பூந்தலைக்கிளி
பூந்தலைக்கிளி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Himalayapsitta |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/HimalayapsittaH. roseata
|
இருசொற் பெயரீடு | |
Himalayapsitta roseata (பிசுவாசு, 1951) | |
வேறு பெயர்கள் | |
|
பூந்தலை கிளி ( Blossom-headed parakeet ) என்பது சிட்டாகுலிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கிளி ஆகும்.
வகைபிரித்தல்
[தொகு]இந்த இனம் இரண்டு கிளையினங்களாக பிரிக்கப்பட்டுள்ளது: [2] [3]
- ஹிமாலயாப்சிட்டா ரோசாட்டா ஜூனே பிஸ்வாஸ், 1951 (தெற்கு மியான்மர் மற்றும் தாய்லாந்து முதல் லாவோஸ், கம்போடியா மற்றும் வியட்நாம் வரை)
- ஹிமாலயாப்சிட்டா ரோசாட்டா ரோசாட்டா பிஸ்வாஸ், 1951 (வட இந்தியா முதல் பூட்டான், வங்கதேசம் மற்றும் வட மியான்மர்)
பரவலும் வாழ்விடமும்
[தொகு]இந்த இனம் கிழக்கு வங்காளதேசம், பூட்டான், வடகிழக்கு இந்தியா, நேபாளம், கிழக்கு நோக்கி தென்கிழக்காசியா ( கம்போடியா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து, வியட்நாம் ), சீனாவில் வசித்து இனப்பெருக்கம் செய்பவை. [1] Retrieved 10 January 2020.</ref> பூந்தலைக்கிளி தாழ்நிலங்கள், அடிவார திறந்தவெளி காடுகள், வன விளிம்புகளில் வாழ்கிறது. [4]
விளக்கம்
[தொகு]பூந்தலைக்கிளி ஒரு வெளிர் பச்சை நிற கிளி ஆகும். [4] இது 18 செமீ (7.1 அங்) நீளமுள்ள வாலுடன் சேர்த்து 30 செமீ (12 அங்) 18 நீளம் கொண்டது. ஆண் பறவையின் தலை இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். தலை உச்சி, பிடரி, தாடை வெளிர் நீலமாக இருக்கும். ஒரு குறுகிய கருப்பு கழுத்துப் பட்டையும், ஒரு கருப்பு கன்னப் பட்டையும் இருக்கும். தோள்பட்டையில் ஒரு சிவப்புத் திட்டு இருக்கும். பிட்டம், வால் போன்றவை நீல-பச்சையாக இருக்கும். வால் முனை மஞ்சள் நிறமாக இருக்கும். மேல் அலகு மஞ்சள் நிறத்திலும், கீழ் அலகு கருமையாகவும் இருக்கும். பெண் பறவைவைக்கு வெளிர் சாம்பல் நிற தலை இருக்கும். கருப்பு கழுத்துப் பட்டை, [4] கன்னப் பட்டை போன்ற்வை இல்லை. கீழ் அலகு வெளிறியதாக இருக்கும். முதிர்ச்சியடையாத பறவைகளுக்கு பச்சை தலையும், சாம்பல் கன்னமும் இருக்கும். மேல் கீழ் அலகுகளும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். மேலும் தோள்பட்டையில் சிவப்புத் திட்டு இருக்காது. [5] வெவ்வேறு தலை நிறம் மற்றும் வாலில் உள்ள மஞ்சள் முனை இந்த இனத்தை இதை ஒத்த செந்தலைக் கிளியிலிருந்து ( எச். சயனோசெபலா ) வேறுபடுத்துகிறது.
உயிரியல்
[தொகு]பூந்தலைக்கிளிகள் மரங்களில் உள்ள பொந்துகளில் கூடு கட்டி, 4-5 வெள்ளை முட்டைகளை இடுகின்றன. இதன் உணவில் பழங்கள், பூக்கள் முதன்மை இடம் கொண்டுள்ளன. இது கூடிவாழ்கின்ற மற்றும் முகுந்த ஒலி எழுப்பும் இனமாகும். [6]
நூல் பட்டியல்
[தொகு]- Grimmett, Inskipp y Inskipp, Birds of India ISBN 0-691-04910-6
- Josep del Hoyo, Andrew Elliott, Jordi Sargatal (Hrsg.): Handbook of the Birds of the World. Volume 4: Sandgrouse to Cuckoos. Lynx Edicions, Barcelona, 1997. ISBN 8487334229
- Joseph Michael Forshaw: Parrots of the World - An Identification Guide. Princeton University Press, Princeton 2006, ISBN 978-0-691-09251-5.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 BirdLife International (2017). "Himalayapsitta roseata". IUCN Red List of Threatened Species 2017: e.T22685486A111365871. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22685486A111365871.en. https://www.iucnredlist.org/species/22685486/111365871. பார்த்த நாள்: 10 January 2020.
- ↑ ITIS
- ↑ Avibase
- ↑ 4.0 4.1 4.2 ebird
- ↑ Word Parrot Trust
- ↑ xeno-canto
- Birds of India by Grimmett, Inskipp and Inskipp ,பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-04910-6