கடற்காற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கடற்காற்றை சித்தரிக்கும் படம்

கடற்காற்று (Sea breeze) என்பது ஓர் பாரிய நீர் நிலையினூடு நிலத்தை நோக்கி வீசும் காற்று ஆகும்.

காரணம்[தொகு]

சூரியன் உதித்த பின் புவியின் நிலப்பரப்பு அதன் கடினத் தன்மை காரணமாக மிக விரைவாக வெப்பமடைகிறது.[1] இதனால் நிலப்பரப்பின் மீது உள்ள காற்று சூடேறி, காற்றில் உள்ள ஈரப்பதம் ஆவியாகி எடை குறைந்து வளிமண்டலத்தின் மேலே சென்றுவிடுவதால் நிலப்பரப்பின் மீது காற்றின் அழுத்தம் குறைவாகக் காணப்படுகிறது.

அதே பகல் நேரத்தில் கடற்பரப்பின் மீது படும் சூரிய வெப்பம் நீருக்குள் ஆழமாக ஊடுருவி செல்வதால் நீா்ப்பரப்பு மெதுவாக சூடேறுகிறது. அப்பொழுது நிலப்பரப்பைக் காட்டிலும் நீா்ப்பரப்பின் மீது குறைவான வெப்பம் காரணமாகக் காற்றின் அழுத்தம் அதிகமாக இருப்பதால், அதிக காற்றழுத்தப் பகுதியான கடற்பகுதியிலிருந்து குறைந்த காற்றழுத்தப் பகுதியான நிலப்பகுதியை நோக்கி காற்று வீசுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. University of Wisconsin. Sea and Land Breezes. Retrieved on 2006-10-24.
  2. JetStream: An Online School For Weather (2008). The Sea Breeze. National Weather Service. Retrieved on 2006-10-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடற்காற்று&oldid=2404570" இருந்து மீள்விக்கப்பட்டது