முகில் நீர்த்தாரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புளோரிடா அருகில் கடலின் மேல் தோன்றிய முகில் நீர்த்தாரைகள் புகைப்படத்தின் அடிப்பகுதியில் தோன்றும் புகை காற்றின் திசையையும் பொதுவான வேகத்தையும் காட்டுகிறது.

முகில் நீர்த்தாரைகள் (Waterspout) என்பது சுழல் காற்றின் போது கடல் அல்லது பரந்த நீர்ப்பரப்பின் மேற்பரப்பிலிருந்து செங்குத்தான ஆழ்ந்த தூண்போன்ற (பொதுவாக புனல் வடிவத்தில் மேகம் தோன்றுதல்) வடிவத்தில் வானை நோக்கி நீர் மேலெழும்பும் நிகழ்வு ஆகும். இந்த நீர்த்தாரைகளில் சில திரள்நெருக்க முகிலுடனும் (cumulus congestus cloud), சில திரள்வடிவ மேகத்துடனும் (cloud cumuliform cloud), மேலும் சில திரள் கார்முகிலுடனும் (cumulonimbus cloud) தொடர்பு கொண்டிருக்கக்கூடும்.[1] பொதுவாக இவற்றை நீரின் மேல் சுழன்று மேலெழும்பும் சுழல் காற்று என வரையறுக்கலாம். இதனை மேகத்தால் கடல் நீர் உறிஞ்சப்படுதல் என்று எளிதாகக் கூறலாம்.[1][2][3] .

பண்புகள் மற்றும் நிகழ்விடங்கள்[தொகு]

நிலப்பகுதிகளில் விட நீர்ப்பரப்பில் தோன்றும் சுழல் பலவீனமானதாக இருந்தாலும், காற்றிடை புயலியக்கத்தின் (mesocyclones) போது வலுவான நீர்த்தாரை நிகழ்வுகள் நிகழ்கின்றன.[4][5]. பெரும்பாலான நீர்த்தாரைகள் நீரை உறிஞ்சாது, அவை தண்ணீர் மீது சிறிய மற்றும் பலவீனமான சுழலும் காற்றுத்தம்பத்தை உருவாக்குகின்றன.[1][6] வெப்பம் மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் இந்நிகழ்வு நடைபெறுகிறது. ஐரோப்பா, நியூசிலாந்து, அமெரிக்கப் பெரு ஏரிகள், அன்டார்க்டிக்கா[7][8] உள்ளிட்ட மற்ற இடங்களிலும் அரிய நிகழ்வாக பெரிய உப்பு ஏரியிலும் முகில் நீர்த்தாரை நிகழ்வுகள் நடைபெற்றதற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.[9]

காரணங்கள்[தொகு]

கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், கடலின் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், கடலில் நீர்த்தாரைகள் எனப்படும் அதிசய நிகழ்வு ஏற்படும். பொதுவாக பருவநிலை மாற்றம் ஏற்படும் போது இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும். மீண்டும் இரண்டு காற்றுகளின் வெப்பநிலையும் சமமாக மாறும் போது, நீர்த்தாரைகள் மறைந்து விடும். இந்த விநோத நிகழ்வின் போது கடலின் நீர் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறி விடும். இதன் வேகம் பல கிலோ மீட்டராக இருக்கும்.[10]

காணக்கூடிய வாய்ப்புகள்[தொகு]

அரிதாக நிகழக்கூடிய இந்நிகழ்வை கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் , மீனவர்கள் , கடலில் பயணம் செல்வோர், வானியல் ஆய்வாளர்கள் ஆகியோர் காண வாய்ப்புகள் அதிகம்.[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Waterspout definition". A Comprehensive Glossary Of Weather. Geographic.org. பார்க்கப்பட்ட நாள் 2014-07-10.
  2. What Is a Waterspout? (Weather Channel நிகழ்படம்)
  3. Waterspout comes ashore in Galveston by Jessica Hamilton, Houston Chronicle, July 17, 2016
  4. Answer.com (ed.). "Waterspout". McGraw-Hill Encyclopedia of Science and Technology. பார்க்கப்பட்ட நாள் 6 December 2010.
  5. Keith C. Heidorn. Islandnet.com (ed.). "Water Twisters". The Weather Doctor Almanach. பார்க்கப்பட்ட நாள் 6-12-2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. Schwiesow, R.L.; Cupp, R.E.; Sinclair, P.C.; Abbey, R.F. (April 1981). "Waterspout Velocity Measurements by Airborne Doppler Lidar". Journal of Applied Meteorology 20: 341–348. doi:10.1175/1520-0450(1981)020<0341:WVMBAD>2.0.CO;2. Bibcode: 1981JApMe..20..341S. http://journals.ametsoc.org/doi/pdf/10.1175/1520-0450%281981%29020%3C0341%3AWVMBAD%3E2.0.CO%3B2. பார்த்த நாள்: 11 August 2013. 
  7. "Several waterspouts filmed on Lake Michigan in US". BBC News. 20 August 2012. http://www.bbc.co.uk/news/world-us-canada-19315824. பார்த்த நாள்: 20 August 2012. 
  8. Taylor, Stanley. "Antarctic Diary". பார்க்கப்பட்ட நாள் 4 June 2013.
  9. publisher=journals.ametsoc.org| url=journals.ametsoc.org/doi/pdf/10.1175/1520-0493-119-12-2740.1|author=J Simpson |date =1991
  10. Choy, Barry K.; Scott M. Spratt. "Using the WSR-88D to Predict East Central Florida Waterspouts". National Oceanic and Atmospheric Administration. Archived from the original on 5 October 2006. பார்க்கப்பட்ட நாள் 25 October 2006.
  11. http://tamil.oneindia.com/news/tamilnadu/fisherman-captured-toronto-188983.html

புற இணைப்புகள்[தொகு]

பொது
Winter waterspout
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகில்_நீர்த்தாரை&oldid=3269714" இலிருந்து மீள்விக்கப்பட்டது