மிரா அல்பாசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அன்னை - மிர்ரா அல்பாசா (1878-1973)

மிர்ரா அல்பாசா (1878 - 1973) “மிர்ரா மொரிச்செட்”, “மிர்ரா ரிச்சார்ட்” என அழைக்கப்படுவார். “மதர்” எனவும், “அன்னை” எனவும் போற்றப்படும் ஆன்மிகவாதியாவார். இவர் சிறீ அரவிந்தருடன் இணைந்து ஆன்மிகத்தில் ஈடுபட்டார். இவர் பாரிசு மாநகரில் பிறந்தார். இவரின் பெற்றோர்கள் துருக்கி, எகிப்த்து நாட்டினர். இவர் சிறீ அரவிந்தரை மார்ச் 20, 1914ல் புதுச்சேரியில் “ஆர்யா” என்னும் பத்திரிக்கையில் உடன் உதவி புரியவும், தொகுப்புப் பணி செய்யவும் சந்தித்தார். பின் முதலாம் உலகப்போர் காரணமாக புதுச்சேரியை விட்டு ஜப்பான் நாட்டிற்குச் சென்று சில ஆண்டுகள் வாழ்ந்தார். ஜப்பானில் ஸ்ரீ ரவீந்திரநாத் தாகூரை சந்தித்தார். 1920ல் அவர் மீண்டும் புதுச்சேரிக்கு வந்து வசித்தார். 1926 நவம்பர் 24ல் ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தை நிறுவினார். பின்னர் சிறீ அரவிந்தர் தனிமையை மேற்கொண்டதால் சிறீ அரவிந்தர் ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பை வகித்தார். மீரா அவர்களின் வாழ்வின் 30 ஆண்டு கால அனுபவங்கள் தி அஜந்தா என்ற 13 தொகுப்புகள் கொண்ட நூலில் வைக்கப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிரா_அல்பாசா&oldid=2231413" இருந்து மீள்விக்கப்பட்டது