பேச்சு:வேடுவர் (இலங்கை)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Untitled[தொகு]

இதே மக்களைப் பற்றி வெத்தா என்னும் தலைப்பில் இன்னொரு கட்டுரை உள்ளது. Mayooranathan 16:43, 11 ஜூன் 2006 (UTC)

நன்றி. விரைவில் இணைத்து விடுகின்றேன். --Natkeeran 06:05, 12 ஜூன் 2006 (UTC)

நான் இணைத்துவிட்டேன்--டெரன்ஸ் 11:09, 7 ஆகஸ்ட் 2006 (UTC)

இந்தக் கட்டுரைக்கு ஏன் சிங்களத் தலைப்பு இடப்பட்டது? வெத்தா என்பது வேடர்கள். இவர்களில் சிலர் தமிழும் கதைப்பவர்கள். எனவே வேடர்கள் (இலங்கை) எனத் தலைப்பிடுவது பொருத்தமாக இருக்கும். இலங்கையில் தமிழில் இவர்கள் வெத்தா என்றா அழைக்கப்படுகின்றனர்? (தெரியாமையினாலேயே கேட்கின்றேன்:)).--Kanags 11:27, 7 ஆகஸ்ட் 2006 (UTC)

இலங்கையின் ஆதிவாசிகள்[தொகு]

வன்னியல அயிரோ என்போர் இலங்கையின் ஆதிவாசிகள் ஆவார்கள். இவர்களை வேடர்கள், காட்டு வாசிகள் என்றும் அழைப்பதுன்டு. வேட்டை இம்மக்களின் வாழ்வியலில் ஒரு முக்கிய அம்சம், ஆகையால் வேடர்கள் என்றும், காட்டில் வசித்ததால் காட்டு வாசிகள் என்றும் இவ் இன மக்கள் தமிழில் அழைக்கப்படிக்கலாம். இவர்கள் இன்றைய இலங்கையின் பெரும்பான்மை இனங்களான சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் ஆகிய இன மக்களிடம் இருந்து வேறுபட்டவர்கள். வன்னியல அயிரோ மக்களின் வாழ்வியல் தனித்துவமானது, எனினும் இலங்கையின் பிற இன மக்களுடன் பின்னிபிணைந்தது. குறிப்பாக இலங்கை கிழக்கு கரையோர பகுதியில் வசிக்கும் இவ் இன மக்களின் சில குழுக்கள் தமிழ் பேசுகின்றார்கள்.

அப்படியானால் இலங்கையின் ஆதிவாசிகள் எனத்தலைப்பிடுவது பொருத்தமாக இருக்குமா?--Kanags 21:36, 7 ஆகஸ்ட் 2006 (UTC)

வெளி இணைப்புக்கள்[தொகு]

A great deal of information on them can be found at Vedda.org

இலங்கையின் பழங்குடிகள்[தொகு]

இலங்கையின் பழங்குடிகள் என்ற தலைப்புக்கு நகர்த்தலாம்--ரவி 01:44, 11 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]

கட்டுரை தலைப்பு மாற்றப்பட வேண்டும்[தொகு]

இந்த கட்டுரை இலங்கையில் வாழும் வேடர்களை முதன்மையாகக் கொண்ட கட்டுரை. இதற்கு இலங்கையில் ஆதிவாசிகள் எனும் தலைப்பு பொறுத்தமற்றது. இலங்கையின் ஆதிவாசிகள் யார் என்பதில் பல்வேறு கருத்துவேறுப்பாடும், உரிமைக்கோரலும் இலங்கையில் காலகாலமாக தொடர்ந்து விவாதப் பொருளாகி வருகிறது. இங்கே இந்த கட்டுரை வேடர்கள் பற்றியது மட்டுமே ஆகும். (அவர்களும் இலங்கையின் ஆதிவாசிகள் என்பது வேறு விடயம்) இதனை வேடர்கள் (இலங்கை) என்றோ இலங்கை வேடர்கள் என்றோ குறிப்பிடுவது தான் பொருத்தமானது. --HK Arun 14:48, 1 ஏப்ரல் 2011 (UTC)

மீண்டும் தலைப்பு மாற்றம்[தொகு]

பாஹிம், வேடர், வேடுவர் என்பது பொதுவான தமிழ்ச்சொல். தமிழ்நாட்டில் வேடுவர்கள் இல்லையா? அல்லது இருக்கவில்லையா? அவர்களை எவ்வாறு அழைப்பார்கள்?--Kanags \உரையாடுக 10:51, 7 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

