உள்ளடக்கத்துக்குச் செல்

பூமிஜ் கிளர்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூமிஜ் கிளர்ச்சி
நாள்1832–33
அமைவிடம்தால்பூம், மன்பூம், ஜங்கில் மகால்
பிற பெயர்கள்Gகங்கா நாரயண சிங்
உள்நோக்கம்பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் கொள்கைகள்
பங்கேற்றோர்பூமிஜ் மக்கள் மற்றும் பிறர்

பூமிஜ் கிளர்ச்சி (Bhumij rebellion) ), "கங்கா நாராயண் ஹங்காமா" என்றும் அழைக்கப்படுகிறது. இது 1832-1833 ஆம் ஆண்டு வங்காளத்தில் மிட்னாபூர் மாவட்டத்தின் தால்பூம் மற்றும் ஜங்கிள் மகால் பகுதிகளில் உள்ள பூமிஜ் பழங்குடியினரால் நடத்தப்பட்ட கிளர்ச்சியாகும். இதற்கு கங்கா நாராயண் சிங் என்பவர் தலைமை தாங்கினார்.[1][2] ஆங்கிலேயர்கள் இதை "கங்கா நாராயணின் ஹங்காமா" என்று அழைத்தனர். அதே சமயம் வரலாற்றாசிரியர்கள் இதை "சுவார் கிளர்ச்சி" என்றும் எழுதியுள்ளனர்.

பாரபூம் ராச்சியம்[தொகு]

பாரபூமின் ராஜா விவேக் நாராயண் சிங்குக்கு இரண்டு ராணிகள் இருந்தனர். இரண்டு ராணிகளுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். 18 ஆம் நூற்றாண்டில் மன்னர் இறந்த பிறகு, இரண்டு மகன்கள் இலட்சுமண் நாராயண் சிங் மற்றும் இரகுநாத் நாராயண் சிங் இடையே வாரிசுக்கான போராட்டம் இருந்தது.

பாரம்பரிய பூமிஜ் பழங்குடியினரின் முறைப்படி, மூத்த ராணியின் மகனான இலட்சுமண் நாராயண் சிங் அரசராக ஒரே வாரிசு ஆவார். ஆனால் ஆங்கிலேயர்கள் இளைய ராணியின் மகன் இரகுநாத் நாராயணை அரசராக நியமித்த பிறகு குடும்ப தகராறு தொடங்கியது. உள்ளூர் நில உடமையாளர் ஒருவர் இலட்சுமண நாராயணனுக்கு ஆதரவாக இருந்தார். ஆனால் இரகுநாத்த்தின் ஆங்கிலேயரின் ஆதரவுக்கும் ராணுவ உதவிக்கும் முன்னால் அவரால் நிற்க முடியவில்லை. இலட்சுமண் சிங் மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இலட்சுமண் சிங் தனது வாழ்வாதாரத்திற்காக பந்தாதி கிராமத்தின் சாகிர் சாகிராக நியமிக்கப்பட்டார். கிராமத்தைப் பராமரிப்பது மட்டுமே அவரது வேலையாக இருந்தது.[3] இலட்சுமண் சிங் தனது ஜமீந்தாரி உரிமைகளை திரும்பப் பெற போராடினார். இவரது மகன் கங்கா நாராயண் சிங் பின்னர் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்தார்.

கங்கா நாராயண் சிங்கின் ஓவியம்

கலகம்[தொகு]

கங்கா நாராயணன் , ஆங்கிலேயர் ஆட்சி மற்றும் சுரண்டல் கொள்கைக்கு எதிராக சர்தார் கொரில்லா வாஹினி சேனா என்ற புரட்சிப் படையை உருவாக்கினார். அதற்கு அனைத்து சாதியினரின் ஆதரவும் இருந்தது. இவரது ராணுவத்தின் தலைமைத் தளபதியாக ஜிர்பா லயா என்பவர் நியமிக்கப்பட்டார். மேலும் பல நில உடமையாளர்களும் இதற்கு ஆதரவு அளித்தனர். ஏப்ரல் 2, 1832 இல் வந்தியில் கங்கா நாராயணன் பாரபூமின் திவானையும் பிரித்தானிய தரகர் மாதவ சிங்கையும் தாக்கி கொன்றார். பாரபூமின் முக்கிய இடங்கள் அவரால் கைப்பற்றப்பட்டன.[4][5]

