மான் புக்கர் பன்னாட்டுப் பரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொதுநலவாய நாடுகள், அயர்லாந்து, சிம்பாப்வே எழுத்தாளர்களுக்கு மட்டும் ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசு குறித்து அறிய, காண்க மான் புக்கர் பரிசு.
மான் புக்கர் பன்னாட்டுப் பரிசு
Ismail Kadare.jpg
முதன்முதலில் இப்பரிசு வென்ற இசுமாயில் காதர்
விருதுக்கான
காரணம்
சிறந்த ஆங்கில (அல்லது ஆங்கில மொழிமாற்றத்திற்குரிய) புனைகதை
வழங்கியவர் மான் குழுமம்
நாடு ஐக்கிய இராச்சியம்
முதலாவது விருது 2005
அதிகாரபூர்வ தளம்

மான் புக்கர் பன்னாட்டுப் பரிசு (Man Booker International Prize) இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை பன்னாட்டளவில் வழங்கப்படும் இலக்கிய விருதுகளில் ஒன்றாகும். இது எந்த நாட்டினராக இருப்பினும் ஆங்கிலத்தில் பதிப்பிக்கப்பட்ட அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பு பதிப்பிக்கப்பட்டுள்ள ஆக்கத்திற்காக வாழும் எழுத்தாளர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது.[1]

இந்தப் பன்னாட்டுப் பரிசு சூன் 2004ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது.[2] மான் குழுமத்தினால் வழங்கப்படும் இந்தப் பரிசு, மான் புக்கர் பரிசினை முழுமையாக்குவதோடு உலகளவில் ஒரு எழுத்தாளரின் "தொடர்ந்த புத்தாக்கம், புனைகதைக்குப் பங்காற்றல் மற்றும் வளர்ச்சிக்கு "[3] பரிசளிக்கிறது. எனவே இது ஒரு எழுத்தாளரின் ஆக்கத்தொகுதிக்கான பரிசு; ஒரு புதினத்திற்கு அல்ல.[1] நடுவர்கள் ஆண்டுக்கான தங்கள் தேர்வுப் பட்டியலைத் தாங்களே தொகுக்கின்றனர்;விண்ணப்பங்கள் அழைக்கப்படுவதில்லை.[1]

மேற்சான்றுகள்[தொகு]