சாதாரண அவரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பொது அவரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சாதாரண அவரை
A flat-podded variety of the common bean
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
இனக்குழு:
பேரினம்:
இனம்:
P. vulgaris
இருசொற் பெயரீடு
Phaseolus vulgaris
L.
வேறு பெயர்கள் [2]
  • Phaseolus aborigineus Burkart
  • Phaseolus communis Pritz.
  • Phaseolus compressus DC.
  • Phaseolus esculentus Salisb.
  • Phaseolus nanus L.
பொது அவரைப் பூக்கள்
அவரை பயிரிடும்வகைகள் விளக்கம், Les plantes potagères (1891 Vilmorin-Andrieux et Cie வரிசைப் பட்டியல்)
உலர்ந்த பொது அவரைக்கொட்டையின் பலவகைகள்

பொது அவரை (Phaseolus vulgaris) அல்லது இயல்பு அவரை (common bean)[3] அல்லது பச்சை அவரை, பிரெஞ்சு அவரை, அல்லது[4].[5] என்பது ஆண்டுக்கொரு முறை உலகமெங்கும் பயிரிடும் கொடிவகப் பயிராகும். அவரைக் கொட்டையை முதிராத பச்சைக் காயாகவும் முதிர்விதையை நன்கு உலர்த்தியும் பயன்படுத்துகின்றனர். அவரையின் முதன்மைப் பயன்பாட்டு வகைகளாக அவரைக்கொட்டையும் (முதிர்விதைகள்) விதையும் விதையுறையும் உருவாகாத அவரைக்காய், பச்சை அவரைப் பருப்பு அல்லது முதிர் அவரைக்கொட்டை ஆகியன அமைகின்றன. சிலபோது இதன் இலைகளும் கீரையாகப் பயன்கொள்வதுண்டு. அவரைப் பொட்டு தீவனமாகப் பயன்படுகிறது. இது அவரை, பட்டாணிப் பருப்புக் குடும்பத்தைச் சேர்ந்தது. இது தன் வேர்க்குச்சுயிரிகள் வழியாக தழைச்சத்தை (காலகத்தை) பெற்று மண்னில் நிலைப்படுத்துகிறது. இந்நிகழ்வு காலக நிலைப்பாடு எனப்படுகிறது.

பொது அவரை நெடுங்காலமாகப் பயிரிடும் மிகவும் வேறுபாடுள்ள பல இனங்களைக் கொண்டுள்ளது. இதன்அனைத்துக் காட்டுவகைகளும் கொடிகளாகப் படர்கின்ற இயல்பு கொண்டன.[6] இதன் பயிரிடும்வகைகள் வளர்ச்சியைச் சார்ந்து புதர் அவரை' அல்லதுr குற்றவரை அல்லது கொம்பவரை அல்லது கொடியவரை எனப்படுகின்றன. இதில் சிறுநீரக அவரை, வான் அவரை, கொப்பவரை, மெழுகவரை ஆகியனவும் அடங்கும்.[5] வணிகவியலாக பயிரிடப்படும் மற்ர அவரைக்களாக கொடியவரை (பேசியோலசு காக்கினியசு) அகலவரை (விசியாஃபாபா (Vicia faba)) ஆகியனவாகும். இது அண்டார்க்டிகா தவிர்த்த அனைத்துக் கண்டங்களிலும் பயிரிடப்படுகிறது. உலகளாவிய நிலையில், 2016 இல் 27 மில்லியன் டன் உலர் அவரையும் 24 மில்லியன் டன் பச்சையாகப் பயன்படுத்தும் அவரைக்காயும் பயிரிடப்பட்டுள்ளன.[7] மயன்மார் 2016 இல் பேரளவில் அவரைக்கொட்டையை விளைவித்தது; சீனா 79% அளவுக்கு அவரைக்காயை விளைவித்தது.

பேசியோலசு காட்டுவகை அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டவையாகும். இது முதன்முதலில் அமெரிக்க இடைப்பகுதியிலும் தெற்கே ஆண்டிசு வட்டாரத்திலும் தனித்தனியாக வீட்டினமக்கப்பட்டதால் இருவக மரபன் தேக்கங்களைக் கொண்டுள்ளது.[8] என்றாலும் அண்மை மரபியல் ஆய்வுகள் இது முதலில் அமெரிக்க நடுப்பகுத்தில் முதலில் தோன்றிப் பிறகே பரங்கிக்காய், சோளத்துடன் தெற்காக நகர்ந்துள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த மூன்றும் (அவரையும் பரங்கிக்காயும் மக்காச்சோளமும்) அமெரிக்கத் தாயக மக்களால் வேளாண்மையின் மூன்று அக்காத் தங்கைகள் என அழைக்கப்படுகிறது.

