பேச்சு:சவுக்கு சங்கர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"சவுக்கு சங்கர்" என்பவர் ஒரு யூடியூபர் மற்றும் வாழும் நபர். இவர் வாழ்க்கை வரலாறு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறக்கூடியளவு முக்கியத்துவம் வாய்ந்ததா என்பது குறித்து மற்ற பயனர்களின் கருத்தை வேண்டுகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:01, 4 மே 2024 (UTC)[பதிலளி]

கடந்த பதினைந்து ஆண்டுகளாக மாற்று ஊடகமாகப் பல அரசியல் செய்திகளை வெளிக் கொண்டு வந்தவர். பல்வேறு அரசு அடக்குமுறைகளுக்குள் சென்று en:WP:JOURNALIST விதிப்படி பெருவாரியாகக் கவனம் பெற்ற செய்திகளுடன் தொடர்புடையவராகிறார். தமிழ்நாட்டின் ஜூலியன் அசாஞ்ச் என்று ஆங்கில ஊடகம் குறிப்பிட்ட ஒருவரை சாதாரண வாழும் நபர் என்று கருதமுடியாதல்லவா? எந்த விதிகளின்படி குறிப்பிடத்தக்கமை இல்லை என்பதை நீங்கள் குறிப்பிடவும்.-நீச்சல்காரன் (பேச்சு) 15:56, 4 மே 2024 (UTC)[பதிலளி]

@Neechalkaran: //பல அரசியல் செய்திகளை வெளிக் கொண்டு வந்தவர். பல்வேறு அரசு அடக்குமுறைகளுக்குள் சென்று en:WP:JOURNALIST விதிப்படி பெருவாரியாகக் கவனம் பெற்ற செய்திகளுடன் தொடர்புடையவராகிறார்.//,

எனக்கு அவர் மீது தனிப்பட்ட காழ்ப்புணச்சியோ வெறுப்போ இல்லை என்பதை முதலில் கூறிக்கொள்கிறேன்.

  • பெருவாரியாகக் கவனம் பெற்றவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் எவ்விதமான கவனம் என்பதில்தான் கேள்வி.
  • அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுப் பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்டதன் காரணம் துறைசார் கோப்புகளைக் கசியவிட்டது தான்.
  • அவரது சமீபத்திய காவற்துறை, நீதித்துறை மீதான குற்றச்சாட்டுகளைத் தரும் வீடியோக்களைப் பார்த்தேன். அவற்றை இங்கு இணைக்க நான் விரும்பவில்லை. விக்கியில் பதிவுசெய்ய்ப்படக்கூடியவை அல்ல என்பதால். அந்தந்தத் துறைகளின்மீதுள்ள குறைகளை அவர் சுட்டும்போது அவரது வார்த்தைகள் அவரைப் பண்பட்டவராகக் காட்டவில்லை. துறைசார் குற்றங்களை வெளிச்சத்துக் கொண்டுவருவதான காரணத்திற்காக அவர், பெண்கள் தங்களின் நிலையைத் தக்க வைத்துக்கொள்ள மேலதிகாரிகளுடன் "அட்சஜ்ட்" செய்கிறார்கள், "அழகான கைம்பெண்களே பணியில் அமர்த்தப்படுகிறார்கள்" என்று கூறுவதெல்லாம் பொதுவெளிக்கு, வேலைக்குச் செல்லும் பெண்களை ஒட்டுமொத்தமாக இழிவுபடுத்துவதாகவே நான் கருதுகிறேன். (இதேபோன்ற எஸ். வி. சேகர் வழக்கு உங்களுக்கு நினைவிருக்கலாம்).
  • இதேபோல கள்ளக்குறிச்சிப் பள்ளியில் ஒரு மாணவியின் மரணம் பெரும் போராட்டைத்தை ஏற்படுத்தியபோது அம்மாணவியின் மரணத்துக்கான காரணம் "காதல் தோல்விதான்" என்று பதிவிட்டவர் இவர்.
  • பெண்களின் பங்களிப்பை விக்கியில் அதிகரிக்க மெனக்கிடும் விக்கி சமூகம் இவ்வாறு பொதுவெளிக்கு பணிநிமித்தமாக வெளிவரும் பெண்களை இழிவுபடுத்திப் பேசும், பெண்களை பாலியல்ரீதியாகவே பார்க்கும் கண்ணோட்டமுடைய ஒரு நபரை எப்படிக் குறிப்பிடத்தக்கவர் பட்டியலில் சேர்க்கும் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.
  • குறிப்பிடத்தக்கமைக்கான விக்கி வழிமுறைகளில் எனக்கு முழுமையான விக்கியறிவில்லை என்பதையும் விக்கிப்பீடியா ஒரு மூன்றாம்நிலைத் தரவுதான்-முதல் மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகளின் அடிப்படையிலேயே இங்குள்ள கட்டுரைகள் உருவாக்கப்படுகின்றன என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். இருப்பினும் அவரது "பேச்சு" என்னை இப்பேச்சுப் பக்கத்தில் கேள்வியெழுப்பத் தூண்டியது. இவரோ அல்லது இவரது எந்தவொரு படைப்புகளோ குறிப்பிடத்தக்க விருது பெறவில்லை என்பதையும் சுட்ட விரும்புகிறேன்.