தமிழ்நாட்டில் “வேடுவர்” என்ற பயன்பாடு இல்லை. “வேடர்”, "வேட்டுவர்” அகிய பயன்பாடுகள் உள்ளன.--சோடாபாட்டில்உரையாடுக 10:53, 7 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

வேடுவர் வேட்டுவர் இரண்டும் ஒன்று தான். வேட்டுவரில் ஒற்று மிகுந்துள்ளது. தயவு செய்து வேடுவர் என்ற சொல்லை இலங்கைக்கு மாத்திரம் உரித்தான சொல்லாகக் கொள்ள வேண்டாம். வேடுவர் குலப் பெண் வள்ளி என்று தான் நாம் எழுதுகிறோம். அதற்காக வள்ளி இலங்கை வேடுவர் குலம் அல்ல.--Kanags \உரையாடுக 11:00, 7 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

சுந்தரரின் ஏழாம் திருமுறைப் பாடல்:

கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்
விரவ லாமைசொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்
டாற லைக்குமிடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும்
எத்துக் கிங்கிருந் தீர்எம்பி ரானீரே.

--Kanags \உரையாடுக 11:35, 7 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

அப்படியாயின் வெத்தா என்ற சொல்லையே பயன்படுத்தினால் என்ன? வேட்டையாடுவோர் என்ற பொருளிற் பயன்படுத்துவது பொருத்தமாகப் படவில்லை.--பாஹிம் 11:09, 7 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஏன் சிங்களச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். வேடுவர் (இலங்கை) அல்லது இலங்கை வேடுவர் என மாற்றலாம். --Kanags \உரையாடுக 11:12, 7 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

அவர்களைக் குறிப்பதற்கு ஆங்கிலத்திலும் Vedda என்றுதானே பயன்படுத்தப்படுகிறது?--பாஹிம் 11:19, 7 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஒரு பொருளைக் குறிக்க பரவலாகப் பயன்படும் தமிழ்ப் பெயர் இல்லாத போதே பிற மொழிப்பயன்பாடுகளை அணுக வேண்டும் இங்கு அப்படியல்ல. இலங்கையில் தமிழில் “வேடுவர்” / “வேடர்” என்ற பயன்பாடு பரவலானது. அவ்வாறிருக்க சிங்கள, ஆங்கிலப் பயன்பாட்டினை நோக்கத் தேவையில்லை. இங்கு கேள்வி பக்கநெறிவழிப்படுத்தல் (diambiguation) அடையாளம் தேவையா என்பது தான். நான் தேவையில்லை என நினைக்கிறேன். கனக்ஸ் வேண்டுமென்கிறார். பிறர் கருத்தை அறிந்து செயல்படலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 11:23, 7 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

வேடுவர் என்றுதான் அரசாங்க ஆவணங்கள் குறிக்கின்றன. வேடர் என்ற சொல் இவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படவில்லை. அதனாற்றான் வேடுவர் என மாற்றினேன். மேலும், நான் அறிந்த வரையில் இந்தியாவிலோ மலேசியாவிலோ வேடுவர் என்ற சொல் பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை.--பாஹிம் 11:30, 7 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

நான் மேலே ஆதாரம் தந்துள்ளேன். இதற்கு மேல் என்ன ஆதாரம் தேவை. சங்க இலக்கியத்தில் வேடுவர் என்ற சொல்லே பயன்பாட்டில் இருந்தது. இப்போது தமிழகத்தவர் அதனை மறந்து விட்டார்கள். இங்கு பக்கவழிநெறிப்படுத்தல் எதுவும் தேவையில்லை. இலங்கை வேடுவர்கள் எனத் தலைப்பை மாற்றினால் போதும். வேடர் அல்லது வேடுவர் என்ற பொதுத் தலைப்பில் கட்டுரை எழுதலாம்.--Kanags \உரையாடுக 11:33, 7 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

இலங்கை வேடுவர் எனத் தலைப்பை மாற்றிவிடுங்கள்.--பாஹிம் 11:39, 7 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

கண்டிப்பாக பாஹிம் சொல்வது சரியே. இலங்கை வேடுவர் என்று ஒரு மனித இனம் இலங்கையில் உள்ளன!!--சிவம் 00:27, 30 அக்டோபர் 2012 (UTC)

