யாழ்ப்பாண இராச்சியத்தின் கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாழ்ப்பாண இராச்சியத்தின் கொடி
பிற பெயர்கள் நந்தி கொடி
ஏற்கப்பட்டது 13-ஆம் நூற்றாண்டு

யாழ்ப்பாண இராச்சியத்தின் கொடி, ஆரியச் சக்கரவர்த்திகள் வடக்கு இலங்கையின் யாழ்ப்பாண இராச்சியத்தைத் ஆட்சிசெய்தபோது பயன்படுத்திய கொடி ஆகும். இக்கொடியில் ஓர் காளை (நந்தி), வெள்ளி நிறத்தில் அமைந்த பிறை நிலவு, தங்க சூரியன் ஆகியவற்றை உள்ளடக்கிக் காணப்பட்டது. ஒற்றை புனித சங்குச் சிப்பி இக்கொடியின் வலப்பக்கத்திலும் நந்தி நடுவிலும் அமைந்திருந்தன. நந்தி வெள்ளை நிறத்திலும், தங்க காற் குளம்புகளையும் கொண்டிருந்தது. குங்குமப்பூ நிறத்தில் இவ்வரச கொடி அமைந்திருந்தது.[1] இந்தியாவில் குறிப்பாக கிழக்கு கங்கா வம்சத்தில் பயன்படுத்தப்பட்ட கொடிகள் போலவே யாழ்ப்பாண இராச்சியக் கொடியும் காணப்பட்டது. ஆரியச் சக்கரவர்த்திகளால் பயன்படுத்தப்பட்ட சேது நாணயங்களிலும் இவ்வாறான கொடியில் அமைந்துள்ள சின்னங்களை காணக்கூடியதாக இருக்கிறது.[2][3]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Rasanayagam, M., Ancient Jaffna, p303-304
  2. Perera, H., Ceylon & Indian History from Early Times to 1505 A. D, p353
  3. Coddrington, H., Ceylon Coins and Currency, p74-75

மேற்கோள்கள்[தொகு]