மகம் (நகரம்)
மகம் Maham | |
---|---|
நகரம், சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 28°59′N 76°18′E / 28.98°N 76.3°E | |
நாடு | ![]() |
மாநிலம் | அரியானா |
மாவட்டம் | ரோத்தக் |
ஏற்றம் | 214 m (702 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 18,166 |
மொழிகள் | |
• ளதிகாரபூர்வமானவை | இந்தி, பிராந்திய அரியான்வி |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | IN-HR |
வாகனப் பதிவு | HR 15 |
இணையதளம் | haryana |
மகம் (இந்தி: महम, மஹம், Maham) இந்திய மாநிலமான அரியானாவில் ரோத்தக் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இது ரோத்தக் மாவட்டத்தின் இரண்டு துணைப்பிரிவுகளில் ஒன்று. இது மேலும் மகம் மற்றும் லகான்-மஜ்ரா என இரண்டு சமூக மேம்பாட்டு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
நிலவியல்[தொகு]
இதன் ஆயக்கட்டுகள் 28°59′N 76°18′E / 28.98°N 76.3°E . [1] இதன் சராசரி உயரம் 214 மீட்டர் (702 அடி). இந்திய தேசிய நெடுஞ்சாலை 9 இல் அமைந்துள்ள இது இந்தியாவின் அரியானா மாநிலத்தில் தில்லி மற்றும் சிர்சா நகரங்களுக்கு இடையில் ஒரு முக்கிய நிறுத்தமாகும்.
மக்கள் தொகையியல்[தொகு]
மகம் நகரம் அரியானாவின் ரோத்தக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ரோத்தக் மாவட்டத்தின் முக்கிய துணைப்பிரிவான இது நகரிலிருந்து மேற்கில் முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது அரியானா சட்டமன்றத்திற்கான ஒரு தொகுதியைக் கொண்டுள்ள சொந்த நகராட்சி. மேஹமில் சுமார் 30 கிராமங்கள் உள்ளன. மேலும், நகரின் கிழக்கு பகுதியில் ரோத்தக் சாலையில் சிறிய செயலகம் உள்ளது.
2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு [2] இதன் மக்கள் தொகை 18,166 என்று தெரிவிக்கிறது. மக்கள் தொகையில் 54% ஆண்கள் மற்றும் பெண்கள் 46% ஆகும். மேஹமின் சராசரி கல்வியறிவு விகிதம் 66% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். ஆண் கல்வியறிவு 72% மற்றும் பெண் கல்வியறிவு 59% என உள்ளது. மக்கள் தொகையில் 15% ஆறு வயதுக்குட்பட்டவர்கள். இதன் முழு நகர்ப்புற பகுதி 20,483 மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. 10,817 ஆண்கள்; 9,661 பெண்கள்; மற்றும் 5 பிற வகையினர்.
சிந்து சமவெளி நாகரிக தளங்கள்[தொகு]
நகரின் மேற்கு விளிம்பில் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பெரிய மணல் திட்டுகள் உள்ளன. பண்டைய காலங்களில், இப்பகுதியின் பெயர் மகாஹதம் ஆகும். சிந்து சமவெளி நாகரிகத்தில் இரண்டு பெரிய குளங்கள் மற்றும் சுமார் பன்னிரு சிறிய நீர்த் தேக்கங்கள் ஓடும் மழைநீரைப் பிடிக்க உருவாக்கப்பட்டன, அவை அடுத்த மழைப்பொழிவு வரை முழு ஆண்டு நீடிக்கும். மகத்தின் பகுதியைப் பற்றி அந்த கலாச்சாரத்தின் சில கட்டுக்கதைகள் உள்ளன. பன்னிரு கிராமத் தோட்டங்களின் பரப்பளவைப் பற்றி இப்பகுதியில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்புகளை அளித்துள்ளன. குறிப்பாக, அவை ஹரப்பாவுக்கு முந்தைய குடியேற்றங்களான, மதீனா மற்றும் ஃபர்மனா காஸ் ஆகியவற்றை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. புனேவில் உள்ள டெக்கான் முதுகலை கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் வசந்த் ஷிண்டே, ரோத்தக்கிலுள்ள மகர்ஷி தயானந்த் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் பிற ஜப்பானிய விஞ்ஞானிகள் இந்த தொல்பொருள் கண்டுபிடிப்புகளை ஆராய்ந்தனர்.
முகலாய ஆட்சியில்[தொகு]
முகலாயப் பேரரசு காலத்தின் போது மேஹம் ஒரு செழிப்பான நகரமாக இருந்தது.
மகம் கோட்டை[தொகு]
முகலாயர்கள் மகத்தில் ஒரு காவற்படைத் தலைவரை நியமித்து, ஒரு சிறிய கோட்டையைக் கட்டினார். இது இப்போது அதன் கோபுரங்களைத் தவிர முழுமையான இடிந்து விழும் நிலையில் உள்ளது.
பள்ளி வாசல்கள்[தொகு]
ஜமா பள்ளி வாசல் மற்றும் பிர்சாதா பள்ளி வாசல் ஆகிய இரண்டு பள்ளி வாசல்கள் முகலாய காலத்தில் கட்டப்பட்டவை. தற்போது இவை இடிந்து நிலையில் உள்ளன. அவற்றில் சில பகுதிகள் கிராமவாசிகளால் இடிக்கப்பட்டு, கையால் தயாரிக்கப்பட்ட உலர்ந்த மாட்டு சாணம் (அரியான்வியில் உப்பிள் மற்றும் கோஸ்ஸே என அழைக்கப்படுகிறது) அல்லது சமைப்பதற்காக சுல்ஹாவில் (அடுப்புகளில்) எரிபொருளாக தயாரிக்கப்படுகின்றன.