கீதாஞ்சலி சிறீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீதாஞ்சலி சிறீ
Geetanjali Shree
கீதாஞ்சலி சிறீ (பிப்ரவரி 2010)
கீதாஞ்சலி சிறீ (பிப்ரவரி 2010)
பிறப்பு1957 (அகவை 66–67)
வகைநாவல்கள், சிறுகதைகள்
குறிப்பிடத்தக்க விருதுகள்மான் புக்கர் பன்னாட்டுப் பரிசு

கீதாஞ்சலி சிறீ (Geetanjali Shree) இந்தியாவின் புது தில்லியில் வாழும் ஓர் இந்தி மொழி நாவலாசிரியரும் சிறுகதை எழுத்தாளரும் ஆவார். கீதாஞ்சலி பாண்டே என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். 1957 ஆம் ஆண்டில் பிறந்த இவர் தாயார் பெயரின் முதல் பகுதியான சிறீயை தனது பெயரான கீதாஞ்சலியுடன் இரண்டாவது பகுதியாக இணைத்துக் கொண்டார். பல சிறுகதைகள் மற்றும் ஐந்து நாவல்களை எழுதியுள்ளார். 2000 ஆமாவது ஆண்டில் கீதாஞ்சலி எழுதிய நாவலான் மாய் என்ற நாவல் 2001 ஆம் ஆண்டின் குறுக்கெழுத்து புத்தக விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் நியோகி புத்தக நிறுவனம் மூலம் மீண்டும் வெளியிடப்பட்டது. நாவலை நிதா குமார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 2022 ஆம் ஆண்டில், டெய்சி ராக்வெல் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதிய இவரது நாவலான ரெட் சமாதி (2018) ஆங்கிலத்தில் மணற்கல்லறை என்ற பொருளில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நூல் 2022 ஆம் ஆண்டுக்கான பன்னாட்டு அளவிலான புக்கர் பரிசை வென்றது.[1][2][3]. இந்நாவல் இந்தியப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு குடும்பக் கதையாகும். கணவர் இறந்த பிறகு வாழும் 80 வயதான ஒரு பெண்ணை நாவல் பின்தொடர்கிறது. பிரேம்சந்த் பற்றிய விமர்சனப் படைப்பையும் கீதாஞ்சலி எழுதியுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

தந்தை ஓர் அரசு ஊழியர் என்பதால் கீதாஞ்சலி உத்தரபிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் வளர்க்கப்பட்டார். உத்திரபிரதேசத்தில் குழந்தைகளுக்கான ஆங்கிலப் புத்தகங்கள் அதிக அளவில் இல்லாததால் இந்தி மொழியுடன் தனக்கு சிறந்த தொடர்பு ஏற்பட்டதாக கீதாஞ்சலி கூறுகிறார்.[4]

படைப்புகள்[தொகு]

1987 ஆம் ஆண்டு வெளியான பெல் பத்ரா என்பது இவரது முதல் கதையாகும். ஆன்சு என்ற இலக்கிய இதழில் இக்கதை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அனுகூஞ்ச் என்ற சிறுகதைத் தொகுப்பும் 1991 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.[4][5][6]

இவரது மாய் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இவரைப் புகழ் பெறச் செய்தது. இந்த நாவல் வட இந்திய நடுத்தரக் குடும்பத்தில் உள்ள மூன்று தலைமுறை பெண்களையும் அவர்களைச் சுற்றியுள்ள ஆண்களையும் பற்றியதாகும். செர்பியன் மற்றும் கொரியன் உட்பட பல மொழிகளில் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நிதா குமார் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்புப் பரிசு பெற்றது. பசீர் உன்வானால் உருதுவில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்திசர் உசைன் இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளார்.[4] நாவலின் பிற மொழிபெயர்ப்புகளில் அன்னி மாண்டாட்டின் பிரெஞ்சு மொழியிலும் இரெய்ன் ஓல்ட்டு சீனின் செருமன் மொழியிலும் இந்நாவலை மொழிபெயர்த்துள்ளனர். பாபர் மசூதி இடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு தளர்வாக எழுதப்பட்டஅமாரா சகர் உசு பராசு என்பது கீதாஞ்சலியின் இரண்டாவது நாவலாகும்.[4]

