மங்கள கௌரி கோயில்

ஆள்கூறுகள்: 24°46′30.5″N 85°00′08.3″E / 24.775139°N 85.002306°E / 24.775139; 85.002306
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மங்கள கௌரி கோயில்
பீகார், கயா மாவட்டத்திலுள்ள மங்கள கௌரி கோயில்
மங்கள கௌரி கோயில் is located in பீகார்
மங்கள கௌரி கோயில்
பீகார்-இல் உள்ள இடம்
மங்கள கௌரி கோயில் is located in இந்தியா
மங்கள கௌரி கோயில்
மங்கள கௌரி கோயில் (இந்தியா)
மங்கள கௌரி கோயில் is located in ஆசியா
மங்கள கௌரி கோயில்
மங்கள கௌரி கோயில் (ஆசியா)
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:பீகார்
மாவட்டம்:கயா
அமைவு:சக்தி பீடம்
ஏற்றம்:134 m (440 அடி)
ஆள்கூறுகள்:24°46′30.5″N 85°00′08.3″E / 24.775139°N 85.002306°E / 24.775139; 85.002306
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:இந்தியக் குடைவரைக் கோயில் பாணி
கல்வெட்டுகள்:சக்தி பீடங்கள்
வரலாறு
அமைத்தவர்:மாதா கிரி ஜி மகராஜ் (பாபா தண்டி சுவாமி)

மங்கள கௌரி கோயில் (ஆங்கிலம் :The Mangla Gauri temple) ( இந்தி: मां मंगलागौरी मंदिर ) சக்தி பீடத்தில், ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள கயா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பார்வதி தேவி எனும் சக்தி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பத்ம புராணம், வாயு புராணம் மற்றும் அக்னி புராணம், தேவி பாகவத புராணம், மார்க்கண்டேய புராணம் மற்ற வேதங்கள் மற்றும் தாந்த்ரீக நூல்களில் இக்கோயில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆலயம் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் ஒன்றாக உள்ளது. தற்போதுள்ள கோயில் 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கயாவின் பிரதான வைஷ்ணவர்களின் புனித யாத்திரை மையத்தில் சதி அல்லது சக்தி தேவிக்காக இந்த ஆலயம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மங்களகௌரி கருணையின் தெய்வமாக வணங்கப்படுகிறார். இந்த கோவில் ஒரு உப-சக்தி பீடமாக உள்ளது. புராணங்களின்படி சதியின் உடலின் ஒரு பகுதி இங்கு (மார்பகம்) விழுந்ததாக நம்பப்படுகிறது. இங்குள்ள துர்கையிடம் தனது விருப்பங்கள் மற்றும் பிரார்த்தனைகளுடன் வருபவர்களின், அனைத்து பிரார்த்தனைகள் மற்றும் விருப்பங்கள் வெற்றிகரமாக நிறைவேறுகிறது என்று நம்பப்படுகிறது.

மங்களகௌரி கோயில், மலையின் உச்சியில் கிழக்கு திசை நோக்கியவாறு கட்டப்பட்டுள்ளது. படிகள் மற்றும் வாகனம் செல்லக்கூடிய சாலை இக்கோயிலை அடைவதற்கு வழிவகுக்கிறது. இந்த கோயிலின் கருவறையில் தேவியின் சின்னம் உள்ளது. மேலும், சில நுணுக்கமாக செதுக்கப்பட்ட பழங்கால சிற்பங்கள் உள்ளன. கோயிலின் முன் ஒரு சிறிய மண்டபம் உள்ளது. இங்கு யாகம் செய்வதற்கு ஒரு யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.

கோயில் வளாகம் காளி, விநாயகர், அனுமன் மற்றும் சிவன் கோயில்களை உள்ளடக்கியதாகும்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கள_கௌரி_கோயில்&oldid=3890284" இலிருந்து மீள்விக்கப்பட்டது