உள்ளடக்கத்துக்குச் செல்

பொதுத் திருமுகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொதுத் திருமுகங்கள்: பெயர் விளக்கம்

[தொகு]
கி.பி.1723இல் தரங்கம்பாடியில் அச்சான தமிழ் விவிலியப் பகுதி நூலின் படிமம்.


புதிய ஏற்பாட்டில் உள்ள திருமுகங்களுள் பவுலோடு தொடர்புபடுத்தப்பட்டு வந்த திருமுகங்கள் பதினான்கு. அவை[1]:


உரோமையர்,
1 கொரிந்தியர்,
2 கொரிந்தியர்,
கலாத்தியர்,
எபேசியர்,
பிலிப்பியர்,
கொலோசையர்,
1 தெசலோனிக்கர்,
2 தெசலோனிக்கர்,
1 திமொத்தேயு,
2 திமொத்தேயு,
தீத்து,
பிலமோன்,
எபிரேயர் என்பனவாகும்.

மேற்கூறிய பதினான்கு திருமுகங்கள் தவிர்த்த பிற ஏழு திருமுகங்களும் பொதுத் திருமுகங்கள்[2] எனப்படுகின்றன. இவை:


யாக்கோபு,
1 பேதுரு,
2 பேதுரு,
1 யோவான்,
2 யோவான்,
3 யோவான்,
யூதா என்னும் திருமுகங்கள் ஆகும்.

பொதுத் திருமுகங்களின் பண்புகள்

[தொகு]

பொதுத் திருமுகங்கள் குறிப்பிட்ட சபைக்கு என இல்லாமல், பொதுவாக அனைத்துலகத் திருச்சபைக்கும் எழுதப்பட்டுள்ளதால் பொதுத் திருமுகங்கள் எனப்படுகின்றன[3]. ஆயினும்.எல்லாப் பொதுத் திருமுகங்களும்.அனைத்துலகத் திருச்சபைக்கு எழுதப்பட்டவை எனக் கூற இயலாது. மூன்றாம் யோவான் திருமுகம் தனிப்பட்ட ஒரு நபருக்கு எழுதப்பட்டது. இரண்டாம் யோவான் திருமுகம் தனிப்பட்ட ஒரு சபைக்கு எழுதப்பட்டது. பேதுருவின் முதல் திருமுகம் சின்ன ஆசியாவிலுள்ள பல சபைகளுக்கு எழுதப்பட்டுள்ளது. எனினும் பழங்காலத்திலிருந்தே இவை பொதுத் திருமுகங்கள் எனப் பெயர் பெற்று வந்துள்ளன.

ஆதாரங்கள்

[தொகு]
  1. பவுல் எழுதிய மடல்கள்
  2. பொதுத் திருமுகங்கள்
  3. கத்தோலிக்க கலைக் களஞ்சியம் - பொதுத் திருமுகங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொதுத்_திருமுகங்கள்&oldid=1479530" இலிருந்து மீள்விக்கப்பட்டது