இவரது நான்காவது நாவலான காலி இயாகா (2006) ஆங்கிலத்தில் நிவேதிதா மேனனால் தி எம்ப்டி இசுபேசு என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது. இதே நாவல் பிரஞ்சு மற்றும் செருமானிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

ஐந்தாவது நாவலான, ரெட் சமாதி (2018), முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பரந்த கற்பனை மற்றும் மொழியின் ஆற்றல் ஆகியவற்றிற்காகப் பாராட்டப்பட்டது.[7] டெய்சி ராக்வெல் என்பவரால் டோம்ப் ஆஃப் சாண்ட் என ஆங்கிலத்திலும், ஆன்னி மான்டாட் என்பவரால் ஆவ்-டெல்லா டி லா ஃப்ரான்டியேர் என பிரெஞ்சு மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 26 மே 2022 அன்று, டோம்ப் ஆஃப் சாண்ட் நூலுக்கு புக்கர் பரிசு வழங்கப்பட்டது. புக்கர் பரிசு வென்ற இந்தியில் முதல் புத்தகமாகவும், இந்திய எழுத்தாளர் ஒருவரிடமிருந்து பாராட்டைப் பெற்ற முதல் புத்தகமாகவும் ஆனது.[8]

கல்வி வெளியீடுகள்[தொகு]

 • இரு உலகங்களுக்கு இடையே: பிரேம்சந்தின் அறிவுசார் வாழ்க்கை வரலாறு[9]
 • பிரேம்சந்து மற்றும் தொழில்துறை: தெளிவற்ற மனப்பாங்கு[10]
 • பிரேம்சந்த் மற்றும் விவசாயி: கட்டுப்படுத்தப்பட்ட தீவிரவாதம்[11]
 • வட இந்திய நுண்ணறிவர் மற்றும் இந்து-முசுலிம் கேள்வி[12]

விருதுகள்[தொகு]

கீதாஞ்சலி சிறீ இந்து சர்மா கதா சம்மான் விருதைப் பெற்றுள்ளார்.[6] இந்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் சப்பான் அறக்கட்டளையின் சக உறுப்பினராக இருந்துள்ளார். எழுத்தாளர்கள், கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் ஓவியர்களை உள்ளடக்கிய நாடகக் குழுவான விவாடியுடன் இணைந்து இவர் நாடகத்திலும் பங்கேற்கிறார்.2022 ஆம் ஆண்டில், மணற் கல்லறை நூலுக்காக புக்கர் பரிசை வென்றார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Tomb of Sand | The Booker Prizes". thebookerprizes.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-27.
 2. "First novel translated from Hindi wins International Booker prize". The Guardian (in ஆங்கிலம்). 2022-05-26. பார்க்கப்பட்ட நாள் 2022-05-26.
 3. "சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய மொழி எழுத்தாளர் கீதாஞ்சலிஸ்ரீ". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2022-05-27.
 4. 4.0 4.1 4.2 4.3 'I'm Waiting To Write The Book Which Will Slip Out Of My Grasp' Interview with Geetanjali Shree in Outlook India
 5. Mai: A Novel, Kali for Women, 2000. Via Google Books.
 6. 6.0 6.1 The past is ever present, realized by us in bits: An interview with Geetanjali Shree Deep Blue Ink
 7. Geetanjali, Shree. "Painting The Ordinary In Myriad Extraordinary Hues". The Book Review India.
 8. Knight, Lucy (7 April 2022). "International Booker prize shortlist delivers 'awe and exhilaration'". The Guardian. https://www.theguardian.com/books/2022/apr/07/international-booker-prize-shortlist. 
 9. Between Two Worlds Google Books
 10. The Indian Economic and Social History Review, XIX(2), 1982, Sage Publications.
 11. ICSSR journal of abstracts and reviews Google Books
 12. "The North Indian Intelligentsia and the Hindu-Muslim Question", Bibliography of Asian studies.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதாஞ்சலி_சிறீ&oldid=3441428" இலிருந்து மீள்விக்கப்பட்டது