பெரும் பருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெரும் பருந்து
Rufous-bellied-hawk-eagle2.JPG
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: அசிபித்ரிபார்மசு
குடும்பம்: அசிபித்ரிடே
பேரினம்: Lophotriorchis
Sharpe, 1874
இனம்: Lophotriorchis kienerii
இருசொற் பெயரீடு
Lophotriorchis kienerii
(G. de Sparre, 1835)
வேறு பெயர்கள்
  • Hieraaetus kienerii
  • Astur Kienerii protonym

பெரும் பருந்து (Rufous-bellied Eagle) இப்பறவை ஊன் உண்ணிப் பறவைகள் இனத்தைச் சார்ந்தவையாகும். இவற்றின் வாழ்விடம் ஆசியப் பகுதிகளில் அமைந்துள்ள வெப்பமண்டலக் காட்டுப் பகுதிகள் ஆகும். இவற்றின் குடும்பப்பெயர் அக்சிபிட்ரிடே என்பதாகும். தோற்றத்தில் பருந்து போலும் வல்லூறு போலும் காணப்பட்டாலும் இவை இது அக்விலா என்ற தனிப் பேரினத்தைச் சார்ந்தவையாகக் கருதப்படுகிறது.

விளக்கம்[தொகு]

வயது முதிர்ந்த இப்பறவைகளில் ஆண் பறவையின் கழுத்து குட்டையாகவும், தலைப்பகுதியில் காணப்படும் கருமைநிறம் தொப்பி அணிந்ததுபோல் காட்சி அளிக்கிறது. கழுத்துக்கு கீழ் காணப்படும் தூவல் முந்திரி கொட்டையின் நிறத்தைப்போல் மற்றவற்றிலிருந்து இவற்றை வேறுபடுத்திக்காட்டுகிறது. ஆண் பெண் இனங்களைப் பிரித்தரியமுடியாமல் இருந்தாலும் பெண் பறவையின் முகப்பகுதியில் கருப்பு நிறம் அதிகமாக உள்ளது. இவை உட்காரும்போது இறகுகள் வால் பகுதியின் நீளம் வரை இருக்கிறது. இவற்றின் கணுக்கால்கள் வரை இறகுகள் வளர்ந்து ஒட்டிக்கொண்டு இருக்கிறது. இவற்றின் குஞ்சுகளின் உடல்களில் வெள்ளை நிறத்திலான ரோமங்களுடன் இருண்ட கோடுகளும் கொண்டு ஒட்டிக்கொண்டிருக்கும். [2]

வகைபிரித்தல்[தொகு]

இந்தியாவில் காணப்படும் பறவைகள் பற்றி எழுதியவரான ஜெர்டன் என்பவரால் இப்பறவை இனம் காணப்பட்டு பதியப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் கஷ்கொட்டை கழுகுவிலிருந்து பிரித்தரியப்பட்டுள்ளது.

வாழ்விடம்[தொகு]

பொதுவாக இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் நேபாளம், அசாம், இமயலைப்பகுதி, கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதி போன்ற இடங்களிலும், இலங்கை, பர்மா, தாய்லாந்து, கைன், இந்தோனேசியா, சுமாத்திரா, போர்னியோ, பிலிபைன்ஸ், சுவெசி, மேலும் சும்பாவா போன்ற நாடுகளிலும் பரவியுள்ளது.

வாழ்க்கைச் சூழல்[தொகு]

இப்பறவை இலங்கை மரப்புறா, மயில் கோழி, காட்டுக் கோழி போன்ற இனங்களை உணவாக உட்கொள்கிறது. இவை அதிகமாக குளிர் காலங்களில் இனப்பெருக்கம் செய்கிறது. இவை பறக்கும்பொது விமான இறக்கையைப்போல் விரித்துக்கோண்டு வானில் பறக்கிறது. பச்சை இலைகளைக் கொண்டே கூடுகட்டும் இப்பறவை, ஒரே ஒரு முட்டையை மட்டுமே இடும் குணம் கொண்டுள்ளது. இதன் குஞ்சை இரண்டு இனங்களுமே பாதுகாத்து பராமரிக்கிறது.

மேலும் பார்க்க[தொகு]

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரும்_பருந்து&oldid=2755782" இருந்து மீள்விக்கப்பட்டது