உள்ளடக்கத்துக்குச் செல்

பெரிய நாணல் கதிர்க்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாணல் கதிர்க்குருவி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
அக்ரோசெபாலிடே
பேரினம்:
அக்ரோசெபாலசு
இனம்:
A. stentoreus
இருசொற் பெயரீடு
Acrocephalus stentoreus
எம்பிரிச் & எரன்பர்க், 1833

பெரிய நாணல் கதிர்க்குருவி[2] அல்லது நாணல் கதிர்க்குருவி [Clamorous reed warbler (Acrocephalus stentoreus)] என்பது அளவில் பெரியதும் அக்ரோசெபாலசு பேரினத்தைச் சேர்ந்த ஒரு தொல்லுலக கதிர்க்குருவி ஆகும். தென்னிந்தியாவில் காணப்படுவது இதன் உள்ளினங்களுள் ஒன்றான A. s. brunnescens என்று பதிவு செய்யப்பட்டுள்ளது[3].

தோற்றம்[தொகு]

வரிகளோ கீற்றுகளோ அற்ற உடல்; உடலின் மேற்பகுதி காய்ந்த மரப்பட்டை நிறத்துடன் பச்சை கலந்த நிறமும் வாலையொட்டிய பகுதி செம்பழுப்பு நிறமும் கொண்டது (முதன்மை இனம் A. s. stentoreus). அனைத்து உள்ளினங்களிலும் தொண்டை வெண்மையாகவும் உடலின் அடிப்பகுதி மங்கலான மஞ்சள் நிறத்திலிருக்கும். தெளிவற்ற வெண்ணிற புருவமும் நீண்ட அலகும் வாலும் கொண்டிருக்கும்[4].

உள்ளினங்கள்[தொகு]

A. s. brunnescens உள்ளினத்தில் பச்சை நிறம் தோயாத மரப்பட்டை நிறத்துடன் (பழுப்பு நிறம்) உடலின் மேற்பகுதி இருக்கும். இத்துடன் ஒப்பிடும்போது இலங்கையில் மட்டுமே காணப்படும் அகணிய உள்ளினமான A. s. meridionalis அடர் நிறத்துடனும் சற்று சிறியதாகவும் இருக்கும்[5].

பரவலும் இனப்பெருக்கப் பகுதிகளும்[6][தொகு]

முதன்மை இனம் (A. s. stentoreus)[தொகு]

எகிப்திலிருந்து வடக்கு சூடான் வரையிலான நைல் ஆற்றிடைத்திட்டுப் பகுதியிலும் நைல் ஆற்றினையொட்டிய பகுதிகளிலும் இனப்பெருக்கம் கொள்கின்றது.

A. s. levantina உள்ளினம்[தொகு]

வடக்கு இசுரேலின் ஹூலா பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து ஜோர்டன் பள்ளத்தாக்கு வழியாக சாக்கடலின் வடக்குப் பகுதி முதல் ஜெசுரீல் பள்ளத்தாக்குப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றது.

A. s. brunnescens உள்ளினம்[தொகு]

கிழக்கு சூடானிலிருந்து எரித்ரயா, வடமேற்கு சோமாலியா வழியாக அரேபிய மூவலந்தீவின் சில பகுதிகளிலும் கசகஸ்தான், துருக்கமினிஸ்தான், தஜிகிஸ்தான், உசுபெகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தெற்கு ஈராக், ஈரான், பாகிஸ்தானின் சில பகுதிகளிலும் இந்தியாவில் காஷ்மீர் பள்ளத்தாக்கு, ராஜஸ்தான், குஜராத், கேரளா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளிலும் மும்பை, கொல்கத்தாவை ஒட்டிய பகுதிகளிலும் இனப்பெருக்கம் செய்கின்றது. தென்னிந்தியாவின் பிற பகுதிகளிலும் (தமிழ்நாடு உள்பட) இலங்கையிலும் காணப்பட்டாலும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2013). "Acrocephalus stentoreus". IUCN Red List of Threatened Species 2013. https://www.iucnredlist.org/details/22714751/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  2. கிரமிட் & பலர் (2005). தென் இந்திய பறவைகள். பக். 196:5. பி. என். எச். எஸ்.
  3. "Acrocephalus stentoreus brunnescens". பார்க்கப்பட்ட நாள் 04 சூலை 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  4. "BOW - CRW - Appearance (Identification)". பார்க்கப்பட்ட நாள் 04 July 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  5. Ali. S, Ripley. S.D. (1972). Handbook of the Birds of India and Pakistan [Vol. 8. p. 99 (1550 C)].
  6. "BOW - CRW - Systematics (Subspecies)". பார்க்கப்பட்ட நாள் 04 July 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)