வேடுவர் என்ற சொல் தமிழ்நாட்டிலும் புரியக்கூடிய சொல்லே. திருவிழா நாடகங்களில் கேட்டிருக்கிறேன்--இரவி (பேச்சு) 09:01, 30 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

ஆதாரமற்ற தகவல் நீக்கம்[தொகு]

&&இவர்கள் தங்களை "வன்னியலா எத்தோ" (Wanniyala-Aetto) என்றே குறிப்பிட்டுகொள்கின்றனர். இதன் பொருள் "காட்டைச் சேர்ந்தவர்கள்" அல்லது "காட்டில் வாழ்பவர்கள்" என்பதாகும்.&&

என்ற பகுதி கட்டுரையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. வன்னியல எத்தோ என்பது தமிழில்லாத வேறொரு மொழியாயின் (சிங்களமா எனச் சரியாகத் தெரியவில்லை), அதன் பொருளைத் தருவதற்கும் ஆதாரம் தேவையா?.--கலை (பேச்சு) 23:09, 29 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

ஆம், அது சிங்களங்தான். மொழிகளுக்கு ஆதாரம் தேவை என்றால், ஆதாரம் தேவைப்படுபவர் பேச்சுப் பக்கத்தில் அதனைத் தெரிவிக்க வேண்டும்.--Anton (பேச்சு) 00:49, 30 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
வன்னியர் அல்லது வன்னியல.= காட்டார்! அல்லது காட்டில் வசிப்பவர்கள். இவர்களைத்தான் வேடுவர் என்று தமிழ் பொருள். --சிவம் 00:10, 30 அக்டோபர் 2012 (UTC)

எம்மவர்களில் சிலர் வேட்டை ஆடுவதுண்டு. ஆனால் அவர்கள் வேடுவர் அல்ல!! வேட்டைக்காரர். வேடுவர் என்பது வேறு.!--சிவம் 00:37, 30 அக்டோபர் 2012 (UTC)

தினேசு, கட்டுரையில் சான்று கோரல் தொடர்பான மாற்றங்களைப் பார்த்தேன். Wanniyala-Aetto என்ற சிங்களச் சொல்லின் பொருள் என்ன என்பது இலங்கையில் உள்ள சிங்களம் அறிந்த தமிழர்களின் பொது அறிவுக்கு உட்பட்டது தான். வேடுவர் என்ற கட்டுரையில் தொடர்புடைய சொல்லாக இதனை இடும் போது சான்றற்று இடுவதற்கு இடம் குறைவே. இது போன்ற இடங்களில் சான்று கேட்பதும் பிறகு நீக்குவதும் தேவையற்றது. பங்களிப்பாளர்களை அயரச் செய்து விடும். இந்தத் தகவல் இருந்திருந்தாலாவது புரிந்து கொண்டு சரி பார்க்க உதவியாக இருந்திருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி நிலை, பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளும் போது இந்த அளவு கடுமையான தர அளவுகள் தேவை இல்லை. சர்ச்சைக்குரிய, நம்பகத்தன்மை அற்ற கருத்துகளுக்கு மட்டும் சான்று கோருங்கள். அருள்கூர்ந்து சான்று சேர்த்து தரத்தைக் கூட்டும் தங்கள் நடவடிக்கையில் மாற்றத்தை எதிர்பார்க்கிறேன். நன்றி--இரவி (பேச்சு) 08:47, 30 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

உரையாடல் தொடர்ச்சி ஒழுங்கு[தொகு]

அன்டன் இந்த படத்தை பாருங்கள்!! ஒழுங்கு முறையை பின்பற்றுங்கள்!! கருத்து தெரிவிப்பது என்றால் ஒன்றின் பின் ஒன்றாக இருக்க வேண்டும்!! இங்கே>????? நாங்கள் என்ன திரைப்படம் பாக்கிறதுக்கா நிக்கின்றோம்?? இடையில் வந்து புகுரும் அளவுக்கு???? தனிப்பட்ட தாக்குதலோ அல்லது மறை முக தாக்குதலோ இல்லை!! உண்மை இதுதான் நடக்குது. புரிந்து கொள்ளுங்கள் ..... நன்றி இல்லை!

