பூஜா வஸ்திரகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூஜா வஸ்திரகர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பூஜா வஸ்திரகர்
பிறப்பு25 செப்டம்பர் 1999 (1999-09-25) (அகவை 24)
ஷடோல், மத்தியப் பிரதேசம், இந்தியா
பட்டப்பெயர்பாபுலால், பப்லூ
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை மிதவேகம்
பங்குபந்துவீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 122)10 பெப்ரவரி 2018 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி ஒநாப12 April 2018 எ. இங்கிலாந்து
இ20ப அறிமுகம் (தொப்பி 57)13 பெப்ரவரி 2018 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி இ20ப31 ஜனவரி 2020 எ. இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெஒபது பெஇ20
ஆட்டங்கள் 6 20
ஓட்டங்கள் 88 105
மட்டையாட்ட சராசரி 17.60 17.50
100கள்/50கள் 0/1 0/0
அதியுயர் ஓட்டம் 51 22*
வீசிய பந்துகள் 186 300
வீழ்த்தல்கள் 0 16
பந்துவீச்சு சராசரி 20.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 3/6
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/0 4/0
மூலம்: ESPNcricinfo, 12 பெப்ரவரி 2020

பூஜா வஸ்திரகர் (Pooja Vastrakar பிறப்பு 25 செப்டம்பர் 1999) ஓர் இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட வீராங்கனை ஆவார். [1] [2] இவர் மத்தியப் பிரதேசம் மற்றும் மத்திய மண்டலத்திற்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடுகிறார். இவர் 4 முதல் தரத் துடுப்பாட்டம், 25 பட்டியல் அ மற்றும் 17 பெண்கள் இருபது -20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒடிசாவுக்கு எதிராக மார்ச் 9, 2013 அன்று நடந்த இருபதுக்கு -20 போட்டியில் அறிமுகமானார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

வஸ்திரகர் தனது காலனி அருகே அங்கு விளையாடும் சிறுவர்களுடன் துடுப்பாட்டம் விளையாடத் தொடங்கினார்  [3] பயிற்சியாளர் அசுதோஷ் ஸ்ரீவாஸ்தவா என்பவரது கீழ் பயிற்சியைத் தொடங்கினார்.

வஸ்த்ரகரின் தந்தை பிஎஸ் என் எல் இன் ஓய்வு பெற்ற ஊழியர் ஆவார். இவரது தாயார் பத்து வயதில் இறந்தார். இவருக்கு நான்கு சகோதரிகள் மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர், மேலும் ஏழு உடன்பிறப்புகளில் இவர் இளையவர் ஆவார். [4]

சர்வதேச துடுப்பாட்ட வாழ்க்கை[தொகு]

இவர் பிப்ரவரி 10, 2018 அன்று தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். [5] இவர் பிப்ரவரி 13, 2018 அன்று இதே அணிக்கு எதிராக பெண்கள் பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார். [6]

அக்டோபர் 2018 இல், மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற 2018 ஐசிசி மகளிர் உலக இருபதுக்கு -20 போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றார். [7] [8] 2020 ஜனவரியில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2020 ஐ.சி.சி மகளிர் இ 20 உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணியில் இடம் பெற்றார். [9]

சான்றுகள்[தொகு]

  1. "Pooja Vastrakar". ESPNcricinfo.
  2. "Player's profile". cricketarchive.com.
  3. I was picked by my coach in a boys training camp - Vastrakar, பார்க்கப்பட்ட நாள் 2018-12-15
  4. Annesha Ghosh. "Vastrakar: India's bold and resilient teenager". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 March 2018.
  5. "3rd ODI, ICC Women's Championship at Potchefstroom, Feb 10 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 பெப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  6. "1st T20I, India Women tour of South Africa at Potchefstroom, Feb 13 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 பெப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  7. "Indian Women's Team for ICC Women's World Twenty20 announced". Board of Control for Cricket in India. Archived from the original on 28 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 28 September 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "India Women bank on youth for WT20 campaign". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 28 September 2018.
  9. "Kaur, Mandhana, Verma part of full strength India squad for T20 World Cup". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 January 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஜா_வஸ்திரகர்&oldid=3772873" இலிருந்து மீள்விக்கப்பட்டது