மூன்றுமாவடி
மூன்றுமாவடி Moondrumavadi | |
---|---|
ஆள்கூறுகள்: 9°57′17″N 78°09′10″E / 9.9546°N 78.1529°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை மாவட்டம் |
ஏற்றம் | 183 m (600 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 625007 |
தொலைபேசி குறியீடு | +91452xxxxxxx |
அருகிலுள்ள ஊர்கள் | மதுரை, செல்லூர், நரிமேடு, பீபி குளம், சின்ன சொக்கிகுளம், சிம்மக்கல், தல்லாகுளம் கோரிப்பாளையம், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தத்தனேரி, கூடல் நகர் மற்றும் ஆரப்பாளையம் |
மாநகராட்சி | மதுரை மாநகராட்சி |
மக்களவைத் தொகுதி | மதுரை மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | மதுரை வடக்கு (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவை உறுப்பினர் | சு. வெங்கடேசன் |
சட்டமன்ற உறுப்பினர் | கோ. தளபதி |
இணையதளம் | https://madurai.nic.in |
மூன்றுமாவடி (ஆங்கில மொழி: Moondrumavadi) என்பது இந்திய தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3][4][5][6]
மூன்றுமாவடி பகுதியானது, 9°57′17″N 78°09′10″E / 9.9546°N 78.1529°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 183 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
மதுரை, செல்லூர், நரிமேடு, பீபி குளம், சின்ன சொக்கிகுளம், சிம்மக்கல், தல்லாகுளம் கோரிப்பாளையம், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தத்தனேரி, கூடல் நகர் மற்றும் ஆரப்பாளையம் ஆகியவை மூன்றுமாவடி பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.
ஒவ்வோர் ஆண்டும் மதுரையில் நடக்கும் சித்திரைத் திருவிழாவின் போது, மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவமும், அதைக் காண அழகர்மலையிலிருந்து கள்ளழகர் மதுரை விசயம் செய்யும் போது, வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வும் கோலாகலமான திருவிழாவாகக் கொண்டாடப்படும். அந்நிகழ்வுகளின் போது, கள்ளழகரை மக்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை வைபவம், மூன்றுமாவடி பகுதியில் சிறப்பாக நடைபெறும்.[7][8] மேலும், வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் முடிந்து, அழகர்மலைக்கு திரும்பும் கள்ளழகரை மூன்றுமாவடி மக்கள் எதிர்கொண்டு அழைப்பதும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.[9][10][11]
மூன்றுமாவடி பகுதியானது, மதுரை வடக்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் கோ. தளபதி ஆவார். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு. வெங்கடேசன், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Madras (India : State). State Electricity Board (1962). Administration Report (in ஆங்கிலம்).
- ↑ The Catholic Directory of India, 1984 (in ஆங்கிலம்). C.B.C.I. Centre. 1984.
- ↑ Ci Rukmaṇi (1988). Pēyōṭṭum uṭukkaṭippāṭalkaḷ: ōr āyvu. Camantā Patippakam.
- ↑ To Paramacivan̲ (1989). Al̲akar Kōyil. Patipputtur̲ai, Maturai Kāmarācar Palkalaik Kal̲akam.
- ↑ "மூன்றுமாவடி--அய்யர்பங்களா ரோட்டில் ஆக்கிரமிப்புகளால் விபத்துக்கள் - Dinamalar Tamil News". Dinamalar. 2020-06-28. பார்க்கப்பட்ட நாள் 2023-07-09.
- ↑ மாலை மலர் (2023-06-13). "திருப்பாலை, மூன்றுமாவடி பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-09.
- ↑ தினத்தந்தி (2023-03-29). "மதுரை சித்திரை திருவிழா 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-09.
- ↑ அருண் சின்னதுரை (2023-05-04). "கோவிந்தா கோஷம் முழங்க தண்ணீரை பீய்ச்சி அடித்து கள்ளழகரை வரவேற்ற பக்தர்கள்". tamil.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-09.
- ↑ மாலை மலர் (2018-05-04). "சித்திரை திருவிழா நிறைவு பெற்றது - கள்ளழகர் அழகர்மலைக்கு புறப்பட்டார்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-09.
- ↑ "தங்கப்பல்லக்கில் மதுரை வந்த கள்ளழகர் இன்று காலை மலைக்கு திரும்பினார்…. - www.patrikai.com" (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-04-19. பார்க்கப்பட்ட நாள் 2023-07-09.
- ↑ ""போறார் அழகர்" - மதுரையிடமிருந்து விடைபெற்றார் சித்திரைப் பெருவிழா நாயகன்!". News18 Tamil. 2022-04-19. பார்க்கப்பட்ட நாள் 2023-07-09.