மக்ளீன் பூங்கா
அரங்கத் தகவல் | |||
---|---|---|---|
அமைவிடம் | நேப்பியர், நியூசிலாந்து | ||
ஆள்கூறுகள் | 39°30′7″S 176°54′46″E / 39.50194°S 176.91278°E | ||
உருவாக்கம் | 1911[1] | ||
இருக்கைகள் | 22,500 | ||
உரிமையாளர் | நேப்பியர் நகர மன்றம் | ||
இயக்குநர் | நேப்பியர் நகர மன்றம் | ||
குத்தகையாளர் | அரிகேன்சு (சூப்பர் இரக்பி) ஆக்சு பே இரக்பி யூனியன் (ஐடிஎம் கோப்பை) சென்ட்ரல் இசுடாக்சு (மாநில போட்டி/மாநில ஷீல்டு/மாநில இருபது20) | ||
முடிவுகளின் பெயர்கள் | |||
நூற்றாண்டு அமர்மேடை முனை மேட்டுக்கரை முனை | |||
பன்னாட்டுத் தகவல் | |||
முதல் தேர்வு | 16 பெப்ரவரி 1979: நியூசிலாந்து எ பாக்கித்தான் | ||
கடைசித் தேர்வு | 26 சனவரி 2012: நியூசிலாந்து எ சிம்பாப்வே | ||
முதல் ஒநாப | 19 மார்ச் 1982: நியூசிலாந்து எ இலங்கை | ||
கடைசி ஒநாப | 9 பெப்ரவரி 2013: நியூசிலாந்து எ இங்கிலாந்து | ||
அணித் தகவல் | |||
| |||
12 பெப்ரவரி 2012 இல் உள்ள தரவு மூலம்: கிரிக்இன்ஃபோ |
மக்ளீன் பூங்கா (McLean Park), நியூசிலாந்தின் நேப்பியரில் அமைந்துள்ள விளையாட்டரங்கமாகும். இங்கு விளையாடப்படும் இரு முதன்மையான விளையாட்டுக்கள், துடுப்பாட்டமும் இரக்பி யூனியனும் ஆகும். நியூசிலாந்திலுள்ள துடுப்பாட்டத்திற்குப் பொருத்தமான பத்து அரங்கங்களில் இதுவும் ஒன்றாகவுள்ளது.
பன்னாட்டு சீர்தரத்தில் உள்ள மகளீன் பூங்காவில் முதன்மையான வெளியரங்க விளையாட்டரங்கமும், ரோட்னி கிரீன் நூற்றாண்டு நிகழ்வு மையம் என்ற உள்ளரங்கு விளையாட்டரங்கமும் உள்ளன. இதனை ஆக்சு பே இரக்பி யூனியனும் நடுவண் மாவட்டங்கள் துடுப்பாட்ட சங்கமும் தாயக அரங்கமாக கொண்டுள்ளன. பந்து வீச்சாளர்கள் நூற்றாண்டு மேடை முனையிலிருந்தும் மேட்டுக்கரை முனையிலிருந்தும் பந்து வீசுகின்றனர். பன்னாட்டு நாள் கோட்டிற்கு அண்மையில் உள்ளதால் உலகின் மிகவும் கிழக்கில் அமைந்துள்ள தேர்வுப் போட்டி அரங்கமாக விளங்குகின்றது.