போர்னியோ கரும் பட்டை அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர்னியோ கரும் பட்டை அணில்
கின்னாபாலு பூங்கா (மலேசியா)-வில் கா. ஓரிசுடெசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சையுரிடே
பேரினம்:
காலோசியரசு
இனம்:
கா ஓரிசுடெசு
இருசொற் பெயரீடு
காலோசியரசு ஓரிசுடெசு
ஓல்டு பீல்டு தாமசு, 1895

போர்னியோ கரும் பட்டை அணில் (Borneo black-banded squirrel)(காலோசியரசு ஓரிசுடெசு) என்பது சையூரிடே குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும். இது வடக்கு போர்னியோவில் காணப்படும் அகணிய உயிரி.[1]

பரவல்[தொகு]

இந்த சிற்றினம் வடக்கு போர்னியோவில் நடுத்தர உயரத்தில் காணப்படுகிறது. இது ஜி. துலிட்டிடமிருந்து அறியப்பட்டது ( 1,000 மீட்டர்கள் (3,300 அடி). மேலும் உசுன் அபாவ், கெலாபிட் ஹைலேண்ட்ஸ் மற்றும் மேல் எசு. டெருசன், வடக்கு சரவாக்கில் உள்ள அனைத்து மலைப்பகுதிகளிலும் இதே உயரத்தில் காணப்படுவது ஆய்வுகள் மூலம் அறியப்பட்டது. இது கினாபாலு மலைகளிலும் (1,000–1,700 மீட்டர்கள் (3,300–5,600 அடி) துருஸ்மாடி மலை (சுமார் 1,500 மீட்டர்கள் (4,900 அடி) ) சபாவிலும் காணப்படுகிறது. இது கீழ் மலைக் காடுகளுக்கும் மேல் டிப்டெரோகார்ப் காடுகளுக்கும் இடையே காணப்படுகிறது.

நடத்தை மற்றும் சூழலியல்[தொகு]

மேல் பகுதி பழுப்பு நிறப் புள்ளிகளுடன் ஒவ்வொரு காதுகளுக்குப் பின்னும் ஒரு வெளிர் புள்ளியுடன் காணப்படும். அடிப்பகுதி சாம்பல் நிறமாகவும், சில நேரங்களில் சிவப்பு நிறத்துடன் இருக்கும். இது கருப்பு மற்றும் வெள்ளை பக்க பட்டையையும் கொண்டுள்ளது. காலோசையூரசு ஓரிசுடெசு பகலாடி வகையினைச் சார்ந்தது. இவை சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மரங்களில் காணப்படும்.

பாதுகாப்பு நிலை[தொகு]

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அச்சுறுத்தப்பட்ட இனங்களின் அடிப்படையில், காலோசையூரசு ஓரிசுடெசு தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் ஆகும். இது பரந்த அளவிலான நடுத்தர மலைவாழ் இனமாக இருப்பதால் தீவாய்ப்புக் கவலைக் குறைந்த கவலை இனம் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Lee, B.P.Y-H.; Tizard, R.J. (2016). "Callosciurus orestes". IUCN Red List of Threatened Species 2016: e.T3601A22253873. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T3601A22253873.en. https://www.iucnredlist.org/species/3601/22253873. பார்த்த நாள்: 12 November 2021. 
  • Thorington, R. W. Jr. and R. S. Hoffman. 2005. Family Sciuridae. pp. 754–818 in Mammal Species of the World a Taxonomic and Geographic Reference. D. E. Wilson and D. M. Reeder eds. Johns Hopkins University Press, Baltimore.
  • Payne, J., C. M. Francis, and K. Phillipps 1985. A field guide to the mammals of Borneo. Kota Kinabalu: The Sabah Society