கங்கா நாராயணனை ஆங்கிலேயர்களால் கைது செய்ய இயலவில்லை.இவரது இயக்கம் வங்காளத்தின் பல்வேறு இடங்களுக்கும் பரவியது. ஆங்கிலேயர்கள் பல இடங்களின் தோற்றனர்.[6][7] வங்காளத்தின் புருலியா, வர்த்தமான், மிட்னாபூர் மற்றும் பாங்குரா, பீகாரிலுள்ள சோட்டாநாக்பூர் (இப்போது சார்க்கண்டு ), மயூர்பஞ்சு, கேந்துசர் மற்றும் ஒடிசாவின் சுந்தர்கர் போன்ற இடங்களில் இவரது இயக்கத்தின் தாக்கம் தீவிரமாக இருந்தது. இதன் விளைவாக, முழு ஜங்கிள் மஹாலும் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. அப்பகுதி மக்கள் அனைவரும் கங்கா நாராயணனை ஆதரிக்கத் தொடங்கினர்.[8]

இறப்பு[தொகு]

ஆங்கிலேயக் காவல் நிலையத்தை தாகும்போது ஏற்பட்ட காயத்தினால் பிப்ரவரி 6, 1833 இல், இறந்தார்.[9][10] பூமிஜ் கலகத்திற்குப் பிறகு, ஆட்சி அமைப்பில் விரிவான மாற்றங்கள் ஏற்பட்டன. வருவாய்க் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Orans, Martin (May 1969). "The Bhumij Revolt (1832–33): (Ganga Narain's Hangama or Turmoil). By Jagdish Chandra Jha. Delhi: Munshiram Manoharlal, 1967. xii, 208 pp. Map, Glossary, Bibliography, Index, Errata." (in en). The Journal of Asian Studies 28 (3): 630–631. doi:10.2307/2943210. பன்னாட்டுத் தர தொடர் எண்:1752-0401. https://www.cambridge.org/core/journals/journal-of-asian-studies/article/abs/bhumij-revolt-183233-ganga-narains-hangama-or-turmoil-by-jagdish-chandra-jha-delhi-munshiram-manoharlal-1967-xii-208-pp-map-glossary-bibliography-index-errata/A5836E32C9F5325E50403A06E8FFB904. 
  2. Kumar, Akshay (2021-06-18). "Bhumij Revolt & Santhal Rebellion | Jharkhand". Edvnce (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-21.
  3. "1248929 | रांची : चुआड़ विद्रोह के महानायक शहीद रघुनाथ व गंगा नारायण को सम्मान देगी सरकार". 2021-01-12. Archived from the original on 2021-01-12. பார்க்கப்பட்ட நாள் 2022-07-23.
  4. Bengal (India), West (1985). West Bengal District Gazetteers: Puruliya (in ஆங்கிலம்). State editor, West Bengal District Gazetteers.
  5. Bengal (India), West (1968). West Bengal District Gazetteers: Bānkurā by Amiya Kumar Banerji (in ஆங்கிலம்). State editor, West Bengal District Gazetteers.
  6. Panda, Barid Baran (2005). Socio-economic Condition of South West Bengal in the Nineteenth Century (in ஆங்கிலம்). Punthi Pustak. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-86791-52-3.
  7. Mishra, Asha; Paty, Chittaranjan Kumar (2010). Tribal Movements in Jharkhand, 1857-2007 (in ஆங்கிலம்). Concept Publishing Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8069-686-2.
  8. Changing Profile of the Frontier Bengal, 1751-1833. 1984.
  9. Aquil, Raziuddin; Mukherjee, Tilottama (2020-02-25). An Earthly Paradise: Trade, Politics and Culture in Early Modern Bengal (in ஆங்கிலம்). Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-000-07180-1.
  10. Panigrahi, Tara Sankar (1982). The British Rule and the Economy of Rural Bengal: A Study of Mallabhum from 1757 to 1833 (in ஆங்கிலம்). Marwah Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8364-1036-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூமிஜ்_கிளர்ச்சி&oldid=3925438" இலிருந்து மீள்விக்கப்பட்டது