உள்ளடக்கத்துக்குச் செல்

மதுரைப் பாறைப்பல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Filozoa
மதுரைப் பாறைப்பல்லி
கெமிடாக்டைலசு மல்டிசல்கேடசு
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
செதிலுடைய ஊர்வன
குடும்பம்:
ஜிகோனிடே
பேரினம்:
கெமிடாக்டைலசு
இனம்:
H. multisulcatus
இருசொற் பெயரீடு
Hemidactylus multisulcatus
சையத் மற்றும் பலர் 2023[1]

மதுரைப் பாறைப்பல்லி (Madurai Rock Gecko)(கெமிடாக்டைலசு மல்டிசல்கேடசு) என்பது 2023-ஆம் ஆண்டு மதுரை நாகமலைப் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டறிந்த பாறையில் வாழும் பல்லியாகும்.[2] வீட்டுப்பல்லியின் பேரினத்தின்கீழ் வரும் இவ்வினம் தனிச்சிறப்பியல்புகளைப் பெற்றுள்ளது. பொதுவாக இப்பேரினத்தைச் சேர்ந்த பல்லிகள் நஞ்சற்றவை. மனிதர்களுக்குத் தீங்கு ஏற்படுத்தக் கூடியவை அல்ல. இவை இரவில் இரைதேடுவதைக் கண்டுள்ளனர்.

தோற்றம்[தொகு]

மதுரைப் பாறைப்பல்லிகளின் குறிப்பிடத்தக்க அடையாளம் மேற்புறத் தோல் நெடுகவுள்ள சிப்பி வடிவ குருக்கள். இவை 84 மில்லி மீட்டர் நீளம் வளரக்கூடியவை. மேற்புறம் பழுப்பு நிறத்திலிருக்கும். கழுத்துக்கும் பின்னங்கால்களுக்கும் இடையே நான்கு மஞ்சட்பழுப்புப் பட்டைகளைக் காணலாம். தலைப்பகுதியின் மேற்புறம் அடர்பழுப்பாக இருக்கும். வாலின் மேற்புறத்தில் 9 அல்லது 10 பழுப்புப் பட்டைகள் காணப்படுகின்றன. தலைமுதல் பின்னங்கால்கள்வரை கீழ்ப்பகுதி வெள்ளையாக இருக்கிறது. வாலின் அடிப்பகுதி பழுப்பில் மஞ்சட்பட்டைகளுடன் காணப்படுகிறது.[1]

பரம்பல்[தொகு]

மதுரைப் பாறைப்பல்லிகள் தற்போது மதுரை மாவட்டம் நாகமலையிலுள்ள சவெநா கல்லூரிக்கருகில் மட்டுமே காணப்பட்டுள்ளன.[1] இவற்றின் பரம்பல் எவ்வளவு எனத் தெரியவில்லை எனினும் சற்று வடக்கே சிறுமலைப் பாறைப்பல்லியும், மேற்கே மேகமலைப் பாறைப்பல்லியும் தெற்கில் திருவிதாங்கூர் பாறைப்பல்லியும், திருநெல்வேலி பாறைப்பல்லியும் காணப்பெறுகின்றன. இப்பல்லி இவற்றிலிருந்து தனித்த இனமாகக் கண்டறியப்பட்டுள்ளதால் இது மதுரைப் பகுதியைச் சேர்ந்த அகணிய உயிரினமாக இருக்கக் கூடும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Amit Sayyed, Samson Kirubakaran, Rahul Khot, Omkar Adhikari, Ayaan Sayyed, Masum Sayyed, Jayaditya Purkayastha, Shubhankar Deshpande, Shauri Sulakhe, (July 2023). "A new species of the genus Hemidactylus Goldfuss, 1820 (Squamata: Gekkonidae) from Tamil Nadu, India" (in English). Asian Journal of Conservation Biology 12 (1): 100-110. doi:10.53562/ajcb.82582. பன்னாட்டுத் தர தொடர் எண்:2278-7666. https://www.researchgate.net/publication/372807266_A_new_species_of_the_genus_Hemidactylus_Goldfuss_1820_Squamata_Gekkonidae_from_Tamil_Nadu_India. 
  2. Pflughoeft, Aspen (2023-08-10). "Spiky creature found hunting at night on college campus in India. It's a new species". Miami Herald. https://www.miamiherald.com/news/nation-world/world/article278104372.html. 
  3. Pal, Saunak; Miza, Zeeshan A. (2022-03-30). "A New Species of Large-Bodied Gecko of The Genus Hemidactylus Goldfuss, 1820 from Southern Western Ghats of Tamil Nadu, India". Journal of the Bombay Natural History Society (JBNHS) (Bombay Natural History Society) 119 (0). doi:10.17087/jbnhs/2022/v119/167364. பன்னாட்டுத் தர தொடர் எண்:2454-1095. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரைப்_பாறைப்பல்லி&oldid=3822054" இலிருந்து மீள்விக்கப்பட்டது