உள்ளடக்கத்துக்குச் செல்

நரிமேடு

ஆள்கூறுகள்: 9°56′13.9″N 78°07′32.9″E / 9.937194°N 78.125806°E / 9.937194; 78.125806
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நரிமேடு
Narimedu
நரிமேடு Narimedu is located in தமிழ் நாடு
நரிமேடு Narimedu
நரிமேடு
Narimedu
நரிமேடு, மதுரை (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 9°56′13.9″N 78°07′32.9″E / 9.937194°N 78.125806°E / 9.937194; 78.125806
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
ஏற்றம்
159 m (522 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
625 002
தொலைபேசி குறியீடு0452
அருகிலுள்ள ஊர்கள்மதுரை, செல்லூர், சிம்மக்கல், தல்லாகுளம் கோரிப்பாளையம், செனாய் நகர், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தத்தனேரி, கூடல் நகர், ஆரப்பாளையம்
மாநகராட்சிமதுரை மாநகராட்சி
மக்களவைத் தொகுதிமதுரை மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிமதுரை வடக்கு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி உறுப்பினர்சு. வெங்கடேசன்
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்கோ. தளபதி
இணையதளம்https://madurai.nic.in

நரிமேடு (Narimedu) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில்,[1] 9°56′13.9″N 78°07′32.9″E / 9.937194°N 78.125806°E / 9.937194; 78.125806 (அதாவது, 9.937200°N, 78.125800°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கடல் மட்டத்திலிருந்து சுமார் 159 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். மதுரை, செல்லூர், சிம்மக்கல், தல்லாகுளம் கோரிப்பாளையம், செனாய் நகர், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தத்தனேரி, கூடல் நகர் மற்றும் ஆரப்பாளையம் ஆகியவை நரிமேடு பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும். தமிழ் நகைச்சுவை நடிகர் சூரி குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் அம்மன் உணவகம், நரிமேட்டிலும் தன் கிளையைக் கொண்டுள்ளது.[2]

போக்குவரத்து[தொகு]

நரிமேடு பகுதியிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அமைந்துள்ளது. ஆரப்பாளையம் பேருந்து நிலையம் சுமார் 3.5 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது. இங்கிருந்து சுமார் 3.5 கி.மீ. தூரத்தில் பெரியார் பேருந்து நிலையம் உள்ளது. மேலும், எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம், இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் அமையப் பெற்று, வெளியூர் பயணத் தொடர்புக்கு ஏற்றவாறு, மாநகரப் பேருந்துகள் மூலம் சென்று வர சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது.. நரிமேடு பகுதியிலிருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் அவனியாபுரம் பகுதியில் மதுரை வானூர்தி நிலையம் சிறப்புற அமைந்துள்ளது.

கல்வி[தொகு]

நரிமேட்டிலுள்ள கேத்தி வில்காக்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மற்றும் இவ்வூருக்கு அருகில் சின்ன சொக்கிகுளம் பகுதியில் அமைந்துள்ள ஓ.சி.பி.எம். (O.C.P.M.) மேல்நிலைப் பள்ளி மற்றும் நோயஸ் (Noyes) மெட்ரிக் பள்ளி ஆகியவை முக்கியமான பள்ளிகளாகும். இப்பள்ளிகளில் நடக்கும் அறிவியல் சார்ந்த கண்காட்சிகள் அகில இந்திய அளவில் ஈர்க்கப்பட்டு வருகின்றன. நரிமேடு பகுதியை ஒட்டி தல்லாகுளம் பகுதியில் டோக் பெருமாட்டி மகளிர் கலைக் கல்லூரி உள்ளது. அருகிலுள்ள கோரிப்பாளையம் தன்னகத்தே கொண்டுள்ள அமெரிக்கன் கல்லூரி மற்றும் மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி மூலம் நரிமேட்டைச் சுற்றியுள்ள மாணவ, மாணவிகளும் பயன் பெறுகின்றனர். மூன்று கி.மீ. தொலைவிலேயே மதுரை மருத்துவக் கல்லூரி ஒன்றும் உள்ளது.

பொழுதுபோக்கு[தொகு]

விளையாட்டு[தொகு]

சாய் பூப்பந்து கலைக்கூடம் ஒன்று நரிமேட்டில் அமைந்துள்ளது. இது இரவு பத்து மணி வரை சேவை புரிகிறது.

ஆன்மீகம்[தொகு]

கோயில்[தொகு]

நரிமேட்டில் கட்டப்பட்டுள்ள காட்டுப் பிள்ளையார் கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.[3]

தேவாலயம்[தொகு]

சி. எஸ். ஐ. கதீட்ரல் தேவாலயம் ஒன்றும் நரிமேட்டில் உள்ளது.[4]

அரசியல்[தொகு]

நரிமேடு பகுதியானது, மதுரை வடக்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.[5] இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் கோ. தளபதி ஆவார். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு. வெங்கடேசன், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Tamil Nadu (India) Legislature Legislative Assembly (1985). Tamil Nadu Legislative Assembly Who's who.
  2. ganesh.perumal. "நடிகர் சூரிக்கு சொந்தமான ஹோட்டல்களில் திடீர் ரெய்டு விட்ட வணிகவரித்துறை அதிகாரிகள்... பின்னணி என்ன?" (in ta). https://tamil.asianetnews.com/gallery/cinema/commercial-taxes-department-raid-in-actor-soori-s-amman-restaurant-in-madurai-rijmaw. 
  3. "Arulmigu Kattupillaiyar Temple, Narimedu, Madurai - 625002, Madurai District [TM032068].,-,-". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-03.
  4. மாலை மலர் (2022-12-25). "கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை" (in ta). https://www.maalaimalar.com/news/district/madurai-news-christmas-special-prayer-552985. 
  5. "மதுரை மாநகராட்சி பகுதியில் - வார்டு வாரியாக சட்டப்பேரவை தொகுதிகள் :". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-01-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரிமேடு&oldid=3752585" இலிருந்து மீள்விக்கப்பட்டது