மர்ஃபியின் விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

”தவறக் கூடியது அனைத்தும் தவறும்” என்று கூறுகிறது மர்ஃபியின் விதி (Murphy's law). அமெரிக்க வான்படை பொறியியலாளர் எட்வர்ட் மர்ஃபி என்பவரின் பெயரால் இது வழங்கப்படுகிறது. மர்ஃபி அமெரிக்க வான்படை ஊர்திகளில் பாதுகாப்பு முறைகளையும் எந்திரங்களையும் வடிவமைக்கும் பிரிவில் பணிபுரிந்தவர். அவற்றை வடிவமைக்கும் போது கிட்டிய பட்டறிவினால் அவர் உருவாக்கிய பழமொழியே மர்ஃபியின் விதியாக மாறியது. இதே பொருள் கொண்ட பழமொழிகள் முன்பே வேறுபல இடங்களிலும் காலங்களிலும் வழங்கப்பட்டிருந்தாலும் மர்ஃபியின் பெயரே அதற்கு நிலைத்து விட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மர்ஃபியின்_விதி&oldid=2786271" இருந்து மீள்விக்கப்பட்டது