மார்ட்டின் எய்டெகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்ட்டின் எய்டெகர்
பிறப்புசெப்டம்பர் 26, 1889
மெசுகிர்ச், ஜெர்மனி
இறப்புமே 26, 1976(1976-05-26) (அகவை 86)
பிரைய்பெர்கு, ஜெர்மனி
காலம்20ஆம்-நூற்றாண்டு மெய்யியல்
பகுதிமேற்கத்திய மெய்யியல்
பள்ளிநனவு அனுபவ இயல் · உரை கோட்பாட்டியல் · இருத்தலியல் · கட்டுடைப்பு
முக்கிய ஆர்வங்கள்
உள்ளியம் (மெய்யியல்) · மீவியற்பியல் · கலை · பண்டைய கிரேக்க மெய்யியல் · தொழினுட்பம் · மொழி · கவிதை  · சிந்தித்தல்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
தாசேன் · கெஸ்டெல் · எய்டெகரிய சொல்லியல்
செல்வாக்குக்கு உட்பட்டோர்

மார்ட்டின் எய்டெகர் (Martin Heidegger, 26 செப்டம்பர் 1889 – 26 மே 1976)[1] செருமானிய மெய்யியலாளர்.

இவரது புகழ்பெற்ற நூலான இருத்தலும் நேரமும்(Being and Time) இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த, முதன்மையான மெய்யியல் படைப்பாக கருதப்படுகின்றது.[2][3] இது செருமானிய வாசகர்களுக்குக் கூட மிகக் கடினமான நூலாகும். இதிலும் பிந்தைய ஆக்கங்களிலும் எய்டெகர் நாம் கேள்வி எழுப்புவதே நம்மை வரையறுக்கும் என நிறுவினார். ஆனால் மெய்யியலில் கேள்வி கேட்பதே மேற்கத்திய பண்பாட்டில் மறைந்து வருவதாகக் கருதினார்.

எய்டெகர் இளமையில் வளர்ந்த வீடு
மார்ட்டின் எய்டெகரின் கல்லறை

நாம் முன் முடிவுகளால் வீழ்ந்துள்ளதாகவும் உண்மையை அதனை மறைத்திருக்கும் சேற்றிலிருந்து காணத் தவறி விட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.[4] இவைகளுக்குத் தீர்வாக எய்டெகர் நடைமுறை வாழ்விற்குத் திரும்பப் பரிந்துரைத்தார். இதன்மூலம் உண்மை தன்னை வெளிப்படுத்த அல்லது "மறைவிலிருந்து வெளிவர" இயலும் என நம்பினார்.

எய்டெகர் நாட்சி கட்சி உறுப்பினராகவும் ஆதரவாளராகவும் இருந்தார்.[5][6] எய்டெகரின் மெய்யியல் கோட்பாட்டிற்கும் நாசிசத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன.[7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஒலிப்பு [ˈmaɐ̯tiːn ˈhaɪ̯dɛgɐ]
  2. Heidegger, Martin 2008. Being and time. New York: HarperCollins. ISBN 0-06-157559-3
  3. Lackey, Douglas. 1999. What are the modern classics? The Baruch poll of great philosophy in the twentieth century. Philosophical Forum. 30 (4): 329-46
  4. Heidegger, Martin. 2001. Poetry, language, thought. New York: HarperCollins. ISBN 0-06-093728-9
  5. Farin, Ingo (2016). Reading Heidegger's "Black notebooks 1931—1941. Cambridge, Massachusetts London, England: The MIT Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0262034012. 
  6. Press, The MIT. "Reading Heidegger's Black Notebooks 1931–1941". The MIT Press.
  7. Sharpe, Matthew (2018-10-02). "On Reading Heidegger—After the "Heidegger Case"?". Critical Horizons 19 (4): 334–360. doi:10.1080/14409917.2018.1520514. பன்னாட்டுத் தர தொடர் எண்:1440-9917. 
  8. Fried, Gregory(ed.) (2020). Confronting Heidegger: a Critical Dialogue on Politics and Philosophy. Rowman and Littlefield. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781786611918. https://ndpr.nd.edu/news/confronting-heidegger-a-critical-dialogue-on-politics-and-philosophy/#_ednref2. 

வெளியிணைப்புகள்[தொகு]

ஆவணக் காப்பக தொகுப்பு[தொகு]

எய்டெகரின் படைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ட்டின்_எய்டெகர்&oldid=3291282" இலிருந்து மீள்விக்கப்பட்டது