விளைச்சல்[தொகு]

உலளாவிய நிலையில், அவரைக்காய் 2016 இல் 23.6 மில்லியன் டன் விளைந்தது. இதில் சீனா மட்டும் மொத்தத்தில் 79% அளவுக்கு விளைவித்தது (பட்டியல்). உலளாவிய நிலையில், அவரைக்கொட்டை 2016 இல் 26.8 மில்லியன் டன் விளைந்தது. இதில் பெரும்பங்கை மயன்மார், இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் விளைவித்தன (பட்டியல்).

அவரைக் கொட்டை விளைச்சல் – 2016
நாடு (மில்லியன் டன்களில்)
 மியான்மர் 5.2
 இந்தியா 3.9
 பிரேசில் 2.6
 ஐக்கிய அமெரிக்கா 1.2
 தன்சானியா 1.2
 சீனா 1.1
 மெக்சிக்கோ 1.1
உலக அளவில்
26.8
Source:பன்னாட்டவையின்FAOSTAT புள்ளிவிவரம்[7]

அவரைக்காய் விளைச்சல் – 2016
Country (மில்லியன் டன்களில்)
 சீனா 18.7
 இந்தோனேசியா 0.9
 துருக்கி 0.7
 இந்தியா 0.7
உலக அளவில்
23.6
Source: பன்னாட்டவையின்FAOSTAT புள்ளிவிவரம்[7]

பிற பயன்பாடுகள்[தொகு]

அவரையிலைகள் வீடுகளில் உள்ள மூட்டைப்பூச்சிகளைப் பிடிக்க அல்லது கட்டுபடுத்த பயன்படுகின்றன.[9] Microscopic hairs (trichomes) on the bean leaves entrap the insects.[9]

பண்டைய காலத்தில் இருந்து அவரை பலவகை தெய்வமேறல் அல்லது வெறி அயர்தல் (சாமியாட்டம்) முறைகளுக்குப் பயன்பட்டு வருகிறது. அவரையைப் பயன்படுத்திக் குறிசொல்லுதல் அவரைச்சுட்டல் எனப்படும்.

அடிக்குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Delgado-Salinas, A.; Alejandre-Iturbide, G.; Azurdia, C.; Cerén-López, J.; Contreras, A. (2020). "Phaseolus vulgaris". IUCN Red List of Threatened Species 2020: e.T71777161A173264641. doi:10.2305/IUCN.UK.2020-2.RLTS.T71777161A173264641.en. https://www.iucnredlist.org/species/71777161/173264641. பார்த்த நாள்: 11 November 2022. 
  2. "The Plant List: A Working List of All Plant Species".
  3. Gentry, Howard Scott (1969). "Origin of the Common Bean, Phaseolus vulgaris". Economic Botany (New York: New York Botanical Garden Press) 23 (1): 55–69. doi:10.1007/BF02862972. 
  4. வயல் அவரை, flageolet bean, தோட்ட அவரை, காரிகாட் அவரை, பொறி அவரை, அவரைக்காய், பச்சை அவரைக்காய், அல்லது சர அவரை
  5. 5.0 5.1
  6. Phillips, R.; Rix, M. (1993). Vegetables. New York: Random House. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780679750246. https://books.google.com/books/about/Vegetables.html?id=DKVFAAAAYAAJ. 
  7. 7.0 7.1 7.2 "Green bean production in 2016, Crops/Regions/World list/Production Quantity (pick lists)". UN Food and Agriculture Organization, Corporate Statistical Database (FAOSTAT). 2017. பார்க்கப்பட்ட நாள் 27 September 2018.
  8. Paul Gepts (December 1998). "Origin and evolution of common bean: past events and recent trends". HortScience 33 (7): 1124–1130. doi:10.21273/HORTSCI.33.7.1124. http://hortsci.ashspublications.org/content/33/7/1124.full.pdf+html. 
  9. 9.0 9.1 Szyndler, M.W.; Haynes, K.F.; Potter, M.F.; Corn, R.M.; Loudon, C. (2013). "Entrapment of bed bugs by leaf trichomes inspires microfabrication of biomimetic surfaces". Journal of the Royal Society Interface 10 (83): 20130174. doi:10.1098/rsif.2013.0174. பன்னாட்டுத் தர தொடர் எண்:1742-5662. பப்மெட்:23576783. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Phaseolus vulgaris
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதாரண_அவரை&oldid=3929680" இலிருந்து மீள்விக்கப்பட்டது