நான் கருத்து தெரிவித்தது உங்களுக்கல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இது விக்கி ஒழுங்கு மீறலும் அல்ல. //நாங்கள் என்ன திரைப்படம் பாக்கிறதுக்கா நிக்கின்றோம்?? // இவ்வாறான பேச்சைத் தவிர்த்து, நாகரீகமாக விடயத்துடன் உரையாடவும். --Anton (பேச்சு) 03:53, 30 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
இது விக்கி ஒழுங்கு மீறலும் அல்ல அப்போ விக்கியில் ஒரு பொது கருத்தை தெரிவிப்பதில் கூட ஒழுங்கு இல்லையா?? சரி நல்லது. அப்படியானால் நானும் இது போன்ற இடங்களில் ஒழுங்கு மீறுவேன் அதுவும் என் குற்றம் இல்லை.!! இதுவே ஒரு பண்பாடு அற்ற செயல்!! ஆனால் இப்படி விக்கியில் ஒழுங்கு முறை இல்லையென்றால்????????? சந்தேகம் வருகிறது.......... அன்டன் உங்கள் கருத்தை கண்டிப்பாக தெரிவிக்கலாம் அதன் தலைப்பின் கீழ்! அதற்காக இடையில் புகுந்து பண்பாட்டை மறந்து நீங்கள் இப்படி செயல்ப்பட்டால் புதுப்பயனர்கள் எப்படி விக்கி பண்பை கற்றுக்கொள்வார்கள்?? --சிவம் 06:03, 30 அக்டோபர் 2012 (UTC)

எது பண்பாடு அற்ற செயல்? //நானும் இது போன்ற இடங்களில் ஒழுங்கு மீறுவேன் // இதை எப்படித் தெரிவிப்பது? --Anton (பேச்சு) 06:48, 30 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

  • எது பண்பாடு அற்ற செயல்? // ஒரு தலைப்பின் கீழ் கருத்து தெரிவிக்கும் ஒருவர் பின் ஒருவராக தமது கதுத்தை தெரிவிப்பது பண்பு! இடையில் புகுந்து கருத்து இடுவது பண்பாடு இல்லை!
  • நானும் இது போன்ற இடங்களில் ஒழுங்கு மீறுவேன் // இதை நான் சொல்ல தேவை இல்லை உங்களை போன்று நானும் மற்ற புது பயனர்களும் செயல்படுவார்கள்.
  • இதை எப்படித் தெரிவிப்பது? தெரிய வேண்டிய நேரத்தில் அனைவரும் தெரிந்து கொள்வார்கள்!--சிவம் 07:07, 30 அக்டோபர் 2012 (UTC)

சிவம், உரையாடலில் காலத் தொடர்ச்சி போன்றே கருத்துத் தொடர்ச்சியும் முக்கியமானதே. மேலே தினேசுக்கு இட்ட கருத்தை இங்கே இட்டிருந்தால் கருத்துத் தொடர்ச்சி இருக்காது. எனவே, தகுந்த இடத்தில் உரையாடல்களை ஒழுங்குபடுத்துவதும் வரிசை மாற்றுவதும் ஏற்புடையதே. இதில் தொடர்புடைய பயனர் மீது நன்னம்பிக்கையுடன் அணுக வேண்டும். மாற்றுக் கருத்து இருந்தால் முறையாக கேட்கலாம். எடுத்தவுடன் குற்றம் சாட்டும் போக்கில் அணுக வேண்டாம்--இரவி (பேச்சு) 09:00, 30 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

சொல்விளக்கம்[தொகு]

//"வன்னியலா எத்தோ" (Wanniyala-Aetto) என்ற சொல்லுக்கு "காட்டைச் சேர்ந்தவர்கள்" அல்லது "காட்டில் வாழ்பவர்கள்" அல்லது "காட்டிலுள்ள மக்கள்" என்பது பொருள்// அது சரியானதல்ல. தவிர அது சிங்களச் சொல்லும் அல்ல. அது வேடுவர் தங்களை தாங்களே அழைத்துக்கொள்ளும் அவர்கள் இனத்தை அடையாளப்படுத்தும் சொல். அச்சொல்லில் பின்னொட்டாக வரும் எத்தோ (Aetto) என்பது மக்கள் என்று குறிக்கிறது. தவிர எத்தோ என மக்களை குறிக்கும் சொல்வழக்கு சிங்கள வழக்குச் சொல்லாகவோ அல்லது வேறு எந்த மொழி வழக்குச் சொல்லாகவே இதுவரை அறியப்படவில்லை. (சிங்களம் என்று கூறுவதற்கு எந்த சான்றுகளும் இல்லை)

