உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:2015 திருப்பதி வனப்பகுதி படுகொலைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2015 திருப்பதி காவல்துறை மோதல் வழக்கு என்ற தலைப்பு மாற்றப்பட வேண்டும். இந்நிகழ்வு காவல்துறை மோதலும் அல்ல, வழக்கும் அல்ல. வேறு பொருத்தமான (தீவிரமான) தலைப்பாக இருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 21:21, 9 ஏப்ரல் 2015 (UTC)

கனகு, இது காவல்துறை மோதல் இல்லை என்று நீங்கள் சொல்வது புதிராக இருக்கிறது. "வழக்கு" என்று சொல் வேண்டுமானால் தற்போதைக்கு பொருத்தமில்லைதான். "2015 சேசாசலம் வனத்தில் நடந்த காவல்துறை மோதல்" என்றிருந்தால் சரியாயிருக்குமா? --மாகிர் (பேச்சு) 02:33, 10 ஏப்ரல் 2015 (UTC)

2015 ஆந்திரா துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் / 2015 சித்தூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ? TN govt. demands probe into AP encounter killings, India police say 20 dead after shootout with smugglers in India's Andhra Pradesh ஆகவே இது மோதல் அல்ல. --AntanO 04:45, 10 ஏப்ரல் 2015 (UTC)
அன்ரனின் பரிந்துரை நன்று --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:18, 10 ஏப்ரல் 2015 (UTC)
துப்பாக்கிச் சூடு என்பது காவல்துறையின் வாதம், பரவலாக வந்த செய்திகள் இது என்கவுன்டர் - காவல்துறை மோதல் என்றே குறிப்பிடுகின்றன. இன்னும் ஒருபடி மேலே சொல்வதானால், ஒருநாள் முன்பாகவே கைது செய்யபட்டு படுகொலை செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. துப்பாக்கிச் சூடு என்பது பொருத்தமானதல்ல. "2015 சித்தூர் படுகொலை" என்றோ, "2015 சித்தூர் காவல்துறை மோதல்" என்றோ குறிப்பிடலாம்.--மாகிர் (பேச்சு) 06:22, 10 ஏப்ரல் 2015 (UTC)
அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் தலைப்பினை இடுதலே இத்தருணத்திற்கு உரியது; அவ்வாறில்லையெனில், நடுநிலை கேள்விக்குறியாகும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:28, 10 ஏப்ரல் 2015 (UTC)
மன்னிக்க, அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு உட்பட்டு விக்கியில் கட்டுரை இருக்கவேண்டுமென்றால், விக்கிப்பீடியா அதிகார அழுத்தங்களுக்கு உட்பட்டிருப்பதாக பொருள் கொள்ளப்படும். விக்கிப்பீடியாவில் நடுநிலை நோக்கு, கருத்தொற்றுமை, நம்பகத்தன்மை போன்றவைதான் பார்க்கப்படல் வேண்டும். -- மாகிர் (பேச்சு) 06:47, 10 ஏப்ரல் 2015 (UTC)
இந்தத் தருணத்தில், துப்பாக்கிச் சூடு என்பது தலைப்பில் இருப்பதே நடுநிலை. அனைத்துவகை வாதங்களும் உரிய மேற்கோள்களுடன் கட்டுரையின் உள்ளே இருக்கலாம் என்பதே எனது நிலைப்பாடு. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:57, 10 ஏப்ரல் 2015 (UTC)
உங்களது கருத்து புரிகிறது. ஆனால் துப்பாக்கிச் சூடு என்பது ஒருபக்கச் சாய்வு சொல்லாடல். காவல்துறை மோதல் என்பதே பரவலாக எல்லா முன்னணி ஊடகங்களும் இந்நிகழ்விற்கு பயன்படுத்தியிருக்கும் சொல். -- மாகிர் (பேச்சு) 07:10, 10 ஏப்ரல் 2015 (UTC)
ஆங்கிலச் செய்திகளின் தலைப்பில் "shootout", "shooting", "firing", "shot down" ஆகிய பதங்களே பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. மோதல் என்றால் இரு தரப்புச் சண்டையாகிவிடும் (fight). ஆனால் பின் வந்த செய்திகள் பிடிக்கப்பட்டுச் சுடப்பட்டதாகக் கூறுகின்றன. "2015 சித்தூர் படுகொலை" என்பதும் பொருத்தமானது. ஆனால், இது ஆந்திர காவற்றுறையை குற்றவளாக்குவதுபோல் (குற்றவாளிகளா இல்லையா என்பது இதுவரை தீர்மானவாகவில்லை) உள்ளது. தொடர்புபட்டது en:List of cases of police brutality in India --AntanO 07:22, 10 ஏப்ரல் 2015 (UTC)
Charlie Hebdo shooting > சார்லி ஹெப்டோ துப்பாக்கிச் சூடு --AntanO 07:35, 10 ஏப்ரல் 2015 (UTC)
2015 சித்தூர் படுகொலைகள் என்று (கவனிக்க: படுகொலைகள்) தலைப்பிடுதலே பொருத்தம். காவல்துறையினர் வேண்டுமென்றே இப்படுகொலைகளைச் செய்தார்களா என்பது (நீதியான) ஒரு விசாரணை நடந்தால் தெரியவரும். அவர்கள் குற்றவாளிகள் இல்லையென்றாலும், இந்நிகழ்வு படுகொலைகள் தான்.--Kanags \உரையாடுக 08:21, 10 ஏப்ரல் 2015 (UTC)

