பூவாறந்தோடு

ஆள்கூறுகள்: 11°23′11″N 76°04′25″E / 11.38639°N 76.07361°E / 11.38639; 76.07361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூவாறந்தோடு
பூவாறந்தோடு கிராமம்
பூவாறந்தோடு கிராமம்
ஆள்கூறுகள்: 11°23′11″N 76°04′25″E / 11.38639°N 76.07361°E / 11.38639; 76.07361
CountryIndia
Stateகேரளம்
மாவட்டம்கோழிக்கோடு மாவட்டம்
தாலுகாதாமரச்சேரி
பஞ்சாயத்துகூடரஞ்சி
அரசு
 • நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவைஇராகுல் காந்தி
 • சட்டமன்ற உறுப்பினர்லின்டோ ஜோசப்
 • ஊராட்சித் தலைவர்லின்டோ ஜோசப்
 • ஊராட்சி உறுப்பினர்எல்சம்மா ஜார்ஜ்
மொழிகள்
 • அதிகாரபூர்வமானவைமலையாளம், ஆங்கிலம்
அஞ்சல் குறியீட்டு எண்673604
வாகனப் பதிவுKL 57

பூவாறந்தோடு (Poovaranthode, மலையாளம்: പൂവാറൻതോട്) கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறு மலையடிவார கிராமம் ஆகும். மலபார் பகுதிகளில் அமைந்துள்ள குளுமையான இடங்களில் இதுவும் ஒன்றாகும். பூவாறந்தோடு பொதுவாக ஈரப்பதமான வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. இப்பகுதியின் மிகவும் வெப்பப் பருவம் மார்ச் முதல் மே வரை நீடிக்கும்.[1] சராசரி ஆண்டுக்கு 3500 மிமீக்கு மேல் மழைப் பொழிகிறது. கோழிக்கோடு மாவட்டத்துக்கு அதிகபட்சமாக உள்ளது. இங்கு இந்துக்களும், கிறித்தவர்களும், இசுலாமியர்களும் வாழ்கின்றனர். இது ஒரு விவசாய பூமி. இதனின் மக்கள்தொகையில் பெரும் பகுதி விவசாயினர். சாதிக்காய், கொக்கோ, முந்திரி, வாழைப்பழம், தேங்காய் ஆகியவை முக்கியப் பொருட்களாக விளைவிக்கப்படுகின்றன.[2] இப்போதெல்லாம் பன்றி வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்றவற்றையும் செய்கின்றனர். இந்த கிராமம் கேரளத்தின் சாதிக்காய் கிராமமாக கருதப்படுகிறது.

வரலாறு[தொகு]

பூவாறந்தோடு புலம்பெயர்ந்தவர்களின் கிராமமாகும். முன்னோர்கள் திருவிதாங்கூரில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள், கோட்டயம், பாலா, தொடுபுழா ஆகிய இடங்களிலிருந்து குடியேற்றம் தொடங்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் மலபார் பகுதியானது மதராச மாகாணத்தின் கீழ் இருந்தது சுதந்திர இந்தியாவில் மலபார் மெட்ராஸ் பிரசிடென்சியின் கீழ் இருந்தது. 20 ஆம் நூற்றாண்டில் மத்திய திருவிதாங்கூரில் மக்கள் தொகை அதிகமாக இருந்ததாலும், விவசாய நிலத்தின் அளவு மாறாமல் இருந்ததாலும், சாகுபடியின் விளைவாக பலர் மலபாருக்கு குடிபெயர்ந்தனர். குடியேறியவர்களில் பெரும்பாலானோர் சிரிய கிறித்தவர்கள்.

இருப்பிடம்[தொகு]

பூவாறந்தோடு மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் சராசரி கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,000 மீட்டர் (3280.84 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. கோழிக்கோடு நகரத்திலிருந்து சாலை வழியாக சுமார் 48 கிமீ தொலைவில் உள்ளது.[3] அருகிலுள்ள விமான நிலையம் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம், அருகிலுள்ள தொடருந்து நிலையம் கோழிக்கோடு தொடருந்து நிலையமாகும்.[4] மேற்கு தொடர்ச்சி மலைகள், புல்வெளிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன. ரசிக்க நிறைய சுத்தமான காற்றும், நன்னீர் வசதியும் கொண்ட அழகான பகுதியாகும்.

இடங்கள்[தொகு]

பூவரந்தோடு ஜிஎல்பி பள்ளி, தூய அன்னை மரியாள் தேவாலயம், சும்மா பள்ளிவாசல், ஸ்ரீ உதயகிரி தருமசாத்தா கோயில், சம்சுகாரிகா நிலையம், வயனாசாலா, சிசு மந்திரம் மற்றும் வனசும்ராசன சமாதி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மக்கள்தொகையியல்[தொகு]

மக்கள்தொகையில் கிறித்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர், அதைத் தொடர்ந்து முஸ்லீம், இந்து சமூகங்கள் உள்ளன. பெரும்பான்மையான மக்கள் கேரளத்தின் தென் மாவட்டங்களில் இருந்து (மத்திய திருவிதாங்கூர்) குடியேறியவர்களின் வழித்தோன்றல்கள்.

போக்குவரத்து[தொகு]

கோழிக்கோடு-திருவம்பாடிக்கு போக்குவரத்துக்கு கேரள மாநில சாலை போக்குவரத்து கழக பேருந்து சேவை உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "പൂവാറൻതോട്: ഭൂപടത്തിൽ ഇല്ലാത്ത ഇടം" (in ml). Localnews.manoramaonline.com. https://localnews.manoramaonline.com/kozhikode/features/2017/07/07/kozhikode-poovaranthodu.html. 
  2. "Poovaranthode 2019 (with Photos): Top 20 Places to Stay in Poovaranthode - Vacation Rentals, Vacation Homes - Airbnb Poovaranthode, Kerala, India". Airbnb.co.in (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 14 February 2019.
  3. "പൂവാറൻതോട്" (in ml). Safari Malayalam Travelogues. 2018-08-19. https://safarittravelogues.wordpress.com/2018/08/19/%E0%B4%AA%E0%B5%82%E0%B4%B5%E0%B4%BE%E0%B4%B1%E0%B5%BB%E0%B4%A4%E0%B5%8B%E0%B4%9F%E0%B5%8D/. 
  4. "പൂവാറൻതോട് പ്രകൃതി" (in ml). mathrubhumi.com. 2019-06-11. https://www.mathrubhumi.com/kozhikode/news/thiruvambadi-1.3469661. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூவாறந்தோடு&oldid=3916192" இலிருந்து மீள்விக்கப்பட்டது