சரோஜ் கான்
சரோஜ் கான் | |
---|---|
(நாச்செல் வீயுடன் சரோஜ் கான்) படப்பிடிப்பில் சரோஜ் கான் | |
பிறப்பு | நிர்மலா நக்பால் 22 நவம்பர் 1948 மும்பை, மும்பை மாநிலம், இந்தியா |
மற்ற பெயர்கள் | சரோஜ் கான் |
செயற்பாட்டுக் காலம் | 1958 முதல் தற்போது வரை |
சரோஜ் கான் (Saroj Khan) என்று அனைவராலும் அறியப்படும் "நிர்மலா நக்பால்" இந்திய பாலிவுட். நடனப் பயிற்சியாளர் ஆவார். இவர், நவம்பர் 22, 1948இல் மும்பை மாநிலத்தில் (தற்போது மகாராட்டிரம்) பிறந்தவர். இவர், 40 வருடங்களாக, 2000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களில் நடனப் பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார். மேலும், இவர் "இந்திய நடன பயிற்சியின் தாய்" என அழைக்கப்படுகிறார்.
தொழில்
[தொகு]இந்திய பிரிப்பிற்குப் பிறகு, நிர்மலாவின் பெற்றோர் இந்தியாவிற்கு வந்தனர். இவர், தனது மூன்றாவது வயதில் நசரனா திரைப்படத்தில் வரும் ஷியாமா என்னும் குழந்தை கதா பாத்திரத்தில் நடித்து தன் தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்.[1] மற்றும் 1950களின் பிற்பகுதியில், பின்னணி நடனக் கலைஞராக இருந்தார். இவர் நடனத்தை நடனப் பயிற்சியாளர் பி. சோஹன்லாலிடம் பணிபுரியும் போது கற்றுக் கொண்டார். முதலில் துணை பயிற்சியாளராகவும், பிறகு கீதா மேரா நாம் (1974) படத்தில் பணியாற்றியதன் மூலமாக முழு நேர தனிப் பயிற்சியாளராகவும் உயர்ந்தார். இருப்பினும், அவர் பல ஆண்டுகளுக்கு பாராட்டுக்களைப் பெற காத்திருக்க வேண்டியிருந்தது. ஸ்ரீதேவி உடன் மிஸ்டர் இந்தியா (1987), படத்தில் வரும் "ஹவா ஹவாய்" பாடலுக்கு பணிபுரிந்ததின் விளைவாக மக்களின் பாராட்டைப் பெற்றார். மேலும், ஸ்ரீதேவியுடன் நாகினா (1986), மற்றும் சாந்தினி (1989) போன்ற படங்களில் பணிபுரிந்துள்ளார். பின்னர் மாதுரி தீட்சித்துடன் "தேசாப்" (1988) படத்தில் பெரும் வரவேற்பை பெற்ற பாடலான ஏக் தோ தீன்...எனும் பாடல், "தானேதார்" (1990) படத்தில் வரும் தம்ம தம்ம லோக் எனத்தொடங்கும் பாடல்,[2] மற்றும் பேட்டா (1992) படத்தில் வருகின்ற "தக் தக் கர்னே லகா" எனத் தொடங்கும் பாடலுக்கு பணியாற்றியதின் விளைவாக பாலிவுட்டின் சிறந்த நடனப் பயிற்சியாளராக அறியப்படுகிறார்.[1][3]
2014இல், குலாப் கங் திரைப்படத்திற்கு மீண்டும் மாதுரி தீட்சித்துடன் பணியாற்றினார்.[4]
தொலைக்காட்சி பங்களிப்புகள்
[தொகு]2005இல், ஸ்டார் ஒன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட "நக் பாலியே" நடன நிகழ்ச்சியின் மூன்று நடுவர்களில் ஒரு நடுவராக சரோஜ் கான் இருந்தார். மேலும், இந் நிகழ்ச்சியின் இரண்டாவது பருவத்திலும் பணியாற்றியுள்ளார். சமீபமாக, சோனி தொலைக்காட்சியின் "உஸ்தாதன் கா உஸ்தாத்" நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்தார். 2008இல் நடைபெற்ற நாச்செல் வீயுடன் சரோஜ் கான் நிகழ்ச்சியில் இவர் தோன்றியுள்ளார். இது "என்.டி.டி.வி, இமாஜின்" தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. சோனி தொலைக்காட்சித் தொடரான "பூகி வூகி" யில் ஜாவீத் ஜஃப்ரே, நவீத் ஜஃப்ரே, மற்றும் ரவி பெஹலுடன் இவரும் ஒரு நடுவராகப் பணியாற்றியுள்ளார். பிப்ரவரி 27, 2009இல் தொடங்கிய "ஜலக் திக்லா ஜால்" நிகழ்ச்சியின் மூன்றாம் பருவத்திற்கு நக் பாலியே, வைபவி மெர்ச்சன்ட் மற்றும் நடிகை ஜூஹி சாவ்லாவுடன் இவரும் ஒரு நடுவராக இருந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Gulzar; Govind Nihalani; Saibal Chatterjee (2003). Encyclopaedia Of Hindi Cinema. Popular Prakashan. p. 573. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7991-066-5. பார்க்கப்பட்ட நாள் 13 June 2013.
- ↑ "'Tamma tamma loge' got okayed in the 48th take: Saroj Khan". Times Of India. 23 May 2013. Archived from the original on 23 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 13 June 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ Shoma A. Chatterji (28 October 2012). "Diva of Dance". The Tribune. பார்க்கப்பட்ட நாள் 13 June 2013.
- ↑ "Madhuri is still superb: Saroj Khan". The Times of India. 22 May 2013. Archived from the original on 11 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 13 June 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help)