மார்பதியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்பதியம்
ஆங்கில மொழி: Breast implant
ஒரு மருத்துவர் மார்பதியதற்காக குறிக்கும் வீடியோ.
சிறப்புஒட்டுறுப்பு அறுவை மருத்துவம்

மார்பதியம் என்பது செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு உறுப்பு நிகர் பொருளைக் கொண்டு ஒருவரின் மார்பளவு எடுப்பு வடிவம் உள்ளிட்ட அளவீடுகளை மாற்றி அமைப்பதாகும். முலை நீக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும் பிறப்பியல் கோளாறு கொண்டவர்களுக்கும் தங்களின் மார்பகத்தை இயற்கையாகக் காட்ட முலை பெருப்பு அறுவை சிகிச்சையின் மூலம் மார்பதியம் செய்யப்படுகிறது.[1]

பயன்பாடு[தொகு]

முலை பெருப்பு அறுவை சிகிச்சையின் நோக்கங்கள் கீழ்வருமாறு உள்ளன.

 • முதநிலை பெருப்பு: மார்பகத்தின் அளவு எடுப்பு வடிவம் ஆகியவற்றை விருப்பத்திற்கேற்ப மாற்றி அமைத்தல்.[2]

உளவியல் பார்வை[தொகு]

தங்கள் மார்பகங்களை மாற்றி அமைக்க முயல்பவர்களிடத்து சுய கௌரவத்தை மேம்படுத்திக் கொள்வதான காரணம் இருப்பதாக உளவியலாளர்கள் கருதுகின்றனர். உடல்ரீதியான கேலிப் பேச்சுக்கு ஆளாவதாலும் உடலுறவின் போது ஏற்படும் அவமானத்தாலும் கூட இத்தகைய முடிவை சம்பந்தப்பட்டவர் எடுக்கிறார். இத்தகையவர்கள் மன அழுத்தத்தினாலும் குறைந்த தன்னம்பிக்கையினாலும் அவதிக்குள்ளாவதாக கூறப்படுகிறது.[3] [4][5]

சிக்கல்கள்[தொகு]

மயக்க மருந்து ஒவ்வாமை, அதிக இரத்தப் போக்கு, சீழ் வடிதல், அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட புண்ணில் தொற்று ஏற்படல், நீர்க்கோர்த்தல், மார்பகவலி, பாலூட்டுதலில் சிரமம், மார்பக இழையங்கள் சுருங்குதல் மற்றும் மெலிதல், சீர்மை இலாது போதல் போன்று பல்வேறு சிக்கல்கள் கொண்டதாக முலை பெருப்பு அறுவை சிகிச்சை உள்ளது.[6][7][8]

பதியம் அருகிப்போதல்[தொகு]

Implant rupture visualized by Breast-Computertomography
பதியம் அருகிப்போதல் மார்பக-கம்ப்யூட்டர்டோமோகிராபி மூலம் காட்சிப்படுத்தப்பட்டது

பதிக்கப்பட்ட மார்பதியம் காலம் கழிய கழிய தன் இயக்கமிழந்து அருகிப்போக வாய்ப்பிருக்கிறது. ஒரு பதியம் கிழிந்து போனாலோ அரித்து போனாலோ உடனடியாக இன்னொரு அறுவை சிகிச்சை செய்து அதை மாற்றியமைக்க வேண்டும். ஏஸ்டெட்டிக் சர்ஜரி ஜர்னல் நடத்திய பத்தாண்டு ஆய்வில் மார்பதியங்கள் மூன்றாண்டுக்கு மூன்று முதல் ஐந்து சதவீதமும் புத்தாண்டுக்கு ஏழு முதல் பத்து சதவீதமும் அருகிப் போவதாக தெரிய வந்துள்ளது.[9]

அருகிப்போன பதியம்

நாளங்கள் சுருங்கிப்போதல்[தொகு]

மார்பக உள்வைப்பு தோல்வி: காப்ஸ்யூலர் சுருக்கம் என்பது ஒரு மருத்துவ சிக்கலாகும், இந்த விஷயத்தில், வலது மார்பகத்தில் உள்ள சப்கிலாண்டுலர் சிலிகான் உள்வைப்பின் பேக்கர் அளவிலான கிரேடு IV சுருக்கம்.

உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலானது அந்நிய பொருட்களுக்கு எதிராக சில எதிர்வினைகள் ஆற்றும். அவ்வகையில் பதியங்கள் ஒவ்வாத இடத்து, மார்பகம் கடினமாதல், தொட்டாலே வலியுண்டாகல், மேலும் கீழும் சீர்மையின்றி போதல், விறைத்தல் உள்ளிட்ட சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். இது நாளங்கள் சுருங்குவதாலோ பாக்டீரியத் தொற்று பதியத்தில் ஏற்படுவதாலோ இரத்தப்போக்கினாலோ பதியம் கிழிந்து கசிவதாலோ ஏற்படக்கூடும்.[10][11]

மார்பதியதை காட்டும் மார்பு எக்ஸ்ரே

சிகிச்சை முறைமைகள்[தொகு]

கத்தரிப்பு இடங்கள்[தொகு]

அறுவை சிகிச்சை செய்ய மார்பகங்களின் குறிப்பிட்ட இடங்களிலே கீறுவர். முலை கீழ் மடிப்பு, காம்பின் கீழ்ப்பகுதி, அக்குளின் கீழ்ப்பகுதி, தொப்புளுக்கு மேற்பகுதி, அடிவயிறு ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் துளையிட்டு பதியங்களை உள்ளனுப்பி நிரப்புவர். இவற்றுள் முலை கீழ் மடிப்பு, காம்பின் கீழ்ப்பகுதி ஆகிய இடங்களே பதியம் பொருத்தப் பொருத்தமான வழிகளாகக் கருதப்படுகின்றன.[12]

பதியம் பொருத்தும் இடங்கள்[தொகு]

மார்பதிய வைப்பு ஒப்பீடு
துணை சுரப்பி மார்பக உள்வைப்பு வரைபடம்
துணை சுரப்பி மார்பக உள்வைப்பு
சப்பெக்டோரல் மார்பக உள்வைப்பு வரைபடம்
சப்பெக்டோரல் மார்பக உள்வைப்பு
சப்மஸ்குலர் மார்பக உள்வைப்பு வரைபடம்
சப்மஸ்குலர் மார்பக உள்வைப்பு

ஐந்து இடங்கள் பதியம் பொருந்தும் இடங்களாக இருக்கின்றன. மார்பு இழையத்திற்க்கும் மார்பு தசைக்கும் இடைப்பட்ட பகுதி, மார்பு தசைக்கு கீழுள்ள பகுதி, இணைப்பு இழையத்திற்கும் மார்பு தசைக்கும் இடைப்பட்ட பகுதி உள்ளிட்ட இடங்களில் பொருத்தப்படுகின்றன.[13]

மார்பதிய வகைகள்[தொகு]

மொத்தம் மூன்று வகையான மார்பதியங்கள் உள்ளன.

உப்புநீர் மார்பதியம்
சிலிக்கன் மார்பதியம்
 • உப்புநீர் பதியம் : உப்புநீரால் நிரப்பப்படும் பதியம் நிறைக்கு 0.90 விழுக்காடு கொள்ளளவு என்ற விகிதத்தில் கலக்கப்பட்டு பொருத்தப்படுகிறது. இது மென்மையாக இருப்பினும் சிக்கலுக்குரியதாக இருப்பதாலும் கசிய வாய்ப்பிருப்பதாலும் பெரும்பாலும் சிலிக்கான் பதியமே பயன்படுத்தப்படுகிறது.[14]
 • சிலிக்கான் மார்பதியம்: ஐந்து தலைமுறை தரநிலைகளின் கீழ் சிலிக்கான் மார்பதியங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுவே உறுப்புநிகர் பதியத்திற்கு பெரும்பாலும் பயன்படுகிறது.[15]
 • வடிவமைக்கப்பட்ட மார்பதியம்: இத்தகைய மார்பதியங்கள் மார்பகத்தை ஆராய்வதன் மூலம் முறையே அளவீடுகள் வைத்து சிலிக்கன் ஓடுகளையும் உப்புநீர் கரைசலையும் ஒருங்கே பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இத்தகைய பதியங்களை எஃப்.டி.ஏ வும் கனடா நாட்டு அரசாங்கமும் அங்கீகரித்துள்ளன.[16]