பிற பயனர்கள் சவுக்கு சங்கரின் கட்டுரை இங்கு ஏற்படையது என்று கருதுவார்களேயானால் எனக்கும் மறுப்பில்லை. நன்றி. @Selvasivagurunathan m:, @Nan:, ‎@AntanO:, ‎@Kanags: @Arularasan. G:, @கி.மூர்த்தி:--Booradleyp1 (பேச்சு) 04:42, 5 மே 2024 (UTC)[பதிலளி]

@Booradleyp1:, பெருவாரியாகக் கவனம் பெற்றவர் என்பதை நீங்கள் ஏற்கிறீர்கள் அது தான் குறிப்பிடத்தக்கமைக்கான ஒரு அளவீடு. அனைத்து முக்கிய ஆளுமைகளின் மீதும் விமர்சனங்கள் உள்ளன. குறிப்பாக மேலே குறிப்பிட்ட விமர்சனங்கள் அனைத்தும் தமிழ் விக்கியிலுள்ள அரசியல்வாதிகள் மீதும் உள்ளன என்பதால் அவற்றை நீக்க முடியுமா? எனவே அவற்றை விவாதிக்க இது இடமில்லை என நினைக்கிறேன். மேலே எழுப்பிய மற்ற கேள்விகள் அனைத்தும் அனுமானத்தின் அடிப்படையானவை. ஒரு நாட்டின் சட்டத்தின்படி ஒருவர் தூக்குத் தண்டனையே பெற்றாலும்(1,2) அவர் செய்தது சரியா தவறா என்பதை விக்கிப்பீடியாவில் நாம் முடிவு செய்வதில்லை. ஒவ்வொருவரின் நடத்தையை வைத்து விக்கிப்பீடியாவில் குறிப்பிடத்தக்கமையை முடிவு செய்வது இயலாத காரியம். நீங்கள் குறிப்பிட்ட எதிர் விமர்சனங்களை மேற்கோளுடன் கட்டுரையில் இணைக்க வேண்டுகிறேன். விக்கி நடைமுறைகளுக்குட்பட்டு குறிப்பிடத்தக்கதா என உரையாடலாமே. -நீச்சல்காரன் (பேச்சு) 06:41, 5 மே 2024 (UTC)[பதிலளி]
வணக்கம், இட்லர் போன்ற சர்வதிகாரிகளுக்கும் விக்கியில் கட்டுரை எழுத இடமுள்ளது. ஆனாலும் ஒரு நபர் பற்றிய பொய்யற்ற இருபக்க விமர்சனங்களையும் உள் வாங்கி கட்டுரை எழுவது சிறப்பு. ஆகவே, இவர் பற்றி விமர்சனங்களை சேர்ப்பதை வரவேற்கிறேன். இல்லாவிட்டால், கட்டுரை இரசிகர் ({{Fanpov}}) கண்ணோட்டத்தில் எழுதப்பட்டதாகிவிடும். ~AntanO4task (பேச்சு) 15:55, 7 மே 2024 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 03:52, 8 மே 2024 (UTC)[பதிலளி]
@Booradleyp1: வணக்கம். கலைக்களஞ்சியத் தளம் எனும் அடிப்படையில், இக்கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்கவேண்டிய ஒன்று. இந்த நபரால் தமிழக அரசியலில் / நிர்வாகத்தில் பல்வேறு காலகட்டங்களில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே குறிப்பிடத்தக்கமை உள்ளது. உரிய மேற்கோள்களுடன், நடுநிலையுடன் கட்டுரை எழுதப்பட்டிருந்தால் இக்கட்டுரையை தமிழ் விக்கிப்பீடியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எனது நிலைப்பாடு ஆகும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)
@Booradleyp1: மேலே விருப்பமிட்டதன் மூலம் குறிப்பிடத்தக்கமை என்பதை ஏற்பதாகக் கொள்கிறேன். குறிப்பிடத்தக்கமை வார்ப்புருவை நீக்கினால் மற்றவர்களும் விமர்சனங்களைச் சேர்க்க இது உதவும். நான் குறிப்பிட்டவாறு மேற்கோளுடன் எதிர் விமர்சனங்களையும் எழுதுங்கள்.-நீச்சல்காரன் (பேச்சு) 04:39, 8 மே 2024 (UTC)[பதிலளி]

