மஞ்சள் முகக் குக்குறுவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சள் முகக் குக்குறுவான்
இலங்கையில் சிங்கராஜக் காட்டில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்: மெய்க்கருவுயிரி
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: பறவை
வரிசை: பிசிபார்மிசு
குடும்பம்: மெகாலேமிடே
பேரினம்: சைலோபோகன்
இனம்: சை. பிளவிப்ரான்சு
இருசொற் பெயரீடு
சைலோபோகன் பிளவிப்ரான்சு
குவியெர், 1816
வேறு பெயர்கள்

மெகாலைமா பிளவிப்ரான்சு

மஞ்சள் முகக் குக்குறுவான் (Yellow-fronted barbet)(சைலோபோகன் பிளவிப்ரான்சு) என்பது ஒரு ஆசியக் குக்குறுவான் பேரினத்தினைச் சார்ந்த சிற்றினம் ஆகும். இது இலங்கையில் காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது மிதவெப்பமண்டல மற்றும் வெப்பமண்டல ஈரமான காடுகள், ஈரநிலங்கள், தோட்டங்கள் மற்றும் கிராமப்புற தோட்டங்களில் 2,000 m (6,600 அடி) உயரம் வரை வாழ்கிறது.[1] இது மஞ்சள் நிற கிரீடத்துடன் பச்சை நிற இறகுகள் மற்றும் கண்களுக்குக் கீழே, தொண்டை மற்றும் கன்னத்தில் நீல நிற திட்டுகள் கொண்டது. இது 21–22 cm (8.3–8.7 அங்) நீளமும் 57–60 g (2.0–2.1 oz) எடையும் உடையது. இது பெர்ரி, பழங்கள் மற்றும் எப்போதாவது பூச்சிகளை உணவாக உட்கொள்கிறது. இது மரத்தின் துளையில் கூடு கட்டுகிறது. இங்கு இது 2-3 முட்டைகளை இடுகிறது.[2]

கலாச்சாரத்தில்[தொகு]

இலங்கையில் இந்தப் பறவை சிங்கள மொழியில் මූකලන් කොට්ටෝරුවා - மூகலன் கொட்டோருவா என்று அழைக்கப்படுகிறது.[3] 5 ரூபாய் இலங்கை அஞ்சல் முத்திரையில் மஞ்சள் நிற முகமுள்ள குக்குறுவான் படம் அச்சிடப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 BirdLife International (2016). "Psilopogon flavifrons". IUCN Red List of Threatened Species 2016: e.T22681625A92914908. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22681625A92914908.en. https://www.iucnredlist.org/species/22681625/92914908. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. Short, L. L.; Horne, J. F. M. (2020). "Yellow-fronted Barbet (Psilopogon flavifrons)". in del Hoyo, J.. Handbook of the Birds of the World and BirdLife International Illustrated Checklist of the Birds of the World. 7: Jacamars to Woodpeckers. Barcelona, Spain and Cambridge, UK: Lynx Edicions and BirdLife International. doi:10.2173/bow.yefbar1.01. https://www.hbw.com/species/yellow-fronted-barbet-psilopogon-flavifrons. 
  3. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 1 April 2010. பார்க்கப்பட்ட நாள் 13 July 2009.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. "Birds on stamps: Sri Lanka".