உள்ளடக்கத்துக்குச் செல்

பெலவாடி

ஆள்கூறுகள்: 13°17′03″N 75°59′52″E / 13.284134°N 75.997893°E / 13.284134; 75.997893
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெலவாடி
கிராமம்
பெலவாடியில் உள்ள வீரநாராயணர் கோயில்
பெலவாடியில் உள்ள வீரநாராயணர் கோயில்
பெலவாடி is located in கருநாடகம்
பெலவாடி
பெலவாடி
பெலவாடி is located in இந்தியா
பெலவாடி
பெலவாடி
ஆள்கூறுகள்: 13°17′03″N 75°59′52″E / 13.284134°N 75.997893°E / 13.284134; 75.997893
நாடுஇந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்சிக்மகளூ
அரசு
 • வகைஇந்தியாவின் ஊராட்சி மன்றம்
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
ஏற்றம்
843 m (2,766 ft)
மக்கள்தொகை
 (1983)
 • மொத்தம்2,002
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்
வாகனப் பதிவுகேஏ
அருகிலுள்ள நகரம்சிக்மகளூர்
இணையதளம்karnataka.gov.in

பெலவாடி (Belavadi) என்ற கிராமம், இந்தியாவின் கர்நாடகாவின் சிக்மகளூர் நகரத்திலிருந்து சுமார் 29 கி.மீ. தூரத்திலும் ஹளேபீடுவிலிருந்து 12 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த இடம் மகாபாரத காலத்தைச் சேர்ந்த ஏகசக்ர நகரம் என்றும் கருதப்படுகிறது. மேலும், போசளர் கட்டிடக்கலையின் வீரநாராயணர் கோயிலுக்கும் இந்த ஊர் பெயர் பெற்றது.

விளக்கம்

[தொகு]

வீமன் பகாசுரனைக் கொன்றதை நினைவு கூர்ந்து ஆண்டுதோறும் கிராம மக்களால் பாண்டி-பனா என்ற திருவிழா இங்கு கொண்டாடப்படுகிறது. ஒரு உள்ளூர் தலைவரான தனகராயர் என்பவருக்குச் சொந்தமான ஒரு பெரிய குளம் ஒன்று உள்ளது. அதன் கரையில் ஒரு கோயிலும் கட்டப்பட்டுள்ளது. இது முதலில் ஒரு சமண மையமாக இருந்தது. பின்னர் இரண்டாம் கிருஷ்ணராச உடையார் இந்த கிராமத்தை சிருங்கேரி சாரதா மடத்திற்கு தானமாக வழங்கினார்.

வீரநாராயணர் கோயில்

[தொகு]

வீரநாராயணர் கோயில் தனித்துவமான போசளர் நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். போசளர் கோயில் திரிகூட வடிவத்தில் உள்ளது. மேலும், அந்த கிராம மையத்தில் அமைந்துள்ளது. யோக நரசிம்மர் மற்றும் கோலாலு கோபாலனுடன் வீரநாராயணரும் இங்கு பிரதான தெய்வமாகும். இந்தியாவின் தொல்பொருள் துறையின் ஆய்வுகளின்படி இந்த கோலாலு கோபாலன் இந்தியாவில் ஒரு அழகான சிலையாகும். மார்ச் 23 அன்று (இரவும் பகலும் தலா 12 மணிநேரம் இருக்கும்போது) ஒவ்வொரு ஆண்டும் சூரிய ஒளி நேரடியாக வீரநாராயணர் கோயிலின் கருவறைக்குள் நுழைகிறது.

ஒரு கணபதி கோயிலும் இங்குள்ளது. இங்கு பிரதான தெய்வம் ஹட்டடா (எறும்பு மலை) கணபதி, உத்தபவ கணபதி மற்றும் வரத (வரம்) கணபதி என அழைக்கப்படுகிறார். இந்த கோயில் சிருங்கேரி மடத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு இலவச மதிய உணவும் வழங்கப்படுகிறது. இந்த கோயிலுக்கு அருகில் சங்கரேசுவரருக்கு மற்றொரு கோயில் உள்ளது. பாழடைந்த பசவேசுவரர் கோயில் சமீபத்தில் புனரமைக்கப்பட்டது. பெலவாடியின் மற்ற கோயில்கள் பீர்தேவுரு, கரியம்மா மற்றும் பிண்டிகம்மா.

குறிப்புகள்

[தொகு]

பக்கம் 39, ஆர்வமுள்ள இடங்கள், வர்த்தமானி துறை, கர்நாடகா [1983] [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2015-02-12. பார்க்கப்பட்ட நாள் 2015-02-12.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலவாடி&oldid=3806421" இலிருந்து மீள்விக்கப்பட்டது