மாரிமுத்தாப் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மாரிமுத்தாப் பிள்ளை (1712-1787) என்பார் சீர்காழியிலே பிறந்து கருநாடக இசையில் பல இசைப்பாட்டுக்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய இசை முன்னோடி. இவர் கருநாடக இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவருக்கும் முன்னிருந்த ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன. கருநாடக ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் அருணாசலக் கவிராயர் (1712-1779), மாரிமுத்தாப் பிள்ளை, முத்துத் தாண்டவர் (1525-1625).

சிதம்பரம் நடராஜர் மீதான பல பாடல்களை இவர் இயற்றியுள்ளார். அவற்றில் சில:

  1. தில்லை சிதம்பரமே - அல்லால் - வேறில்லை தந்திரமே ... - இராகம்: ஆனந்த பைரவி
  2. தெரிசித்தபேரைப் பரிசுத்தராகச் சிதம்பரமன்றி யுண்டோ... - இராகம்: சௌராஷ்டிரம், தாளம்: ஆதி தாளம்
  3. தெய்வீக ஸ்தலமிந்தத் தில்லை - இந்தவைபோகமெங்கெங்குமில்லை... - இராகம்: பூர்வகல்யாணி, தாளம்: ஏக தாளம்
  4. எந்தத் தலத்தையு மிந்தத் தலத்துக்கிணை, சொல்லக் கூடாதே ஐயன்... - இராகம்: தேவகாந்தாரி, தாளம்: ஆதி தாளம்
  5. எந்நாளும் வாசமாம் சிதம்பரஸ்தலத்திலே, இருக்கத்தவஞ்செய்தே... - இராகம்: பியாகடை, தாளம்: ஆதி தாளம்

உசாத்துணை[தொகு]

  • லேனா தமிழ்வாணன் (பதிப்பாசிரியர்), தமிழ் மும்மணிகளின் கீர்த்தனைகள், மணிமேகலைப் பிரசுரம், சென்னை 600 017, முதற்பதிப்பு 1987. பக்கங்கள் 1-108.
  • மு. அருணாசலம், சித்தாந்தம் என்னும் மாத இதழில் (மாதிகையில்) ஏப்ரல் 1990, பக். 98-99ல் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டபடி முத்துத்தாண்டவர் வாழ்ந்த காலம் 1525-1625.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரிமுத்தாப்_பிள்ளை&oldid=3380342" இருந்து மீள்விக்கப்பட்டது