பேட்டா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பேட்டா
சுவரிதழ்
இயக்கம்இந்திரகுமார்
தயாரிப்புஇந்திரகுமார்
அசோக்
கதைகமலேஷ் (வசனங்கள்)
நௌசீர்[1]
திரைக்கதைகியான்தேவ் அக்னிஹோத்திரி,
ராஜீவ்,
பிரபுல்
இசைஆனந்த்-மிலின்ட்
நடிப்புஅனில் கபூர்
மாதுரி தீட்சித்
அருணா இரானி
லக்ஷ்மிகாந்
அனுபம் கெர்
ஒளிப்பதிவுபாபா ஆச்சுமி
படத்தொகுப்புஹுசேன்
கலையகம்மாருதி இன்டர்நேசனல்
வெளியீடுஏப்ரல் 3, 1992 (1992-04-03)
ஓட்டம்172 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி

பேட்டா (இந்தி மொழிபெயர்ப்பு: மகன்) 1992 இல் வெளிவந்த இந்தித் திரைப்படமாகும். இப்படத்தை இந்திரகுமார் இயக்கியுள்ளார். இதன் கதையை நெளசர் கட்டாவ் மற்றும் கமலேஷ் பாண்டே ஆகிய இருவரும் இணைந்து எழுதியிருந்தனர். இத திரைப்படத்தில்அனில் கபூர், மாதுரி தீட்சித் மற்றும் அருணா இரானி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் 1987 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான எங்க சின்ன ராசா, என்றத் தமிழ்த் திரைப்படத்தின் மறு ஆக்கமாகும். எங்க சின்ன ராசா கன்னடத்தில் அன்னைய்யாவாகவும், தெலுங்கில் அப்பைகாருவாகவும், ஒரியாவில் சாந்தன் (1998) என்ற பெயரிலும் மறு ஆக்கம் செய்யாப்பட்டது.

'1992 ஆம் ஆண்டில் அதிக வருமானம் ஈட்டிய பாலிவுட் படமாக "பேட்டா" இருந்தது இது ஐந்து பிலிம்பேர் விருதுகளை| வென்றது.. கபூர் மற்றும் தீட்சித் முறையே சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகைக்கான விருதுகளை வென்றனர். "தக் தக் கர்னே லாகா" என்ற குத்தாட்டப் பாடலுக்காக சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதை அனுராதா பாட்வால் வென்றார். சரோஜ் கான் சிறந்த நடனத்திற்கான பிலிம்பேர் விருதையும், ஈரானி சிறந்த துணை நடிகைக்கான விருதையும் வென்றனர்.[2]

பல காரணங்களால் இந்தத் திரைப்படம் பிரபலமானது. ஆரம்பத்தில், ஸ்ரீதேவிக்கு இந்த திரைப்படம் வழங்கப்பட்டது, இயக்குநர் இந்திரகுமார் நடிகை ஸ்ரீதேவிக்கு சரஸ்வதி வேடம் வழங்கப்படவில்லை. இதற்கு முன்பு பல முறை கபூருடன் பல படங்களில் நடித்ததனால் அவர் மறுத்துவிட்டார். ஸ்ரீதேவி மற்றும் சிரஞ்சீவி. நடித்த ஜகதேகா வீரடு அதிலோகா சுந்தரி (1990) என்ற படத்தின் இளையராஜாவின் தெலுங்கு இசையமைப்பான "அப்பனி தீயனி" என்ற பாடலிருந்து இசை நகலெடுக்கப்பட்ட போதிலும், "தக் தக் கர்னே லாகா" என்ற 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான இந்தி பாடல்களில் ஒன்றாக மாறியது. உள்ளது.

கதை[தொகு]

பேராசை குடும்ப விழுமியங்களை எவ்வாறு முறியடிக்கிறது என்பதற்கான கதையே பேட்டா, அருணா இரானி லக்ஷ்மியாகவும், மாதுரி தீட்சித் சரஸ்வதியாகவும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அதைத் தொடர்ந்து ராஜு (அனில் கபூர்), லட்சாதிபதி தந்தையின் ஒரே மகனாக சித்தரிக்கப்படுகிறார்.

மனைவியின் மரணத்திற்குப் பிறகு, ராஜுவின் தந்தை தனது மகனுக்கு ஒரு தாயின் அன்பை வழங்கக்கூடிய ஒரு பெண்ணைத் தேடுகிறார். ராஜுவின் தந்தை ராஜுவை நன்கு கவனிப்பார் என்று நினைத்து, லக்ஷ்மியை (அருணா இரானி) திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். துரதிர்ஷ்டவசமாக, ராஜுவின் மாற்றாந்தாய் கொடூரமான மற்றும் தந்திரமானவராக இருக்கிறார். ராஜு தன் மீது அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டுமென நினைக்கிறாள். ராஜாவை அவன் எப்போதும் அப்பாவியாகவும் படிக்காதவனாகவும் இருக்க வேண்டும் என்று அவள் தந்திரமாக நினைக்கிறாள். ராஜு பெரியவனாகும் போது, அவனது மாற்றாந்தாய் அவனது வயதான தந்தையை குடும்பத்திலிருந்து தனிமைப்படுத்தி, அவரை மனநிலையற்றவனாகக் கருதி, குடும்ப வீட்டின் ஒரு அறையில் அடைத்து வைக்கப்படுகிறார்.

இதற்குப்பிறகு ராஜு லட்சுமியை காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறான். திருமணத்திற்குப் பிறகு, சரஸ்வதி ஒரு நல்ல மற்றும் மகிழ்ச்சியான மனைவியாக அக்குடும்பத்தில் வசிக்கிறாள். ஆனால் பின்னர் ராஜு மீதான அவனது மாற்றாந்தாய் அன்பு ராஜூவின் தந்தையை இழிவுபடுத்துவதற்கான ஒரு முரட்டுத்தனமாகவும், லக்ஷ்மிக்கு இருப்பதாகவும் கண்டுபிடிக்கிறாள்.. பிறகு என்னவென்பதை படத்தின் மீதி கதை சொல்லும்.

குறிப்புகள்[தொகு]

  1. இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Beta
  2. "Box Office 1992". Box Office India. மூல முகவரியிலிருந்து 18 September 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-08-09.

External links[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேட்டா_(திரைப்படம்)&oldid=2867337" இருந்து மீள்விக்கப்பட்டது