உள்ளடக்கத்துக்குச் செல்

யாழ்ப்பாண அரசை போர்த்துக்கேயர் வெற்றி கொள்ளல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாழ்ப்பாண அரசின் காரணித்துவ கால வரைபடம். ஏறக்குறைய 1619

யாழ்ப்பாண அரசை போர்த்துக்கேயர் வெற்றி கொண்ட நிகழ்வானது 1505 இல் இலங்கையின் தென்மேற்கில் போட்டியாகவிருந்த கோட்டை இராச்சியத்தில் போர்த்துக்கேய வாணிபர்கள் வந்த பின் இடம்பெற்றது. ஆரம்பத்தில் முதலாம் சங்கிலி போன்ற பல மன்னர்கள் உள்ளூர் மக்களை கத்தோலிக்க சமயத்திற்கு போர்த்துக்கேயர் மதம் மாற்றியபோது எதிர்த்தனர். ஆயினும் மெதுவாக அவர்களுடன் சமாதானம் செய்து கொண்டனர்.

1591 காலப்பகுதியில் யாழ்ப்பாண அரசன் எதிர்மன்னசிங்கம் போர்த்துக்கேயரால் நியமிக்கப்பட்டார்.[1] ஆயினும், அவர் பெயரவில் ஓர் போர்த்துக்கோய வாடிக்கையாளராகவிருந்து, சமய பரப்புதல் நடவடிக்கையை தடுத்து, தென் இந்தியாவிலிருந்து இராணுவ உதவியை நாடியபோது உள்ளக கண்டி இராச்சியத்திற்கு உதவினார். இறுதியாக, அதிகாரத்தை பறித்தெடுத்த இரண்டாம் சங்கிலி போர்த்துக்கேய மேலாண்மையை எதிர்த்தாலும் 1619 இல் பிலிப்பே டி ஒலிவேரா என்பவரால் அகற்றப்பட்டு, தூக்கிலிடப்பட்டார்.[2] அதன்பின்னரான போர்த்துக்கேய ஆட்சி கத்தோலிக்கத்திற்கு மக்கள் மதமாற்றப்பட வழி ஏற்படுத்தியது. மேலும், அதிக வரியினால் சனத்தொகை குறைவடைந்து, அதிகளவான மக்கள் முன்னைய அரசுகளின் மையப்பகுதிகளுக்கு ஓடிச் செல்லச் செய்தது.

ஆரம்பத் தொடர்பு[தொகு]

போர்த்துக்கேய வர்த்தகர்கள் 1505 இல் இலங்கையை அடைந்து, அவர்களின் ஆரம்ப திடீர்த் தாக்குதல்கள் தென்மேற்கு கடற்கரையில் இருந்த கோட்டை இராச்சியத்திற்கு எதிராகவிருந்தது. கோட்டை இராச்சியம் நறுமண உணவுப் பொருள் வர்த்தகத்தில் ஆதாய ஏகபோகம் அனுபவித்துக் கொண்டிருந்தனர். இது போர்த்துக்கேயரை ஆர்வம் கொள்ள வைத்தது.[1]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Abeysinghe, Tikiri (1986). Jaffna under the Portuguese (PDF). Colombo: Lake House. pp. 2, 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-552-000-3. Archived from the original (PDF) on 2014-04-14. பார்க்கப்பட்ட நாள் 2014-04-14.
  2. Gnanaprakasar, S. A critical history of Jaffna, pp. 113–7.

உசாத்துணை[தொகு]