன் பிரீமியர் லீக்கில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காகவும் விளையாடுகிறார். 25 பிப்ரவரி 2017 அன்று விஜய் ஹாசரே கோப்பையில் விதர்பா அணிக்காகப் பட்டியல் அ போட்டியில் அறிமுகமானார்.[2] அவர் 28 நவம்பர் 2018இல் ரஞ்சிக் கோப்பையில் விதர்பா அணிக்காக தனது முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.[3] அவர் 21 பிப்ரவரி 2019 அன்று சையத் முஷ்டாக் அலி கோப்பையில் விதர்பா அணிக்காக தனது இருபது20 போட்டியில் அறிமுகமானார்.[4] 8 டிசம்பர் 2021 அன்று, விஜய் ஹசாரே கோப்பையின் தொடக்க நாளில், தாகூர் பட்டியல் அ போட்டிகளில் தனது முதல் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.[5]

2023 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 45 லட்சத்திற்கு அவரை வாங்கியது. 3 ஏப்ரல் 2023 அன்று சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக அவர் ஐபிஎல் போட்டியில் அறிமுகமானார்.[6][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Yash Thakur". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 February 2017.
  2. "Vijay Hazare Trophy, Group A: Punjab v Vidarbha at Delhi, Feb 25, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 February 2017.
  3. "Elite, Group A, Ranji Trophy at Raipur, Nov 28 - Dec 1 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 November 2018.
  4. "Group B, Syed Mushtaq Ali Trophy at Surat, Feb 21 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 February 2019.
  5. "Vijay Hazare Trophy: Thakur's five-for sets up seven-wicket win for Vidarbha". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 8 December 2021.
  6. "2023 IPL Players Auction" (in en). Cricbuzz. https://cricbuzz.com/cricket-series/ipl-2023/auction/players/12096. 
  7. "6th Match (N), Chennai, April 03, 2023, Indian Premier League" (in en). ESPNcricinfo. https://www.espncricinfo.com/series/indian-premier-league-2023-1345038/chennai-super-kings-vs-lucknow-super-giants-6th-match-1359480/live-cricket-score. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாஷ்_தாகூர்&oldid=3932559" இலிருந்து மீள்விக்கப்பட்டது