உள்ளடக்கத்துக்குச் செல்

மகுவா மொயித்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகுவா மொயித்திரா
கோவாவில் மகுவா மொயித்திரா, 2021
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
23 மே 2019 – 8 டிசம்பர் 2023
முன்னையவர்தபாஸ் பவுல்
தொகுதிகிருஷ்ணா நகர்
மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2016 – 23 மே 2019
முன்னையவர்சமரேந்திரநாத் கோஷ்
தொகுதிகரீம்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 மே 1975
இந்தியாஇந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
வேலைஅரசியல்வாதி

மகுவா மொயித்திரா (Mahua Moitra, பிறப்பு: 5 மே 1975) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மேற்கு வங்காளத்தின் கிருஷ்ணநகரில் இருந்து பதினேழாவது மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சி வேட்பாளராக 2019இல் நடநத இந்திய பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மொய்த்ரா 2016 முதல் 2019 வரை கரிம்பூருக்கான மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.[2] கடந்த சில ஆண்டுகளாக திரிணாமூல் காங்கிரசின் பொதுச் செயலாளராகவும் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றினார். இவர் அரசியலில் நுழைவதற்கு முன்பு வங்கியாளராகப் பணியாற்றினார்.[3]

கல்வி

[தொகு]

மொய்த்ரா தன் பள்ளிப்படிப்பை கொல்கத்தாவில் முடித்தார். பின்னர் அமெரிக்காவின் மாசசூசெட்சின், சவுத் ஹாட்லியில் உள்ள மவுண்ட் ஹோல்யோக் கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் கணிதத்தில் பட்டம் பெற்றார்.[4]

தொழில்

[தொகு]

மொய்த்ரா நியூயார்க் நகரம் மற்றும் இலண்டனில் ஜே.பி மார்கன் சேஸ் வங்கியின் துணைத் தலைவராக பணியாற்றினார். இந்திய அரசியலில் நுழைவதற்காக 2009 இல் வங்கயில் தான் வகித்த துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.[5] அதைத் தொடர்ந்து, இந்திய தேசிய காங்கிரசின் இளைஞர் பிரிவான இந்திய இளைஞர் காங்கிரசில் இணைந்து, ராகுல் காந்தியின் நம்பிக்கைப் பெற்ற பேசாசாளராக விளங்கினார். 'காங்கிரசின் கை சாதாரண மக்களின் கை. காங்கிரசு பொதுமக்களின் சிப்பாய்' என்ற முழக்கத்தை வங்க இளைஞர்களிடம் பிரபலமாக்கினார். பின்னர் உட்கட்சிப் பூசலால் 2010 இல், இவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியில் இணைந்தார்.[5] மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள கரிம்பூர் தொகுதியில் இருந்து 2016 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6][7]

கேள்வி கேட்க கையூட்டு

[தொகு]

இந்திய நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி கேட்க கையூட்டு பெற்றதாக மஹுவா மொய்த்ரா மீது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் நிஷிகாந்த் துபே சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அளித்துள்ள புகார் மீது நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு 26 அக்டோபர் 2023 அன்று விசாரிக்கிறது. புகாரின் சாரமானது மஹுவா மொய்த்ரா இதுவரை மக்களவையில் கேட்டுள்ள 61 கேள்விகளில், 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை. விசாரணையில் மெஹுவா மொய்த்திரா லஞ்சம் பெற்றது யாரிடம் என்பது குறித்து தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.[8][9]

பதவி நீக்கம்

[தொகு]

பணம் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக கூறப்படும் குற்றச்சாட்டில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா டிசம்பர் 2023-ல் மக்களவை உறுப்பினர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருடைய மக்களவை எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் திரிணமூல் எம்பி மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து பாஜக எம்.பி., வினோத் குமாா் சோன்கா் தலைமையிலான மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை நவம்பர் 9-ஆம் தேதி வெளியிட்டது. அந்த அறிக்கையில், மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்யப் பரிந்துரைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்யக் கூறும் மக்களவை நெறிமுறைக் குழு பரிந்துரை 8 டிசம்பர் 2023 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவால் மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.[10]

குறிப்புகள்

[தொகு]
  1. "Who is Mahua Moitra?". The Indian Express (in Indian English). 2019-06-27. பார்க்கப்பட்ட நாள் 2019-06-28.
  2. "West Bengal 2016 Mahua Moitra (Winner) Karimpur". MyNeta. பார்க்கப்பட்ட நாள் 5 June 2016.
  3. "Ex-investment banker Mahua Moitra has assets of over Rs 2.5 cr". India Today. பார்க்கப்பட்ட நாள் 5 June 2016.
  4. "#RightSideUp: 'Shri Ram, the Secret of BJP’s Energy'; Mahua Moitra, 'the Outsider'". The Wire. https://thewire.in/media/rightsideup-shri-ram-bjp-mahua-moitra. பார்த்த நாள்: 11 July 2019. 
  5. 5.0 5.1 Bhattacharya, Ravik (11 May 2010). "Key Youth Cong face in Bengal flirts with Trinamool". Indian Express Archives. பார்க்கப்பட்ட நாள் July 19, 2017. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  6. "Winner and Runner up Candidate in Karimpur assembly constituency". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 5 June 2016.
  7. "Mahua Moitra Karimpur". Ndtv. பார்க்கப்பட்ட நாள் 5 June 2016.
  8. பார்லி.,யில் கேள்வி கேட்க திரிணமுல் எம்.பி., லஞ்சம்: லோக்சபா குழு அக்.,26ல் விசாரணை
  9. Appropriate decision after probe': TMC on cash-for-query
  10. மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவி பறிப்பு: கேள்வி கேட்க பணம் பெற்ற குற்றச்சாட்டில் நடவடிக்கை

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகுவா_மொயித்திரா&oldid=3843830" இலிருந்து மீள்விக்கப்பட்டது