காட்டில் வேட்டையாடி வாழும் மனிதனை தமிழில் "வேடன்" என்று அழைப்பது போன்றே சிங்களத்தில் வெத்தா என்ற சொல் பயன்படுகிறது. அத்துடன் அதே சொல் (வெத்தா) கொண்டே சிங்கள ஊடகங்கள் அம்மக்களை குறித்து வந்ததனாலும், வேடுவர் இலங்கையின் பழங்குடிகள் என ஆய்வுகள் கூறுவதனாலும், அவர்களை சிங்களவர்களாக காட்ட சில சிங்கள ஆய்வாளர்கள் முயற்சி எடுத்துவருகின்றனர். சிலர் சிங்களமும் தமிழும் கலந்த ஒரு மொழி பேசுவதாகவும் கூறிவருகின்றனர். பார்க்க: [1] அதன் ஒரு கட்டமாகவே அம்மக்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் அளித்து, சிங்களம் கற்பித்து, பௌத்தர்களாக மாற்றும் நடவடிக்கையும் தொடர்கின்றன. மேலும் வெத்தா எனும் சொல்லுக்கு சமசுகிரத்திலும், பாளியிலும் விளக்கம் கொடுக்கும் முயற்சியையும் செய்கின்றனர். ஆனால் வெத்தா எனும் சொல் வன்னியலா எத்தோவிடம் பயன்பாட்டிலும் இல்லை. ஒருவகையில் தமிழில் "வேடுவர்" என்பதும், சிங்களத்தில் "வெத்தா" என்பதும் கூட அவர்கள் மரபுசார் (வேட்டையாடுதலை) தொழிலை முன்னிலை படுத்தும் சொல்லாகும். அது இனம்சார்ந்த ஒரு இழிவழக்கு சொல்லாகக் கூட பார்க்கப்படலாம்.

இன்று தமிழர்களாகவும் சிங்களவர்களாகவும் அடையாளப்படுத்திக்கொள்ளும் இனங்களில் "வன்னி", "வன்னியர்", "வன்னியன்" என்று தமிழிலும், "வன்னி", "வன்னிய" என்று சிங்களத்திலும் சொற்கள் பயன்படுகின்றன. இதனை ஆய்வுசெய்த வரலாற்றாசிரியர்கள் அதே சொற்கள் கொண்ட இனக்குழுமங்கள் தென்னிந்தியாவில் இருப்பதனையும் அறிந்து ஆய்வு செய்தனர். அவ்வாய்வின்படி வில்லெம் கெய்கர் இலங்கை வாழ் வேடுவர், தென்னிந்திய பழங்குடிகளுடன் தொடர்புடையர்வர்கள் என அறிவித்தார். According to Wilhelm Geiger Vaddas of Sri Lanka were an aboriginal tribe perhaps related to the ancient tribes of south India.] எனவே இந்த வன்னியலா என்ற சொல்லும் சிங்களம் என்று கூறமுடியாது.--HK Arun (பேச்சு) 11:16, 30 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

குறிப்பிட்ட இனத்தவர்களின் பின்னணி பற்றி நீங்கள் கூறிய விடயங்கள் உண்மையிருப்பினும், குறித்த சொல் பற்றி மட்டும் மேலதிகமாகச் சொல்வதென்றால், "வன்னியலா எத்தோ" என்பது சிங்களவர்கள் பயன்படுத்தும் சொல். (பார்க்கவும் Wanniyala-Aetto (‘forest people’) , Wanniyala Aetto [also known as Veddahs in Sinhalese]) ஆயினும் அதன் பாவனை குறைவு. சில சிங்களவர்களுக்கும் அது பற்றித் தெரியாது. மேலும் வன்னியலா எத்தோ எனும் சொல் மகியங்கனையிலுள்ள வேடுவர்களின் தலைவரையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. --Anton (பேச்சு) 11:54, 30 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

"வன்னியலோ எத்தோ" மற்றும் "வெத்தா" என (இரு பெயர் கொண்டும்) சிங்களவர்கள் அழைக்கின்றனர் என்பது சரியானது தான். --HK Arun (பேச்சு) 12:10, 30 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

