மஞ்சள் தொண்டை காட்டுச்சில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சள் தொண்டை காட்டுச்சில்லை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எம்பெரிசிடே
பேரினம்:
எம்பெரிசா
இனம்:
எ. எலிகன்சு
இருசொற் பெயரீடு
எம்பெரிசா எலிகன்சு
(தெம்னிக், 1835)

மஞ்சள் தொண்டை காட்டுச்சில்லை (Yellow-throated bunting)(எம்பெரிசா எலிகன்சு)[2] என்பது எம்பெரிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும்.

இது சீனா, சப்பான், கொரியா, மியான்மர், உருசியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் காடுகள் ஆகும்.

எம்பெரிசா எலிகன்சு வகை II சங்கிலி வலசைப்போதலைப் பின்பற்றுகிறது. இந்தப் பறவைகளின் இறகுகளில் மேற்கொள்ளப்பட்ட ஓரகத்தனிமங்கள் ஆராய்ச்சி, தெற்கில் வாழும் பறவைகள் வடக்கு வாழும் பறவைகளுக்கு முன்னதாகவே வலசைப்போதலைத் தொடங்குகிறது. கூடுதலாக, ஐதரசன் ஓரகத்தனிமங்களில் உள்ள அட்சரேகை வாட்ட விகிதம், வடக்கு இனப்பெருக்கம் செய்பவை தங்கள் தெற்கு சகாக்களை விட வடக்கே குளிர்காலத்தை அதிகம் செலவிடுகின்றன என்று கூறுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2018). "Emberiza elegans". IUCN Red List of Threatened Species 2018: e.T22720963A132005507. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22720963A132005507.en. https://www.iucnredlist.org/species/22720963/132005507. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. Brazil, Mark.
  3. Choi, Chang-Yong; Nam, Hyun-Young; Park, Jong-Gil; Bing, Gi-Chang (2020-03-03). "Migration pattern of Yellow-throated buntings revealed by isotope-based geographic assignment" (in en). International Journal of Geographical Information Science 34 (3): 504–519. doi:10.1080/13658816.2019.1670832. பன்னாட்டுத் தர தொடர் எண்:1365-8816. https://www.tandfonline.com/doi/full/10.1080/13658816.2019.1670832. 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Emberiza elegans
என்பதில் ஊடகங்கள் உள்ளன.