திருவிதாங்கூர் பாறைப்பல்லி
Appearance
திருவிதாங்கூர் பாறைப்பல்லி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | செதிலுடைய ஊர்வன
|
குடும்பம்: | ஜிகோனிடே
|
பேரினம்: | கெமிடாக்டைலசு
|
இனம்: | H. paaragowli
|
இருசொற் பெயரீடு | |
Hemidactylus paaragowli சிறீகந்தன், சுவாமி, மோகன், & பால், 2018[1] |
திருவிதாங்கூர் பாறைப்பல்லி (Hemidactylus paaragowli)(கெமிடாக்டைலசு பாறாகெளலி) என்பது கெமிடாக்டைலசு பேரினத்தினைச் சார்ந்த தரைப்பல்லிச் சிற்றினம் ஆகும். இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தெற்குப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[2]
விளக்கம்
[தொகு]கெமிடாக்டைலசு பேரினத்தைச் சேர்ந்த பெரிய அளவிலான இந்த தரைப்பல்லி 124.4 மி.மீ. நீளம் உடையது.[3]
திருவிதாங்கூர் பாறைப்பல்லியின் சிற்றினப் பெயர் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளிலிருந்து பெறப்பட்டது. கெ. பாறாகௌலி வசிக்கும் வாழ்விடத்தின் அடிப்படையில் பெயரிடப்பட்டது. அதாவது பெரிய பாறைகளில் வசிப்பதால்; பாறா (பாறை) என்றால் ஆங்கிலத்தில் ‘ராக்’ என்றும் மற்றும் கௌலி என்றால் ’ஜிக்கோ’ என இந்த இரண்டு மொழிகளிலும் பொருள்படுகிறது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ SRIKANTHAN, ACHYUTHAN N.; PRIYANKA SWAMY, ASHWINI V. MOHAN, SAUNAK PAL 2018. A distinct new species of riparian rock-dwelling gecko (genus: Hemidactylus) from the southern Western Ghats. Zootaxa 4434 (1): 141–157
- ↑ Hemidactylus paaragowli at the Reptarium.cz Reptile Database. Accessed 15 August 2016.
- ↑ Amarasinghe, A.A. Thasun; Suranjan Karunarathna, Patrick D. Campbell, Majintha Madawala, Anslem de Silva 2021. A New Species of Hemidactylus Goldfuss, 1820 (Reptilia: Gekkonidae) from Sri Lanka with Redescription of H. hunae Deraniyagala, 1937,. Herpetologica 77 (3): 259-272
- ↑ Zimin, A., Zimin, S. V., Shine, R., Avila, L., Bauer, A., Böhm, M., Brown, R., Barki, G., de Oliveira Caetano, G. H., Castro Herrera, F., Chapple, D. G., Chirio, L., Colli, G. R., Doan, T. M., Glaw, F., Grismer, L. L., Itescu, Y., Kraus, F., LeBreton 2022. A global analysis of viviparity in squamates highlights its prevalence in cold climates. Global Ecology and Biogeography, 00, 1–16