உள்ளடக்கத்துக்குச் செல்

பேருவளை

ஆள்கூறுகள்: 6°28′N 79°59′E / 6.467°N 79.983°E / 6.467; 79.983
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேருவளை
බේරුවල
Beruwala
நகரம்
வேர்விலை கெச்சிமலை பள்ளிவாசல் (இலங்கையின் பழைமையான பள்ளிவாசல்களில் ஒன்று)
வேர்விலை கெச்சிமலை பள்ளிவாசல் (இலங்கையின் பழைமையான பள்ளிவாசல்களில் ஒன்று)
பேருவளை is located in இலங்கை
பேருவளை
பேருவளை
Location in Sri Lanka
ஆள்கூறுகள்: 6°28′N 79°59′E / 6.467°N 79.983°E / 6.467; 79.983
CountrySri Lanka
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்களுத்துறை மாவட்டம்
பி.செயலகம்பேருவளை
அரசு
 • நகர சபைபேருவளை நகரசபை
மக்கள்தொகை
 (2012)
 • நகர்ப்புறம்
33,053
 • பெருநகர்
1,13,364 (பேருவளை பிரதேசம்)
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)
இடக் குறியீடு034

பேருவளை (Beruwala, சிங்களம்: බේරුවල), என்பது இலங்கையின் தென்மேற்குக் கரையில் அமைந்துள்ள ஒரு உல்லாச நகரமாகும். இது வேர்விலை, அல்லது வேருவளை என்றும் அழைக்கப்படுகிறது. இந்நகரத்திலேயே இலங்கைத் தீவில் முதன் முதலாக கிபி 8ம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் வணிகர்களாக வந்திறங்கினார்கள். முஸ்லிம்கள் இப்போதும் இங்கு, குறிப்பாக "சீனக்கோட்டை" எனப்படும் இடத்தில் பெருமளவில் வாழ்கின்றார்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் இரத்தினக்கல் வணிகர்களாவர்.

இலங்கையின் மிகப்பழமையான பள்ளிவாசல்களில் ஒன்றான "அல் அப்ரார்" என்ற பள்ளிவாசல் இங்கு அமைந்துள்ளது. இந்நகரத்தின் மலைப்பாங்கான இடத்தில் அரபுக்களால் இப்பள்ளிவாசல் கட்டப்பட்டது. இலங்கையின் மிகப்பழமையான பெண்கள் பள்ளியான "அல்-பசியத்துல் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் வித்தியாலயம்" இங்கு அமைந்துள்ளது. இப்பள்ளி 2004 ஆண்டில் நிகந்த ஆழிப்பேரலையில் சேதமுற்றது.

வெளிச்சவீடு

[தொகு]

பேருவளையில் உள்ள வெளிச்சவீடு 1890 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது 150 அடி உயரமும், மேற்பக்கம் தட்டையான கிறனைட்டுக் கற்களால் அமைக்கப்பட்டதாகும். இக்கோபுரம் தலைநகர் கொழும்பிலிருந்து தெற்கே 55 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் ஒளிச்சமிக்ஞை 20 செக்கன்களுக்கு ஒரு முறை வெள்ளை ஒளியை ஒளிருகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ராஜீவன் (27 சூன் 2010). "காங்கேயன் வந்திறங்கிய துறை காங்கேசன்துறை!". தினகரன். Archived from the original on 28 சனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 29 சூலை 2017.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேருவளை&oldid=3935628" இலிருந்து மீள்விக்கப்பட்டது