பேச்சு:சப்தஸ்தானக் கோயில்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கும்பகோணம் சப்தஸ்தானம்[தொகு]

கும்பகோணம் சப்தஸ்தானத்தில் உள்ள தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில் இதுவரை செல்லவில்லை. மேலக்காவேரி கைலாசநாதசுவாமி கோயில் தொடர்பாக சில ஐயங்கள் உள்ளன. இவ்விரு கோயில்களுக்கும் நேரில் சென்று விவரங்கள் பெற்றபின் பதியப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:45, 8 பெப்ரவரி 2016 (UTC)

சுவாமிமலை[தொகு]

கும்பகோணம் சப்தஸ்தானத்தில் சுவாமிமலையில் உள்ள எந்த கோயில் என்ற விவரம் கிடைக்கவில்லை. கிடைத்தபின் சேர்க்கப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:49, 8 பெப்ரவரி 2016 (UTC)

தாராசுரம் ஆவுடையநாதர் கோயில் எனப்படும் ஆத்மநாதசுவாமி கோயில்[தொகு]

கும்பகோணம் சப்தஸ்தானத்தலங்களில் ஒரு கோயிலான, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே தாராசுரத்தில் அமைந்துள்ள தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில் என்ற கோயிலுக்கு 26 மே 2016 அன்று களப்பணி மேற்கொள்ளப்பட்டு உரிய விவரங்களும் புகைப்படங்களும் இணைக்கப்பட்டு புதிய கட்டுரை தற்போது துவங்கப்பட்டுள்ளது. இக்கோயில் ஆவுடையநாதசுவாமி கோயில், ஆவுடையநாதர் கோயில், ஆத்மநாதசுவாமி கோயில் என்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றது. கும்பகோணம் சப்தஸ்தானத்தில் மீதியுள்ள இருகோயில்களைப் பற்றி விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. பெற்றபின் இணைக்கப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:16, 29 மே 2016 (UTC)[பதிலளி]

தலைப்பு[தொகு]

முதல் உசாத்துணையில் உள்ளவாறு ஏன் எழூர்த் தலக் கோயில்கள் என்று பெயரிடலாம் என்று நினைக்கின்றேன். மாற்றலாமா? --செல்வா (பேச்சு) 15:01, 30 மே 2022 (UTC)[பதிலளி]

வணக்கம், செல்வா பொதுவாக தமிழ்நாட்டில் சப்தஸ்தானம் அல்லது சத்தானம் என்றே கூறப்பட்டு வருகிறது. ஏழூர்க்கோயில்கள் என்பதை நாள் தெளிவிற்காக இணைத்தேன். வழக்கத்தில் உள்ள சொல்லுக்கு மாறாக ஏழூர்க் கோயில்கள் என்று அமைத்தால் பொதுமக்களுக்கும், அக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கும் பயனுள்ளதாக இருக்காது. தவிரவும் அனைவரையும் அது சென்று சேராது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் இவ்விழாக்களுக்கு சென்று வருபவன் என்ற நிலையில் மிகவும் யோசித்து இவ்வாறு அமைத்தேன். ஆகவே உள்ளது உள்ளபடியே இருக்கலாம் என்று தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:49, 31 மே 2022 (UTC)[பதிலளி]
நீங்கள் குறிப்பிட்ட இரண்டு மேற்கோள்களில் ஏழூர் என்று குறித்துள்ளனர். தலம் என்பது மிகவும் நன்றாக அறிந்த சொல்தானே. ஏழூர்த்தலம் என்றிருந்தால் பல்லோருக்கும் புரியும்படியாகவும் இருக்குமே. நீங்களே சொல்கின்றீர்கள் " சத்தானம்" என்று குறிப்பிடப்படுகின்றது என்று. தமிழின் இயல்பில் "சப்த" என்பது "சத்த" என்றும் (இதனை ஆங்கிலத்தில் assimilation என்பார்கள், தமிழில் மெய்ம்மயக்க இயல்பு), "ஸ்தானம்" என்பது "தானம்" என்றும் தமிழில் வழங்குதல் நெடுவழக்கு. இலங்கையிலும் கூட்டு "ஸ்"தாபனம் என்பதைக் கூட்டுத்தாபனம் என்று சொல்வார்கள். ஏழூர்த்தலக் கோயில்கள் என்று பெயரிடலாம் ஆனால் கட்டுரைக்குள் ""சப்தஸ்தானக் கோயில்கள்" என்றும் "சத்தானக் கோயில்கள்" என்றும் அறியபப்டுகின்றது எனலாம். தக்க வழிமாற்றுகளும் தரலாம். என்ணிப்பார்க்க வேண்டுகின்றேன். செல்வா (பேச்சு) 14:24, 31 மே 2022 (UTC)[பதிலளி]
வணக்கம், செல்வா. பக்தர்கள் தொடங்கி, கடைக்கோடி வாசகர் வரை பரவலாக சப்தஸ்தானம் என்ற சொல்லே களத்தில் வழங்கப்படுகிறது. சிலவிடங்களில் மட்டுமே ஏழூர் என்ற சொல் அரிதாக பயன்படுத்தப்படுகிறது. இரு முறை இவ்வுலாவில் நான் நேரில் கலந்துகொண்டு சுமார் 25 கிமீ நடந்துசென்றுள்ளேன். இக்கோயில்கள் தொடர்பாக Saptastana Temples of Tiruvaiyaru, Thanjavur District, Nehru Trust for the Indian Collections at the Victoria and Albert Museum in London, New Delhi, 2009 என்ற திட்டத்தினை மேற்கொண்டேன்.என்னுடைய களப்பணிகளின்போது எவருமே ஏழூர் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. மக்களிடம் சப்தஸ்தானம் என்ற சொல்லே மனதில் பதிந்துள்ளதை அறிந்தேன். மக்களுக்கு எளிதாகவும், அணுக்கமாகவும் உள்ள சொல்லைப் பயன்படுத்துவதே சிறந்தது. இல்லாவிட்டால் விழாவுடனான நெருக்கம் குறைந்து அந்நியப்படும் நிலை ஏற்படும். திருவையாறு ஏழூர்க்கோயில்கள், சக்கராப்பள்ளி ஏழூர்க்கோயில்கள், மயிலாடுதுறை ஏழூர்க் கோயில்கள், கும்பகோணம் ஏழூர்க் கோயில்கள்....என்ற வகையில் இங்கு அழைக்கப்படுவதில்லை. இவ்வகையில் அட்டவீரட்டானக் கோயில்கள், சப்த மங்கை தலங்கள், நவக்கிரகக் கோயில்கள், சப்த விடங்க தலங்கள், பஞ்சபூதத் தலங்கள், பஞ்ச குரோச தலங்கள்..என்ற வகையில் அழைக்கப்படுகின்றன. மேலும் சப்தகன்னியர், நவராத்திரி, தசாவதாரம் (இந்து சமயம்), நவ துர்கைகள், நவக்கிரகம், தசாவதாரக் கோயில் என்றவாறான பயன்பாடும் உள்ளன. இவ்வகையில் வழிமாற்றோ, பெயர் மாற்றோ தேவையில்லை என்றும். உள்ளது உள்ளபடியே இருக்கலாம் என்று உறுதியாகக் கருதுகிறேன். இதனடிப்படையில் ஆங்கில விக்கிப்பீடியாவில் Saptastana Temples என்ற தலைப்பில் கட்டுரை எழுத உள்ளேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இப்பதிவை மேலும் மேம்படுத்த உள்ளேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:57, 1 சூன் 2022 (UTC)[பதிலளி]

