பேரன்பு (தொலைக்காட்சித் தொடர்)
பேரன்பு | |
---|---|
வகை | |
திரைக்கதை | சக்தி ஜெகன் |
இயக்கம் |
|
நடிப்பு |
|
இசை | சுங்கந்த் ஜோ |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 2 |
அத்தியாயங்கள் | 597 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் |
|
ஓட்டம் | தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
தயாரிப்பு நிறுவனங்கள் |
|
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜீ தமிழ் |
ஒளிபரப்பான காலம் | 13 திசம்பர் 2021 11 நவம்பர் 2023 | –
பேரன்பு என்பது 13 டிசம்பர் 2021 அன்று ஜீ தமிழில் திங்கள் முதல் சனி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்ப செய்யப்பட்டு, தற்போது திங்கள் முதல் சனி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பான குடும்ப பின்னணியைக் கொண்ட காதல் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இந்தத் தொடரில் ஷமிதா ஸ்ரீகுமார், விமல் வெங்கடேசன், அக்ஷிதா அசோக்[2] ஆகியோருடன் வைஷ்ணவி அருள்மொழி கதாநாயகியாக நடித்துள்ளார்கள்.[3][4] இந்த தொடரின் இறுதி அத்தியாயம் 11 நவம்பர் 2023 அன்று ஒளிபரப்பப்பாகி, 597 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
கதைச் சுருக்கம்
[தொகு]ராஜ ராஜேஸ்வரி, தனது வருங்கால மருமகள் அன்பாகவும் அக்கறையுடனும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார், எனவே ஆர்த்தியை (வானதியின் தங்கை) நிராகரித்து வானதியை கார்த்திக்கிற்கு மனைவியாக தேர்வு செய்கிறார்.[5] வானதிக்கு கார்த்திக்கை திருமணம் செய்து கொள்கிறார். பிறகு ராஜேஸ்வரி, புதுமணத் தம்பதிகளுக்கு இடையே உள்ள மாறுபட்ட குணாதிசயங்களால் ஏற்படும் அசௌகரியத்தை உணர்ந்து, தம்பதியரை சேர்த்து வைக்க உதவுகிறார்.[6]
நடிகர்கள்
[தொகு]- வைஷ்ணவி அருள்மொழி - வானதி கார்த்தி: கார்த்திக்கின் மனைவி; ராஜேஸ்வரியின் 1வது மருமகள்
- ஷமிதா ஸ்ரீகுமார் - ராஜ ராஜேஸ்வரி: கார்த்திக், ஜீவா மற்றும் ஸ்வேதாவின் தாய்: வானதி மற்றும் ஆர்த்தியின் மாமியார்
- விமல் வெங்கடேசன் - கார்த்தி: வானதியின் கணவர்; ஆர்த்தியின் முன்னாள் காதலன்; ராஜேஸ்வரியின் மகன்
- அக்ஷிதா அசோக் - ஆர்த்தி: ஜீவாவின் மனைவி; ராஜேஸ்வரியின் 2வது மருமகள்
- பிரணவ் மோகனன் - ஜீவா: ஆர்த்தியின் கணவர்; ராஜேஸ்வரியின் இரண்டாவது மகன்; கார்த்திக்கின் தம்பி
- லட்சுமி - அமுதா: வானதியின் வளர்ப்புத் தாய்; ஆர்த்தியின் தாய்
- சிவக்குமார் - சுந்தரம்: அமுதாவின் கணவர்
- ரவிசங்கர் - ராஜேஸ்வரியின் கணவராக: கார்த்திக், ஜீவா மற்றும் ஸ்வேதாவின் தந்தை
- சாய்ரா பானு - ஸ்வேதா: ராஜேஸ்வரியின் மகள்
நடிகர்களின் தேர்வு
[தொகு]நாம் இருவர் நமக்கிருவர் சீரியலில் நாயகனுக்கு தங்கையாக நடித்து பிரபலமானவர் வைஷ்ணவி. பேரன்பு என்னும் சீரியல் மூலம் ஜீ தமிழில் நாயகியாக அறிமுகமானார். நாயகனாக விமல் வெங்கடேசன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் 'ஊர் வம்பு' லட்சுமி, அக்ஷிதா அசோக், 'மெளன ராகம்' சீரியலில் வில்லியாக மிரட்டிய ஷமிதா ஆகியோர் நடிக்கின்றனர்.[7]
மதிப்பீடுகள்
[தொகு]கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்
ஆண்டு | மிகக் குறைந்த மதிப்பீடுகள் | மிக உயர்ந்த மதிப்பீடுகள் |
---|---|---|
2021 | 2.4% | 2.85% |
2022 | 1.9% | 2.4% |
1.7% | 2.3% |
சர்வதேச ஒளிபரப்பு
[தொகு]- இந்த தொடர் ஜீ தமிழ் மற்றும் ஜீ தமிழ் எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.[8]
- இந்த தொடரின் பகுதிகள் ஜீ5 என்ற இணைய மூலமாகவும் பார்க்கலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள 'பேரன்பு' சீரியல் - ப்ரோமோவை பார்த்து உற்சாகமான ரசிகர்கள்!". tamil.examsdaily.in.
- ↑ "பேரன்பு சீரியல் நடிகை அக்ஷிதா போட்டோஸ்". News18tamil.com.
- ↑ "பேரன்பு சீரியல்: மெகா திருமண வைபவம்.. வானதி மற்றும் கார்த்திக்கு கல்யாணம் நடந்ததா?". tamil.news18.com.
- ↑ "மாமியாருக்கு எதிராக சாட்சி சொல்வாரா வானதி? பேரன்பு சீரியலில் காத்திருக்கும் செம ட்விஸ்ட்!". Zeenewstamil.
- ↑ "ஜீ தமிழ் டிவியில் மெகா திருமண வைபவம் ..." cinema.dinamalar.com.
- ↑ "புது சீரியல்களை களமிறக்கும் ஜீ தமிழ்.. மத்த சீரியல் மாதிரி இல்ல.. கதைல பல ட்விஸ்ட் இருக்கு !". tamil.filmibeat.com.
- ↑ "ஜீ தமிழின் புது சீரியல் 'பேரன்பு'.. ப்ரொமோ இதோ". tamil.samayam.com.
- ↑ "பேரன்பு - ஜீ5".
வெளி இணைப்புகள்
[தொகு]- ஜீ தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழ் குடும்பத் தொலைக்காட்சி தொடர்கள்
- தமிழ் காதல் தொலைக்காட்சி நாடகங்கள்
- 2020களில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2021 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தெலுங்கில் இருந்து மறு-ஆக்கம் செய்யப்பட்ட தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்கள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2023 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்