முள் முட்டைக்கோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Artichoke
உயிரியல் வகைப்பாடு edit
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
இனக்குழு:
பேரினம்:
இனம்:
பலவகை:
C. c. var. scolymus
முச்சொற் பெயரீடு
Cynara cardunculus var. scolymus
L.

முள் முட்டைக்கோசு (globe artichoke) ( சைனாரா கார்டங்குலசு வகை. சுகோலிமசு),[1] அல்லது பிரெஞ்சு முள் முட்டைக்கோசு அல்லது பச்சை முள் முட்டைக்கோசு (ஐக்கிய அமெரிக்காவில்)[2] என்பது உணவுக்காகப் பயிரிடப்படும் திசில் இனத்தின் பயிரிடும்வகைகளில் ஒன்றாகும்.

இத்தாவத்தின் பூக்கும் முன்பான மொட்டுகள் உண்ணத்தக்கனவாக அமைகின்றன. முள் முட்டைக்கோசுவின் பூமொட்டுகள் பல சிறு பூமொட்டுகளின் மஞ்சரியாக, உண்தகு பூவடி சிற்றிலைகளோடு, அமையும் . இந்த மோட்டுகள் பூத்துவிட்டால், உண்ணவியலாத முருடான வடிவில் இருக்கும். இந்த தாவர இனத்தின் மற்றொரு பயிரிடும்வகை கார்தூன் ஆகும். இது நடுக்கடல்தரை நாட்டினைத் தாயகமாகக் கொண்ட ஒர் ஆண்டுத் தாவரமாகும். இந்த இரு பயிரிடும்வகைகளும் பல் காட்டுவகை வடிவங்களையும் பல பயிரிடும்வகைகளையும் கொண்டுள்ளன.

விவரிப்பு[தொகு]

முள் முட்டைக்கோசு 1.4 மீ முதல் 2 மீ உயரம் வரை வளர்கிறது. இதன் இலைகள் வளைந்த ஆழ்மடல்களாக வெண்பசுமைநிறத்தில் 50 செமீ முதல் 82 செமீ நீளத்துடன் அமைகின்றன. பூக்கள் உண்தகும் மொட்டில் இருந்து 8செமீ முதல் 15 செமீ விட்டமுள்ள பெரிய மஞ்சரியாக பல முக்கோண செதிள்களுடன் வளர்கின்றன; சிறு பூவிதழ்கள் ஊதாவண்ணத்தில் உள்ளன. மொட்டுகளின் உண்ணும் பகுதி முதன்மையாக புத்திளம் பூவடிச் சிற்றிலைகளும் முதிரா பூவிதழ்களின் திரள் அமைந்த அடிப்பகுதியும் அமைகின்றன. மொட்டின் நடுப்பகுதி தாடி எனப்படுகிறது. இவை உண்ணத்தகாத பெரிய பூவிதழ்களாகும்.

வேதியியல் உட்கூறுகள்[தொகு]

முள் முட்டைக்கோசு அப்பிஜெனின், இலூட்டியோலின் ஆகிய உயிரூக்கி வேதிப்பொருள்களைக் கொண்டுள்ளது.[3]

முள் முட்டைக்கோசு பூந்தலை அல்லது மஞ்சரியில் உள்ள உயரளவு எதிர் உயிரகப் பொருள் வேறு எந்தக் காய்கறிகளிலும் அமைவதில்லை.[4] Cynarine is a chemical constituent in சைனாரா தாவரங்களில் சைனாரைன் எனும் வேதிப்பொருள் அமைந்துள்ளது. முள் முட்டைக்கோசில் உள்ள பெரும்பான்மை சைனாரைன் இலைத்தழையில் உள்ளது.எனினும் உலர் இலை, தண்டிலும் சைனாரைன் ஓரளவு உள்ளது.

வேளாண்விளைச்சல்[தொகு]

முள் முட்டைக்கோசு இதழ்விரிக்கும் மொட்டு
விற்பனைக்கான முள் முட்டைக்கோசு

இன்று, முள் முட்டைக்கோசு நடுத்தரைக்கடல் படுகைகளில் செறிவாகப் பயிரிடப்படுகிறது. முதன்மை ஐரோப்பிய விளைப்பாள்ர்களாக, இத்தாலி,பிரான்சு, எசுபானியா ஆகிய நாடுகளும் முதன்மை அமெரிக்க விளைவிப்பாளர்களாக அர்ஜென்டீனா, பெரு, ஐக்கிய அமெரிக்கா, கலிபோர்னியா ஆகிய நாடுகளும் அமைகின்றன.ஐக்கிய அமெரிக்காவின் மொத்த விளைச்சலும் கலிபோர்னியாவில் அமைகிறது. இந்த விளைச்சலில் 80% கலிபோர்னியாவில் உள்ள மான்டெரே ஊரகப் பகுதியில் விளைகிறது; கலிபோர்னியாவின் காசுட்ரோவில்லி தன்னைகௌலகின் முள் முட்டைக்கோசு மையமாக அறிவித்துக் கொள்கிறது. இது ஒவ்வோராண்டும் முள் முட்டைக்கோசு விழா நடத்துகிறது. அண்மையில் முள் முட்டைக்கோசு தென் ஆப்பிரிக்காவிலும் வால் ஆற்றங்கரையில் அமைந்த பாரிசு எனும் சிறு நகரியத்தில் பயிரிடப்படுகிறது.