@கனகு, நானும் படுகொலைகள் என்று எழுதவே எண்ணியிருந்தேன். 2015 சித்தூர் படுகொலைகள் சரியானதுதான். சட்ட நடைமுறைக்கு அப்பாற்பட்டு, அதுவும் அரசு இயந்திரங்களாலேயே கொல்லப்படுதலை படுகொலை என்று சொல்வது மிகச்சரியே. -- மாகிர் (பேச்சு) 09:17, 10 ஏப்ரல் 2015 (UTC)

@செல்வகுருநாதன், தலைப்பு பற்றி விவாதம் நடக்கும் போது, கருத்தொற்றுமை ஏற்படுவதற்கு முன் தலைப்பை ஏன் அவசரப்பட்டு மாற்றுகிறீர்கள். வேறு பரிந்துரை இருந்தால் இங்கு தெரிவியுங்கள். குழப்புவதாக உள்ளது. நன்றி. -- மாகிர் (பேச்சு) 10:01, 10 ஏப்ரல் 2015 (UTC)

மாகிர், எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? எத்துணைபேரின் கருத்துகள் ஒன்றுபடல்வேண்டும் என எண்ணுகிறீர்கள்? நான் அவசரப்படுகிறேனா? உங்களையும் சேர்த்து 3 பேர், படுகொலை எனும் வார்த்தைக்கு உடன்பட்டுவிட்டார்கள் என்பதனை கவனியுங்கள். உங்களின் தலைப்புகளை யாரும் மாற்றக்கூடாது என நினைக்கிறீர்களா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:12, 10 ஏப்ரல் 2015 (UTC)
பயனர்:Selvasivagurunathan m, மேலே எனது கருத்துக்களை பார்த்தால் நான் தலைப்பை மாற்றக்கூடாது என்று வாதிடவில்லை என்று அறியலாம். தலைப்பு பற்றி உரையாடிக் கொண்டிருக்கும் போது, ஒன்றிணைந்து வரும் போது திடீரென வேறொரு தலைப்பு கொடுத்து நகர்த்துவது எந்த விதத்தில் நியாயம். இது விக்கி கொள்கைகளுக்கு முரணானதும் கூட (என்பது எனது புரிதல்). அவ்வாறு தாமாக ஒன்றை மாற்றுவதாக இருந்தால் உரையாடல் தான் எதற்கு? -- மாகிர் (பேச்சு) 15:23, 10 ஏப்ரல் 2015 (UTC)
2015 திருப்பதி வனப்பகுதி(ப்) படுகொலைகள் இன்னும் பொருத்தமாக உள்ளது.--Kanags \உரையாடுக 11:27, 10 ஏப்ரல் 2015 (UTC)
👍 விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:07, 10 ஏப்ரல் 2015 (UTC)
மாகிர், எனது வாதத்தை நிலைநிறுத்துவது எனது நோக்கமன்று; எனினும் தன்னிலை விளக்கம் தர கடமைப்பட்டுள்ளேன்:
  • திடீரென வேறு தலைப்பிற்கு மாற்றவில்லை; //2015 சித்தூர் படுகொலைகள் சரியானதுதான்// என்பது தாங்கள் தந்த ஒப்புதல். சித்தூர் என்பதனைவிட திருப்பதி வனப்பகுதி மிகச் சரியானது என்பதனை ஊடகச் செய்திகளின் அடிப்படையில் புரிந்துகொண்டதால், 2015 திருப்பதி வனப்பகுதி படுகொலைகள் என நகர்த்தினேன். மேலும் தங்களின் தலைப்பில் திருப்பதி என்று ஏற்கனவே இருந்ததால் தெளிவுடன் நகர்த்தினேன்.
  • உரையாடல் முடிந்துவிட்டது, அனைவரும் ஒன்றிணைந்துவிட்டார்கள் என்பதனை உறுதி செய்ய எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பதனை எனக்கு சொல்லுங்கள்; நான் இனிமேல் அதன்படி நடந்துகொள்கிறேன்.
  • இதுபோன்ற sensitive நடப்பு நிகழ்வுகளில் நிதானத்துடன்கூடிய - அதே நேரத்தில் - விரைவான செயற்படுத்துதலை செய்தலும் எனது கடமை என்பதால்தான் தலைப்பினை நகர்த்தினேன். நியாயத்திற்கு புறம்பாக நான் ஏதும் செய்யவில்லை என்றே கருதுகிறேன். விக்கிக் கொள்கைகளுக்கு முரணாக செயற்பட என்றும் நான் நினைக்கமாட்டேன்.
  • தானாக மாற்றவில்லை; அன்ரனின் பரிந்துரையை ஆரம்பத்தில் நன்று எனக் குறிப்பிட்டேன். அதன்பிறகு காத்திருந்து, தாங்கள் உள்ளிட்ட மூவர் ஒப்புக்கொண்ட பின்னரே தலைப்பினை நகர்த்தினேன்.
  • ஒரு சிறு எழுத்துப் பிழை என்றாலும், சந்தேகம் இருப்பின், உரையாடிவிட்டே திருத்தும் எனது குணத்தினை இங்குள்ள பயனர்கள் அறிவர்.
  • இத்துடன் இங்கு உரையாடலை முடித்துக்கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:10, 11 ஏப்ரல் 2015 (UTC)
மா. செல்வசிவகுருநாதன், இது தொடர்பான விவாதத்தை இங்கு தொடரலாம்‎. நன்றி -- மாகிர் (பேச்சு) 17:50, 11 ஏப்ரல் 2015 (UTC)

திருப்பதி

[தொகு]

தலைப்பு திருப்பதி என்றிருந்தாலும், கட்டுரையில் திருப்பதியைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 05:18, 11 ஏப்ரல் 2015 (UTC)