உள்ளடக்கத்துக்குச் செல்

பன்னாட்டு நாள் கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்னாட்டு நாள் கோடு - 180° அருகே

பன்னாட்டு நாள் கோடு (International Date Line, IDL) என்பது புவியின் பரப்பின் மீது பொதுவான வடக்கு-தெற்காக, பசிபிக் பெருங்கடலின் மையத்தில் செல்லுமாறு கற்பனைசெய்யப்பட்டுள்ள ஓர் கோடு ஆகும். இதுவே ஒவ்வொரு நாட்காட்டி நாளும் தொடங்கும் இடமாக வரையறுக்கப்படுகிறது. இது பெரும்பாலும் 180° நில நிரைக்கோட்டில் அமைந்துள்ள போதும் சில ஆட்சிப்பகுதிகள் மற்றும் தீவுகளின் எல்லைகளைச் சுற்றிச் செல்லுமாறு வளைந்து செல்கிறது.

கிழக்கிலிருந்து பயணிக்கும்போது பன்னாட்டு நாட்கோட்டை தாண்டுகையில் ஒரு நாள் அல்லது 24 மணி நேரம் கழிக்கப்படுகிறது- பயணி மேற்கில் அந்நாளை மீண்டும் கழிக்கிறார். அதேநேரம் மேற்கிலிருந்து கிழக்கில் தாண்டுகையில் ஒரு நாள் அல்லது 24 மணி நேரம் கூட்டப்படும் - பயணி ஒருநாளை இழக்கிறார். இந்தக் கோடு கற்பனையாக இருந்தபோதும் நிலையான கால எல்லையை புவிப்பரப்பில் வரையறுக்க மிகவும் தேவைப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னாட்டு_நாள்_கோடு&oldid=2521743" இலிருந்து மீள்விக்கப்பட்டது