பாலூட்டுதல்[தொகு]

முல்லைப் பாகங்கள்.
 1. மார்பகச்சுவர்
 2. மார்பக தசைகள்
 3. மடலிகள்
 4. முலைக்காம்பு
 5. காம்புசூழிடம்
 6. பால் நாளம்
 7. கொழுப்பிழையம்
 8. தோல்

முலை பெருப்பு பாலூட்டலை பாதிக்கும் என்பதற்கான எந்த சாட்சியங்களும் இல்லை. ஆனாலும் முலை பெருப்பு செய்து கொண்டவர்கள் பாலூட்ட அல்லல்படுவதாக தெரிவித்துள்ளனர். பால்நாளங்களையும் காம்புசூழிடத்தையும் முலை பெருப்பு பாதிக்க வாய்ப்புள்ளது.[17][18]

ஒரு சாதாரண மார்பகத்தின் மேமோகிராஃப் (இடது);புற்றுநோய் மார்பகத்தின் மேமோகிராஃப் (வலது).
மார்பதிய (நீலம்) நோயாளியின் மார்பக எம்ஆர்ஐ

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "மார் பெருத்தல் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது - மெடிக்கல் நியூஸ் டுடே வலைத்தள ஆங்கிலக் கட்டுரை".
 2. "முலை பெருப்பு - ஹெல்த்லைன் வலைத்தள ஆங்கிலக் கட்டுரை".
 3. "அழகியல் அறுவை சிகிச்சைகளும் உடலியல் மனக்கோளாறும் - டொய்யார்க் ஆங்கிலக் கட்டுரை".
 4. "டேனிஷ் பெண்களின் தற்கொலைக்கு மார்பக அறுவை சிகிச்சைகள் காரணமா? - டொய்யார்க் ஆங்கிலக் கட்டுரை".
 5. "பெண்களின் மனநிலையும் மார்பக அறுவை மருத்துவமும் - ஃஜெனோடோ ஆங்கில வலைத்தளக் கட்டுரை".
 6. "முலை பெருப்பு அறுவை சிகிச்சையின் சிக்கல்கள் - அரசாங்க இணையத்தளம் ஆங்கிலம்" (PDF). Archived from the original on 2007-01-03. பார்க்கப்பட்ட நாள் 2021-02-27.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
 7. "முலை பெருப்பு அறுவை சிகிச்சையின் பின்விளைவுகள் - டொய்யார்க் ஆங்கிலக் கட்டுரை".
 8. "எஃப்.டி.ஏ - மார்பதியங்களின் சிக்கல்களும் சிரமங்களும் - ஆங்கிலக் கட்டுரை".
 9. "பதியம் பத்தாண்டு ஆய்வு - டொய்யார்க் ஆங்கிலக் கட்டுரை".
 10. "தொடமுடியாமற்போதல் - செமண்ட்டிக் ஸ்க்காலர் ஆங்கில வலைத்தளக் கட்டுரை".
 11. "மார்பக நாளங்கள் சுருங்குதல் - டொய்யார்க் ஆங்கிலக் கட்டுரை".
 12. "கீறும் இடங்கள் - பப்மெட் கட்டுரை".
 13. "பதியம் பொருந்தும் இடங்கள் - டொய்யார்க் ஆங்கிலக் கட்டுரை".
 14. "உப்புநீர் பதியம் - டொய்யார்க் ஆங்கிலக் கட்டுரை".
 15. "சிலிக்கான் மார்பதியம் - டொய்யார்க் ஆங்கிலக் கட்டுரை".
 16. "வடிவமைக்கப்பட்ட மார்பதியம் - அரசாங்க வலைத்தளம் ஆங்கிலக் கட்டுரை".
 17. "பாலூட்ட முடியுமா? - ஸ்லேட்டாட்காம் கட்டுரை".
 18. "பாலூட்டும் முலைப்பெருத்தலும் - லாலெக்லீக் ஆங்கிலக் கட்டுரை". Archived from the original on 2010-12-30. பார்க்கப்பட்ட நாள் 2021-02-27.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
மார்பதியம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்பதியம்&oldid=3640437" இலிருந்து மீள்விக்கப்பட்டது