உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை மரப் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கை மரப் புறா
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கொலம்பா
இனம்:
C. torringtoniae
இருசொற் பெயரீடு
Columba torringtoniae
(கெலார்ட், 1853)
வேறு பெயர்கள்

கொலம்பா தோரிங்தோனி

இலங்கை மரப் புறா (Sri Lanka wood pigeon)(கொலம்பா தோரிங்தோனியே) என்பது ஒரு கொலும்பா பேரினத்தைச் சேர்ந்த புறா சிற்றினம் ஆகும். இது இலங்கையின் மலைகளில் வசித்து இனப்பெருக்கம் செய்யும் அகணிய உயிரி.

இந்த சிற்றினம் இலங்கையின் மத்திய மலைநாட்டில் உள்ள ஈரமான பசுமைக் காடுகளில் கூடு கட்டும் தன்மையுடையது. மரத்தில் குச்சிகளைப் பயன்படுத்திக் கூடு கட்டி, வெண்முட்டை ஒன்றை இடும். இது வேகமாகப் பறக்கக்கூடியது. புறாக்களின் சிறப்பியல்புகளான இறக்கையினை அவ்வப்போது வேகமாக அசைக்கக்கூடியது. இதன் உணவு காய்கறிகள். பொதுவாக அமைதியாகக் காணப்படும் இந்த புறா இனப்பெருக்க காலத்தில் ஆந்தை போன்ற குரல் எழுப்பும்.

இலங்கை மரப் புறாவின் உடல் நீளம் 36 செ.மீ. வரை உள்ளது. இதன் மேல் பகுதியும் வால் பகுதியும் அடர் சாம்பல் நிறமாகவும், தலை மற்றும் அடிப்பகுதி இளஞ்சிவப்பு நிறமாகவும், வயிற்றுப் பகுதி வெளிறியதாகவும் காணப்படும். கழுத்தில் கருப்பு மற்றும் வெள்ளை சதுரங்கப் பலகை போன்ற கட்டங்கள் உள்ளன.

இந்த புறாவை ஓட்டன் சமவெளி தேசிய பூங்காவின் காடுகளில் மிக எளிதாகக் காணலாம்.

கொலம்பா தோரிங்தோனியே

சிறப்பு[தொகு]

இலங்கையில், இந்த பறவை சிங்கள மொழியில் மணிலா கோயா (මානිලගොයා) - மணிலகோயா என்று அழைக்கப்படுகிறது.[2] இந்த மரப் புறாவின் நினைவாக 25c இலங்கை அஞ்சல் முத்திரை வெளியிடப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Columba torringtoniae". IUCN Red List of Threatened Species 2016: e.T22690178A93263874. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22690178A93263874.en. https://www.iucnredlist.org/species/22690178/93263874. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2010-04-01. பார்க்கப்பட்ட நாள் 2014-10-13.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "Birds on stamps: Sri Lanka".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_மரப்_புறா&oldid=3927873" இலிருந்து மீள்விக்கப்பட்டது