நீங்கள் சொல்வதுபோல, தலைப்பு அப்படியே இருக்கட்டும். நான் மேலும் வலியுறுத்த விரும்பவில்லை. தமிழில் இப்படி எழுதுவது தவறு! நவராத்திரி என்றெழுதுகின்றோம் "நவராத்ரி" என்றெழுதலாகாது, எழுதுவதுமில்லை. "சப்த" என்னும் சொல்வடிவம் தமிழின் மெய்ம்மயக்க விதிகளை மீறுகின்றது. நீங்களே மேலே கூறியுள்ளவாறு சத்தானம் ("சப்த"ஸ்"தானம்) என்பதாக மக்கள் அழைக்கின்றார்கள் என்று சொல்லியுள்ளீர்கள். அது சரி. அதுபோல சத்தானக் கோயில்கள் என்றெழுதினாலாவது ஏற்கும்படியாக இருக்கும். கன்னிமார் எழுவர், ஏழு கன்னியர் என்றும் கேள்விப்பட்டுள்ளோம். தமிழில் தசாவதாரம் நவக்கிரகம், பஞ்சபூத என்றெல்லாம் எழுதுவதில் சிக்கல் இல்லை. "சப்த" என்றெழுதுவதில் சிக்கல் உள்ளது. தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் உள்ள பாட நூலிலும் ஏழூர்க்கோயில், ஏழூர்த்தலம் என்று குறிப்பிட்டுள்ளார்கள் பாருங்கள்.

ஏழூர்த்தலச் சிறப்பு
திருவையாற்றைத் தலைமைக் கோயிலிடமாகக் கொண்டு, ஆறு சிவாலயங்கள் நல்ல கட்டடக் கலைச் சிறப்புடன் உள்ளன. எல்லாவற்றையும் தொகுத்து ஏழூர்க்கோயில்கள் என்றும், சப்தஸ்தானக் கோயில்கள் என்றும் அழைப்பர்.
திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஏழும் பாடல் பெற்ற சிவாலயங்கள்; ஏழு முனிபுங்கவர் (சப்தரிஷி) ஆசிரமங்களாகப் போற்றிப் புகழப்படுபவை 

ஏழுர்த்தலச் சிறப்பு செல்வா (பேச்சு) 14:28, 1 சூன் 2022 (UTC)[பதிலளி]

வணக்கம், செல்வா. உங்கள் கருத்துகளுக்கு நன்றி. தலைப்பு உள்ளது உள்ளபடி, எவ்வித மாற்றமுமின்றி அப்படியே இருக்கட்டும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:28, 2 சூன் 2022 (UTC)[பதிலளி]