சான்றுகள் தேவை[தொகு]

  1. The person is regarded as an important figure or is widely cited by peers or successors; or
  2. The person is known for originating a significant new concept, theory, or technique; or
  3. The person has created or played a major role in co-creating a significant or well-known work or collective body of work. In addition, such work must have been the primary subject of multiple independent periodical articles or reviews, or of an independent and notable work (for example, a book, film, or television series, but usually not a single episode of a television series); or
  4. The person's work (or works) has: (a) become a significant monument, (b) been a substantial part of a significant exhibition, (c) won significant critical attention, or (d) been represented within the [Collection (museum)|permanent collections] of several notable galleries or museums.

மேலேயுள்ளவற்றிற்கு சான்று இணைக்க முடியுமா? --~AntanO4task (பேச்சு) 04:54, 5 மே 2024 (UTC)[பதிலளி]

முதல் விதிக்கான சான்றுகள்
  1. 41வது சென்னை புத்தகக் காட்சியில் அதிகம் விற்பனையான நூல்களுள் ஐந்தாவது நூல் இவருடையது. சமகால அரசியல் தொடர்புடைய நூலென்றால் முதல் நூல் எனலாம். https://www.youtube.com/watch?v=_FYzKAVaY9w
  2. மே 4ஆம் நாள் கைது தொடர்பாக அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. பல சமகால அரசியல்வாதிகள் தங்கள் கருத்தையும் வெளிப்படுத்தினர்.
  3. முந்தைய கைது நடவடிக்கையிலும் பெருவாரியான அரசியல்வாதிகளின் கருத்தைப் பார்க்கலாம். குறிப்பாக பத்திரிக்கையாளர்கள் சங்கம், அரசியல் கட்சித் தலைவர்கள் மேற்கோள் உள்ளன.
இரண்டாவது விதிக்கான சான்று
  1. அதிகார மட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளைப் பொது ஊடகங்கள் வெளிக்கொண்டு வராதவற்றை இவர் வெளிக்கொண்டு வந்தது புதுப்பாணி. அதற்காக இவரை ஜூலியன் அசாஞ்சு என்று ஊடங்கள் குறிப்பிடுகின்றன. [1], [2], [3], [4]


குறிப்பிடத்தக்கமைக்கு இந்த எடுத்துக்காட்டுகள் மட்டில் எனக்கு மாற்றுக் கருத்துகள் உள்ளன. குறிப்பிடத்தக்கமை நபர் என்பதில் எனக்கு மாற்றக் கருத்து இல்லை. --~AntanO4task (பேச்சு) 15:50, 7 மே 2024 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சவுக்கு_சங்கர்&oldid=3950695" இலிருந்து மீள்விக்கப்பட்டது