வெத்தா (වැද්දා) என்ற சொல்லுக்கு வேட்டையாடுவோர் என்று பொருளில்லை. சிங்களத்தில் வேட்டைக்காரர்களைக் குறிக்க தடயக்கருவன் (දඩයක්කරුවන්) என்றே கூறப்படுகிறது. மேலும், எத்தோ (ඇත්තෝ) என்ற சொல் சிங்களத்தில் மக்களைக் குறிக்கப் பயன்படுகிறது. தென்னிலங்கையிலும் மலைநாட்டிலும் இச்சொல் பொதுப் பயன்பாட்டில் இருக்கிறது. பொதுவாகவே எம்மவர்கள் என்று கூறும்போது பேச்சு வழக்கில் அப்பே எத்தோ (අපේ ඇත්තෝ) என்றவாறு பயன்படுத்தப்படுவதுண்டு. அத்துடன், வில்ஹெல்ம் கெய்கரின் கூற்று "Vaddas of Sri Lanka were an aboriginal tribe perhaps related to the ancient tribes of south India - இலங்கையின் பழங்குடியினரான வேடுவர்கள் தென்னிந்தியாவின் பண்டைய கோத்திரங்களுடன் தொடர்புடையோராக இருக்கலாம்" என்று சந்தேகத்துடனேயே கூறப்பட்டுள்ளது.--பாஹிம் (பேச்சு) 12:44, 30 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
"வெத்தா" ஆங்கிலத்தில் "hunter" என்று முதல் தெரிவாகவே சிங்கள அகரமுதலியில் கொடுக்கப்பட்டுள்ளது. பார்க்க: [2], இங்கே (தமிழ்-சிங்களம்-ஆங்கிலம்) மும்மொழி அகராதியில் வெத்தாவிற்கு இவ்வாறான விடை கிடைக்கிறது(ගල් වැද්දා (s.) - குகை வாழ் வேடர் - cave dwelling Veddha) பார்க்க:http://www.trilingualdictionary.lk/ --HK Arun (பேச்சு) 13:58, 30 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

வரிகளை மீண்டும் இணைத்தல்[தொகு]

இங்கே தொடர்ந்த உரையாடலின்படி, இவர்கள் தங்களை "வன்னியலா எத்தோ" (Wanniyala-Aetto) என்றே குறிப்பிட்டுக்கொள்கின்றனர். இதன் பொருள் "காட்டைச் சேர்ந்தவர்கள்" அல்லது "காட்டில் வாழ்பவர்கள்" அல்லது "காட்டிலுள்ள மக்கள்" என்பது பொருள் என்ற வரிகளை மீண்டும் இணைக்கலாம் என நினைக்கின்றேன். சரிதானே?--கலை (பேச்சு) 15:05, 30 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

அவ்வாறே மாற்றலாம். மேலும், பொதுவான வேடுவர் என்ற தலைப்பு இக்கட்டுரைக்குப் பொருந்துமா எனத் தெரியவில்லை. தலைப்பை வேடுவர் (இலங்கை) என மாற்றலாமா? அத்துடன் வன்னியலா எத்தோ பற்றிய குறிப்பை கட்டுரையின் ஆரம்ப வரிகளிலேயே தருவது நல்லது. பின்னர் பேசும் மொழி என்ற உப தொகுப்பில் விரிவாகக் குறிப்பிடலாம்.--Kanags \உரையாடுக 20:11, 30 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
ஆம் வேடுவர் (இலங்கை) என மாற்றுதலே பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன்.--கலை (பேச்சு) 20:35, 30 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
//வரிகளை மீண்டும் இணைக்கலாம் என நினைக்கின்றேன். சரிதானே?// "வன்னியலா எத்தோ" சாதாரண மக்கள் போல் அல்லாமல், காட்டில் வாழ்பவர்கள் என்பதால் காட்டில் வாழ்பவர்கள் என விளக்கம் (பல இடங்களில்) கூறப்பட்டுள்ளதே தவிர, அதன் பொருள் காட்டில் வாழ்பவர்கள் என்று எங்கும் காண்பதற்கில்லை. சில தளங்களில் அடைப்புக்குறிக்குள் (காட்டு மக்கள்/காட்டில் வாழ்பவர்கள்) எனக்குறிப்பிட்டுள்ளனர். அதுவும் மேலதிக விளக்கத்திற்கானது தான். பார்க்க: [The Wanniyala-Aetto (‘forest people’) இங்கே விளக்கம் என்பது வேறு, அதனையே பொருள் என குறிக்க விளைவது வேறு. இரண்டாவதை தக்க சான்றுகளின்றி நாமாக செய்ய இயலாது. --HK Arun (பேச்சு) 21:14, 30 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வேடுவர்_(இலங்கை)&oldid=3908943" இலிருந்து மீள்விக்கப்பட்டது