பெரும்குளம்
தோற்றம்
பெரும்குளம் Perumkulam | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 8°42′19″N 76°47′10″E / 8.705244°N 76.786133°E | |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | கொல்லம் |
| வட்டம் (தாலுகா) | கொட்டாரக்கரா தாலுக்கா |
| அரசு | |
| • நிர்வாகம் | கிராம ஊராட்சி |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 19,074 |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வம் | மலையாளம், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 691566[1] |
| வாகனப் பதிவு | கே.எல்- |
பெரும்குளம் (Perumkulam) இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.[2][3] இது இந்தியாவின் இரண்டாவது மற்றும் கேரளாவின் முதல் புத்தகங்களின் கிராமமாகும்.[4] இந்தக் கிராமம் 2020 ஆம் ஆண்டு சூன் மாதம் 19 ஆம் தேதியன்று அங்கீகாரத்தைப் பெற்றது [5]
அமைவிடம்
[தொகு]பெரும்குளம் கிராமம் கொட்டாரக்கரா - பூவட்டூர் சாலையில் குளக்கடை ஊராட்சியில் கொட்டரக்கரா நகரத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும், பிரதான மத்திய சாலையில் ஈஞ்சக்காட்டில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. அருகிலுள்ள இரயில் நிலையம் கொட்டாரகரா இரயில் நிலையம் ஆகும்.
மக்கள்தொகையியல்
[தொகு]2001[update] ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் படி பெரும்குளத்தின் மொத்த மக்கள் தொகை 19074 ஆகும். இதில் ஆண்கள் 9286 பேரும் பெண்கள் 9788 பேரும் இருந்தனர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "India Post :Pincode Search". Archived from the original on 2012-05-20. Retrieved 2008-12-16.
- 1 2 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Retrieved 2008-12-10.
- ↑ "Yahoo Maps India". Retrieved 2008-12-18.
- ↑ "How Perumkulam became Kerala's first village of books". Retrieved 2021-07-18.
- ↑ "Perumkulam becomes first 'village of books' in Kerala; MT declares via online". Archived from the original on 2022-01-25. Retrieved 2022-01-25.