முதல் 12 முள் மூட்டைக்கோசு விளைவிப்பாளர்கள், 2017
நாடு விளைச்சல் ( டன்களில்) style="background:#ddf;"லடிக்குறிப்பு
 இத்தாலி 387,803
 எசுப்பானியா 223,150
 எகிப்து 185,695 Im
 பெரு 145,068
 அர்கெந்தீனா 108,683 Im
 அல்ஜீரியா 108,560
 சீனா 87,968 Im
 மொரோக்கோ 45,457
 ஐக்கிய அமெரிக்கா 42,456
 பிரான்சு 41,940 Im
 துருக்கி 38,431
 தூனிசியா 32,000
World 1,505,331 A
* = Unofficial figure | [ ] = Official data | A = May include official, semi-official or estimated data
F = FAO estimate | Im = FAO data based on imputation methodology | M = Data not available

Source: UN Food and Agriculture Organization (FAO)[5]


முள் முட்டைக்கோசு விளைச்சல், 2005

பயிரிடும்வகைகள்[தொகு]

சில முள் முட்டைக்கோசுகள் ஊதா வண்ணங் கொண்டுள்ளன.

ஒட்டுமுறையில் பரவும் பயிரிடும்வகைகள்[தொகு]

 • பச்சை, பெரிய அளவு: 'Vert de Laon' (பிரான்சு), 'Camus de Bretagne', 'Castel' ( பிரான்சு), 'Green Globe' ( ஐக்கிய அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா)
 • பச்சை, நடுத்தர அளவு: 'Verde Palermo' ( சிசிலி, இத்தாலி), 'Blanca de Tudela' (எசுபானியா), ' அர்ஜென்டீனா', 'Española' ( சிலி), 'Blanc d'Oran' ( அல்ஜீரியா), 'Sakiz', 'Bayrampasha' (துருக்கி)
 • ஊதா, பெரிய அளவு: 'Romanesco', 'C3' (இத்தாலி)
 • ஊதா நடுத்தர அளவு: 'Violet de Provence' (பிரான்சு), 'Brindisino', 'Catanese', 'Niscemese' சிசிலி), 'Violet d'Algerie' ( அல்ஜீரியா), 'Baladi' (எகுபதி), 'Ñato' (அர்ஜென்டீனா), 'Violetta di Chioggia' ( இத்தாலி)
 • முள்வகை: 'Spinoso Sardo e Ingauno' (சார்தினியா, இத்தாலி), 'கிரியோல்லா' (பெரு).
 • வெள்ளைவகை, உலகின் சில பகுதிகளில்.

விதைவழிப் பரவும் பயிரிடும்வகைகள்[தொகு]

 • தொழிலகத்துக்கு: 'மாத்ரிகால்',[6] 'Lorca', 'A-106', 'Imperial Star'
 • கீரை: 'சிம்பொனி',[6] 'Harmony'[6]
 • ஊதா: 'கன்செர்ட்டோ',[6] 'Opal',[6] 'Tempo'[6]

பயன்பாடுகள்[தொகு]

மேல்வெட்டிய முள் முட்டைக்கோசு

உணவாக[தொகு]

பெரிய முள் முட்டைக்கோசு தண்டு ஒட்டிய பத்து மிமீ அளவுக்கு மேற்பகுதியை வெட்டி விட்டு, எஞ்சிய பகுதியே சமைக்க பயன்படுத்தப்படுகிறது. உண்ண இடையூறு தரும் முட்களை நீக்க செதிளின் காற்பகுதி வரை வெட்டப்படுகிறது. முள் முட்டைக்கோசு நீரில் கொதிக்கவைத்தோ நீராவியில் வேகவைத்தோ சமைக்கப்படுகிறது. சமைத்த பதப்படுத்தாத முள் முட்டைக்கோசு மென்மணம் வாய்ந்தது.

முள் முட்டைக்கோசுவைக் கொதிக்க வைக்கும்போது உப்பு சேர்க்கலாம். மேற்பகுதி வெட்டிய முள் முட்டைக்கோசு நொதிப்பாலும் பச்ச்சையம் உயிரகவேற்றம் அடைவதாலும் பழுப்புநிறம் அடைகிறது. இந்நிற மாற்றத்தை ஓரளவு தணிக்க முள் முட்டைக்கோசை வினிகர் கலந்த அல்லது எலுமிச்சம் பழச் சாறிட்டோ தண்ணீரில் வைக்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

 1. Rottenberg, A., and D. Zohary, 1996: "The wild ancestry of the cultivated artichoke." Genet. Res. Crop Evol. 43, 53–58.
 2. "Artichokes History". /What's Cooking America. பார்க்கப்பட்ட நாள் 2019-02-08.
 3. Cesar G. Fraga. Plant Phenolics and Human Health– Biochemistry, Nutrition and Pharmacology. Wiley. p.9
 4. Ceccarelli N., Curadi M., Picciarelli P., Martelloni L., Sbrana C., Giovannetti M. "Globe artichoke as a functional food" Mediterranean Journal of Nutrition and Metabolism 2010 3:3 (197–201)
 5. "Major Food And Agricultural Commodities And Producers – Countries By Commodity". Fao.org. பார்க்கப்பட்ட நாள் Dec 1, 2019.
 6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 "Alcachofa". nunhems.es. பார்க்கப்பட்ட நாள் 10 January 2019.

Rezazadeh, A., Ghasemnezhad, A., Barani, M., & Telmadarrehei, T. (2012). Effect of Salinity on Phenolic Composition and Antioxidant Activity of Artichoke (Cynara scolymus L.) Leaves. Research Journal of Medicinal Plant, 6(3).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முள்_முட்டைக்கோசு&oldid=3855919" இலிருந்து மீள்விக்கப்பட்டது